Wednesday 27 February 2013

சொத்தான கனவெனக்கு !


சத்தான பேச்சுனக்கு-அதுவே
சொத்தான கனவெனக்கு...

பித்தாக அலையவிட்டு-பூங்
கொத்தாக மனதைக் கொட்டு. 

சித்திரமே நீயெனக்கு-சொற்
சத்திரமாய் ஆனாய் எதற்கு ?

கற்றிடவே பல பாடம்-உன்
சொற்ச்சொடரோ பூந்தடாகம்.

அன்னமே உன் முகமானதடி
கன்னமோ கவி பேசுதடி.

காற்றசைத்த பூங்கொடியே
கதை சொல்லிடுதே உன்நடையே.

நாற்றாடி நிற்பதுபோல் மனம்
காற்றாடிப் போவதென்ன!

ஆத்தாடி என்மனதிலென்ன
அலையாட்டம் போடறியே!

வாடிநிக்கும் பயிருக்கு
வாழ்க்கை தர வருவாயா

வான்மழையா பொழிஞ்சி நீ
வாழத்தான் வைப்பாயா!

கோழியும் கூவியாச்சு
பொழுதும் விடிஞ்சாச்சி

வாராயோ மன்னவனே
வானத்து அரசனாக


17 comments:

  1. வானத்து அரசனான மழையும்
    வந்து சேரும் நாடு செழிக்க...

    நல்லதொரு முத்தான கனவுதான்
    நாட்டிற்கு சொத்து வந்து சேரத்தான்...

    மழையு மிங்கில்லை என்றால்
    பயிரும்தான் ஏதிங்கே நீயும் நானும்தான் ஏது...

    எல்லோரும் செழித்து வாழ மும்மாரி
    பெய்யவேண்டும் மழையே நீ யோசிக்காதே வந்துடு...

    மனிதர்களுக்கு மனிதர் விருந்தாளியை
    விரும்பாத ஆட்கள் கூட உன்னை வரவேற்கிறார்கள்..

    நல்லதொரு சசி கலாவின் கணவதுவும்
    நடந்தேறி உலகமே செழுமையாக இருக்கட்டுமே...

    எல்லோரும் காணும் கனவு வெளிநாடு செல்வது
    போலவும் காசுபணம் பெற்றது போலவும் இருக்கும்...

    அப்பேற்பட்ட உலகத்தில் வித்தியாசமான பொதுநலம்
    கருதி கனவு கண்ட சசி கலா வாழிய வாழியவே என்றும்..

    ReplyDelete
    Replies
    1. கற்றிடவே பல பாடம்-உன்
      சொற்ச்சொடரோ பூந்தடாகம்.

      தென்றலாய் வருடும் வரிகள்...

      Delete
  2. ''..கோழியும் கூவியாச்சு
    பொழுதும் விடிஞ்சாச்சி...

    nalla santhangal .
    anpana vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  3. ம்ம்ம்...அருமையான கனவு..விரைவில் மெய்படட்டும்..

    ReplyDelete
  4. மழையைப் பற்றிய உங்களின் ஏக்கம் புரிகிறது சீக்கிரம்வரும். ஆனந்தம் தரும்

    ReplyDelete
  5. ஒவ்வொரு வரிகளும் அருமையானவை, மிகவும் ரசிக்கவைக்கிறது உங்களின் ரசனையான வார்த்தைகள். திருக்குறளைப்போல் இரண்டு வரிகளில் எதைச் சொன்னாலும் மிகவும் அர்ப்புதமாகத்தான் இருக்கிறது. வாழ்த்துகள் பாராட்டுகள்.

    ReplyDelete
  6. அழகிய கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  7. முத்தான கவிதை இது. பாராட்டுக்கள்

    ReplyDelete
  8. அழகிய கவிதை நடை... படிக்க ரசிக்க எளிமையாக ரசிக்கும்டி இருக்கிறது

    ReplyDelete
  9. கவிதையும் படிச்சாச்சு... மனசும் நிறைஞ்சாச்சு. தென்றல் குளிர்விக்கிறது அழகிய கவிதையால!

    ReplyDelete
  10. நல்ல கவிதை.... கனவு மெய்ப்பட வேண்டும்! :)

    ReplyDelete
  11. எதிர்ப்பார்ப்போம்... நல்ல வரிகள் சகோதரி...

    ReplyDelete
  12. காத்திருப்பின் கொடுமை!
    மிக அருமை!

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரி..

    நலமா???


    என் அகம் கண்டு

    பொழிந்திட மனமில்லை எனினும்

    வாடிய என் புறம் கண்டு

    தூறிவிட்டேனும் செல்...


    மிகவும் அழகாக இருக்கிறது கவிதை

    ReplyDelete
  14. சொத்தான் கனவென்ற
    சத்தான கவிதை!!

    அருமை. வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  15. வாடிநிக்கும் பயிருக்கு
    வாழ்க்கை தர வருவாயா

    வான்மழையா பொழிஞ்சி நீ
    வாழத்தான் வைப்பாயா!//
    கவிதை மழை பொழிந்து மழை வேண்டி பாடிவிட்டீர்கள். அருமை.

    மழை பொழிஞ்சி வாடிய பயிர், வாடிய வயிறு எல்லாம் குளிரவேண்டும்.
    எல்லோர் வாழ்வும் மேம்பட மாரி மனம் இரங்க வேண்டும் மக்கள் சுற்றத்தை காக்க வேண்டும்.

    ReplyDelete