Wednesday 13 June 2012

கொள்கை மாறவேண்டும்!

பூங்காற்றும் சுகமாய் இல்லை 
புன்னகையிலும் சுரத்தில்லை 
புது மலரிலும் வாசமில்லை 
பூலோகத்திலும் நாட்டமில்லை. 

அவரவர்க்கு ஆயிரம் எண்ணங்கள் 
அத்தனையும் அள்ளி எடுத்து 
ஆட்டுக்கல்லில் போட்டறைத்து 
அதில் முளைத்த ஓர் கருத்தை 
அழகாய் சொல்ல வந்தேனே 

பிச்சை எடுக்கும் பிழைப்பும் 
 கையேந்தும் அரசியலும் 
போலிச் சாமியார் பெயரிலே 
மதங்களை சாக்கடையாக்கும் 
மடங்களும் வேண்டாம். 
மனிதனைப் பிரித்தாளும் 
கோவில்களும் வேண்டாம். 
அடக்கு முறையில் ஆக்ரமித்த 
கடைகளை இல்லமுடைத்து,
மேம்பாலம் எனும் பெயரில் 
 பயணமும் வேண்டாம்
மனிதகுலம் வாழவைக்கும்,
இயற்கை வளம் அழித்து,
கட்டுகின்ற மாளிகையெதற்கு,
மனம் வேண்டும்குணம் வேண்டும்

நாடுவாழ வீடும் செழிக்க
நானிலம் போற்றும் நல்
திட்டங்கள் வேண்டும்.
இயற்கை காக்கின்ற
சட்டங்கள் வேண்டும்
மனிதநேயம் வளர்ந்திட
மனங்கள் மாறவேண்டும்
வேண்டியதைத் தொலைத்து,
வேண்டாததைக் கொடுக்கும்
கொள்கை மாறவேண்டும்
மாறமறுப்பின் மாற்றிட
நாம் இறங்கவேண்டும்!

33 comments:

  1. நாடுவாழ வீடும் செழிக்க
    நானிலம் போற்றும் நல்
    திட்டங்கள் வேண்டும்.
    இயற்கை காக்கின்ற
    சட்டங்கள் வேண்டும்
    மனிதநேயம் வளர்ந்திட
    மனங்கள் மாறவேண்டும்////

    கண்டிப்பாக.... நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள், சட்டங்கள் பெரிய அளவில் வகுக்க வேண்டும்....

    நாட்டு நலன் பற்றிய கவிதை. நல்லா இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகையும் தெளிவு படுத்தும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் சகோ . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  2. நாம் முன்னேறவும் நம்மால் நாடு முன்னேறவும் ஒவ்வொரு அடியையும் நாம்தான் எடுத்து வைக்க வேண்டும். அருமையான கருத்தைச் சொன்ன சூப்பரான கவிதைக்கா. (தளத்தோட லுக் இப்ப ரொம்ப சூப்பரா இருக்கு.)

    ReplyDelete
    Replies
    1. உற்சாகத்துடன் வருகை தந்து வாழ்த்திய சகோவிற்கு நன்றி .

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. நாடு வாழ, வீடு செழிக்க, நம் கொள்கை மாற வேண்டும். அரசியல்வாதிகளின் கொள்ளையும் மாற வேண்டும். நல்ல கருத்துள்ள கவிதை. அருமை தென்றல்.

    ReplyDelete
    Replies
    1. கொள்ளை ஒழிந்தாலே கொள்கை சிறக்கும் என்பதை சிறப்பாக சொன்னீங்க . நன்றிங்க .

      Delete
  5. இன்றைய காலத்துக்கு தேவையான கவிதை - வரிகளில் சூடு - பகிர்வுக்கும் படைப்புக்கும் வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  6. நாம் வாழ நாடு வாழவேண்டும்,
    நாம் உயர நல் திட்ங்கள் தேவை,
    இயற்கையை வாழவைப்போம்,
    அழகு கவிதை அதிலும் அழகு,
    தேசம் குறித்த வாஞ்சை-நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  7. அருமையான கவிதை

    தா.மா.ஓ 4

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  8. //மனிதநேயம் வளர்ந்திட
    மனங்கள் மாறவேண்டும்//
    சத்திய வாக்கு!

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  9. ம்ம்ம்
    அருமையாக கவி அனைத்து நற்சந்தனைகளையும் உள்ளடக்கியதாய் உள்ளது....

    சரி அக்கா tha. ma என்பதன் அர்த்தம் என்ன? எனக்கு புரியவில்லை........

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மணத்தில் ஓட்டு எண்ணிக்கை பா .

      Delete
  10. // மாறமறுப்பின் மாற்றிட
    நாம் இறங்கவேண்டும்!//

    அதை செயல்படுத்தும் காலம் வந்துவிட்டது.எல்லோரும் கூடி முயலுவோம்.

    வாழ்த்துக்கள் பொருள் செறிந்த கவிதைக்கு!

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  11. அவரவர்க்கு ஆயிரம் எண்ணங்கள்
    அத்தனையும் அள்ளி எடுத்து
    ஆட்டுக்கல்லில் போட்டறைத்து
    அதில் முளைத்த ஓர் கருத்தை
    அழகாய் சொல்ல வந்தேனே //

    அருமையாக அரைத்தெடுத்து
    சாறேடுத்துக் கொடுத்துள்ளீர்கள்
    தரமான பதிவுகளும் அதிகமான பதிவுகளும் கொடுக்கும்
    தங்கள் திறன் ஆச்சரியப்பட வைக்கிறது
    தொட்ர்ந்து தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயா எண்ணங்களைப் பகிர எனக்கு உங்களை எல்லாம் விட்டால் யாரும் இல்லையே . எனது ஆரம்பப் பதிவில் இருந்து எனை ஊக்கப் படுத்தும் தங்கள் தொடர் வருகை கண்டு மிகவும் மகிழ்கிறேன் /தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .

      Delete
  12. நாடுவாழ வீடும் செழிக்க
    நானிலம் போற்றும் நல்
    திட்டங்கள் வேண்டும்.
    இயற்கை காக்கின்ற
    சட்டங்கள் வேண்டும்
    மனிதநேயம் வளர்ந்திட
    மனங்கள் மாறவேண்டும்
    வேண்டியதைத் தொலைத்து,
    வேண்டாததைக் கொடுக்கும்
    கொள்கை மாறவேண்டும்
    மாறமறுப்பின் மாற்றிட
    நாம் இறங்கவேண்டும்!
    //////
    உங்களது ஆதங்கத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்! நீங்கள் கேட்டதெல்லாம் நடந்தால் இன்னும் நல்லாத்தான் இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  13. //நாடுவாழ வீடும் செழிக்க
    நானிலம் போற்றும் நல்
    திட்டங்கள் வேண்டும்.
    இயற்கை காக்கின்ற
    சட்டங்கள் வேண்டும்
    மனிதநேயம் வளர்ந்திட
    மனங்கள் மாறவேண்டும்
    வேண்டியதைத் தொலைத்து,
    வேண்டாததைக் கொடுக்கும்
    கொள்கை மாறவேண்டும்
    மாறமறுப்பின் மாற்றிட
    நாம் இறங்கவேண்டும்!//

    சரியாச் சொன்னீங்க.... நல்ல கவிதை... வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  14. காதலில் கசப்போ என்று ஆரம்ப வரிகளில் நினைத்த நான் அது தவறு சமுகம் செய்யும் செயலின் மீதுதான் கசப்பு என்று புரிந்து கொன்டேன். அந்த கசப்பை நீக்க மருந்தும் கொடுத்து இருக்கிறிர்கள் ஒரு சமுக நலன் கொண்ட டாக்டரைப் போல.....மிகவும் நல்ல கருத்தை சொல்லும் பதிவு இது

    ReplyDelete
  15. தங்கள் வருகையும் விரிவான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  16. நீங்கள் சொன்ன கொள்கை மாற்றங்கள்
    அனைத்தும் நடந்தால்....
    அருமையான கவிதை சசிகலா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  17. // வேண்டியதைத் தொலைத்து,
    வேண்டாததைக் கொடுக்கும்
    கொள்கை மாறவேண்டும்
    மாறமறுப்பின் மாற்றிட
    நாம் இறங்கவேண்டும்!//

    சரியாகச் சொன்னீர்கள்! புரியாத மண்டைகள் புரிந்து கொள்ளுமா...!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. வருகை கண்டு மிகவும் மகிழ்கிறேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .

      Delete