Friday 29 June 2012

நீளும் நம் பயணங்கள் !




கருவறையில் தொடங்கி
மலங்க மலங்க விழித்து
உணர்வு தேடி
உறவு தேடி !

தட்டுத் தடுமாறி
தவழ்ந்து நடை பழகி ...
கிள்ளை மொழி பேசி
பள்ளிப் பாடம் கற்று !

நட்புச் சோலையில்
பூவாய் மலர்ந்து
தென்றலாய் வீசி
தேவராகம் பாடி ...!

காதல் வலையில் சிக்கி
கனவுலக மீன்தொட்டிக்குள்
வாழ்வுதேடி முட்டிமோதி
காட்சிப்பொருளாய் கல்யாண
மாலை சூடி வாழ்வின்
நிஜமது விளங்குமுன்னே !

கையில் மழலையாய்
மலர்க்கொத்து மணம்வீச
அவர் வாழ்வே இவர் கனவாய்
நீளும் நம் பயணங்கள் !


31 comments:

  1. Replies
    1. முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி நட்பே .

      Delete
  2. வாழ்க்கை

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் சகோ .

      Delete
  3. ஒரு நெடிய பயணத்தை
    அழகாய் ஒரு கவிதைக்குள் கொடுத்து
    மதி மயங்கச் செய்துவிட்டீர்கள்
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் ஐயா. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .

      Delete
  4. நெடிய பயணம் உங்கள் கவிதைக்கும் அருமையாய் அடங்கி விட்டதே...

    நல்ல கவிதைப் பகிர்வுக்கு வாழ்த்துகள். த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. பயணத்தில் கிடைத்த நட்பெனும் நல முத்தே தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

      Delete
  5. முப்பது நாட்களுக்குள்
    அருமையான கவிதைகள் இருபது கொடுத்தல் என்பது
    ஒரு அசுர சாதனையே
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அனைவரது வருகையும் , உற்சாகம் தரும் பின்னூட்டங்களே எனக்கு ஆசிர்வாதமாய் .

      Delete
  6. வாழ்க்கைப் பயணம் பலருக்கு இப்படித்தான் என்ன ஏது என்ற புரிதல் இல்லாமலேயே ஓடி விடுகிறது. அழகாய் கவிதைக்குள் படம் பிடித்துக் காட்டினீர்கள் தென்றல்.

    முப்பது நாட்களுக்குள் இருபது நல்ல கவிதைகள் என்று ரமணி ஸார் எண்ணிச் சொல்லியிருக்கிறார். அதனால் இனி நீங்கள் தென்றல் இல்லை... புயல்! ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. தென்றல் எப்போது புயலானது வசந்தமே .

      Delete
  7. //வாழ்வின்
    நிஜமது விளங்குமுன்னே !

    கையில் மழலையாய்
    மலர்க்கொத்து மணம்வீச
    அவர் வாழ்வே இவர் கனவாய்
    நீளும் நம் பயணங்கள் !//

    அருமையான வரிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் உற்சாகம் தரும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி ஐயா .

      Delete
  8. வாழ்கையின்
    நீட பயணம் அழகிய கவிதையாய்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ .

      Delete
  9. // வாழ்வின்
    நிஜமது விளங்குமுன்னே !
    கையில் மழலையாய்
    மலர்க்கொத்து மணம்வீச //

    உண்மைதான்! வாழ்வின் உண்மையை உணர்வதற்குள், வாழ்க்கையே முடிந்து விடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் உற்சாகம் தரும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி ஐயா .

      Delete
  10. தரை வீழ்ந்த மீனின் துடிப்பை,
    தண்ணீர் மீன் உணர்வதில்லை.
    கண்ணீரும் புன்னகையும் வாழ்வில்,
    காலங்களின்கட்டாய மாறுதலாய்!
    உயிர் மூச்சின் கடைசி ஓட்டமாய்,
    தரை வீழ்ந்த மனமீன்கள்.....
    வாழ்வியலில் நினைவுவேறு,
    நிஜம்வேறு என்பதை அழகு
    தமிழில் கவிதையாய் தந்த
    கவியின் பயணம் தொடர
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தெளிவு படுத்தும் தங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் .

      Delete
  11. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .,

      Delete
  12. ஒஒஒஒஒஒஒஒஒஒ மிக அருமை அக்கா....

    ReplyDelete
  13. நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.வாழ்வில் நிஜமது விளங்கும் முன் நீள்கிற பயணங்கள் தொடர்கின்றன.

    ReplyDelete
  14. அவருக்கும் அப்படித்தான்
    நிஜமது விளங்குமுன்னே!

    ReplyDelete
  15. //நீளும் நம் பயணங்கள் !// முடிவில்லா முடிவைத் தேடும் நீளும் நம் பயணங்கள் !

    ReplyDelete
  16. சசி..என் வலை பூவிற்கு வாருங்கள் ..உங்களுக்கு விருது ஒன்று வழங்கப்படுகிறது..பெற்று கொள்ளுங்கள் :)

    ReplyDelete
  17. //நீளும் நம் பயணங்கள் //

    அருமையான கவிதை...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  18. பயணம் அருமை!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete