Monday 25 February 2013

காத்திருப்பு !


உச்சி வெயிலின் முன்பு
மலரின் காத்திருப்பாய்.

வறன்ட பூமியின் முன்
வானம் பார்த்த 
விவசாயின் காத்திருப்பாய்.

எலிப்பொறிக்கு முன்
பூனையின் காத்திருப்பாய்.

பனிப் போர்வையில்
மரத்தின் காத்திருப்பாய்.

ஜவுளிக்கடை வாசலில்
பொம்மையின் காத்திருப்பாய்.

இலவசங்களின் முன்பு
இன்றைய வறுமையை
தொலைத்து விடும் எண்ணத்தோடு
 நீளும் மக்களின் ..........

40 comments:

  1. நன்று !
    காத்திருப்பு...சுகமானதா ? எனது பதிவு
    http://eniyavaikooral.blogspot.com/2012/10/blog-post_13.html

    ReplyDelete
    Replies
    1. காத்திருப்பு பற்றிய விரிவான அலசல் தங்கள் தளம் சென்று பார்த்து வந்தேன். தங்கள் வருகைக்கு நன்றிங்க.

      Delete
  2. // இலவசங்களின் முன்பு
    இன்றைய வறுமையை
    தொலைத்து விடும் எண்ணத்தோடு //

    நன்றாகச் சொன்னீர்கள்.! ஒரு கட்டத்தில், கொடுக்க கஜானாவில் இல்லை என்ற நிலை வரும்போது இலவசங்கள் இல்லையென்று ஆகிவிடும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க. தெளிவுபடுத்தியமைக்கும் நன்றி.

      Delete
    2. //ஒரு கட்டத்தில், கொடுக்க கஜானாவில் இல்லை என்ற நிலை வரும்போது இலவசங்கள் இல்லையென்று ஆகிவிடும்.//

      டாஸ்மாக் இருக்கும் வரை கஜானா காலியாகாது.
      ஒரு நூறு ரூபாய் இலவசம் தரவேண்டும் என்றால்
      ஒரு க்வார்ட்டர்க்கு ஐம்பது ரூபாய் ஏற்றினால் போதும்.

      இந்த கணக்கு தெரிந்த வர்கள் அரசியல் வாதிகள்.

      சுப்பு தாத்தா

      Delete
    3. உண்மை தான் தங்கள் கருத்து நடைமுறைக்கு வரவேண்டும்.

      Delete
  3. காத்திருப்பிலும் காலங்களை தொலைத்து.. நல்ல நேரம் வருமுன்னு கடிகாரம் பார்த்து...! மூச்சு காற்று முடியும் வரை காத்திருப்பு...!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தாங்க காத்திருப்பின் அர்த்தம் தெரியாமலே இருக்கு சில காத்திருப்புகள். நன்றிங்க.

      Delete
  4. அருமையான சொல்லாடல்! சிறப்பான கவிதை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  6. இலவசங்களின் முன்பு
    இன்றைய வறுமையை
    தொலைத்து விடும் எண்ணத்தோடு
    நீளும் மக்களின் .........காத்திருப்பு ! அவலம் ..!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete

  7. இலவசங்களின் முன்பு
    இன்றைய வறுமையை
    தொலைத்து விடும் எண்ணத்தோடு
    நீளும் மக்களின் ..........

    மிகவும் வேதனையான காத்திருப்பு!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  8. வாதிலில் கோலத்தின் காத்திருப்பாய்
    எண்ண நினைவின் பார்த்திருப்பாய்
    கவியின் கவிதை வேர்த்திருப்பாய்
    நிம்மதி தேடியோர் பரிதவிப்பு!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. வாழ்க்கையே அப்படித்தான்... ...ம்... எதிர்ப்பார்ப்பு = காத்திருப்பு...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  10. வறன்ட பூமியின் முன்
    வானம் பார்த்த
    விவசாயின் காத்திருப்பாய்.//

    காத்திருப்பு தொடராமல் வானம் விவசாயிக்கு கருணைமழை பொழியவேண்டும்.
    கவிதை அருமை



    ReplyDelete
    Replies
    1. அது தான் என் வேண்டுதலும். தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  11. அழகிய வரிகள். அற்புத சிந்தனை. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    காத்திருப்புக்கள் காலந்தோறும் பூத்திடுதே புதுமலராய்
    ஏக்கமுடன் பெருமூச்சுவிடும் எத்தயோ நெஞ்சங்கள்....!

    ReplyDelete
    Replies
    1. ஏக்கப் பெருமூச்சு தொடராமல் இருக்கனும். தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  12. வறுமை என்றும் நம் இந்தியத் திருநாட்டில் வற்றாத
    ஜீவ நதியே.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  13. வறன்ட பூமியின் முன்
    வானம் பார்த்த
    விவசாயின் காத்திருப்பாய்.

    இந்த காத்திருப்பு பயனுள்ளது சிறப்பானது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  14. உண்மைதான் இப்படி காத்திருந்து பலசமயம் ஏமாந்து போகிறோம்! அழகிய கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  15. பாருங்க காத்திருப்பு பலவித இன்றைய சூழலில் விலையில்லாப் பெருளுக்கு காத்திருத்தல் வழக்கமாகிப் பொய் விட்டது உங்களின் இந்த இடுகை மக்களுக்கு ஒரு சிறந்த கருத்தை பதிஉ செய்கிறது இலவச பொருளுக்கு வேட்கை கொல்லோது மூடத்தனமானது என்பதுஉண்மையில் சிறப்பானது பாராட்டுகள்....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  16. காத்து இ(க)ருப்பு !

    1. பூமி மழைக்கு காத்திருப்பதுபோல !

    2. கூலித்தொழிலாளிகள் வெயிலுக்கு காத்திருப்பதுபோல !

    3. வங்கிகள் டெபாசிட் தொகைக்கு காத்திருப்பதுபோல !

    4. ஊழியர்கள் தன் சம்பளத்தை பெற 1’ ந் தேதியை எதிர்நோக்கி காத்திருப்பதுபோல !

    5. பயணிகள் பஸ்ஸுக்கு காத்திருப்பதுபோல !

    6. நோயாளிகள் டாக்டருக்கு காத்திருப்பதுபோல !

    7. வாலிபன் வெளிநாட்டு ” விசா “ க்கு காத்திருப்பதுபோல !

    8. மனைவி தன் வெளிநாட்டு கணவன் வருகைக்கு காத்திருப்பதுபோல !

    9. கட்டுரையாளர் வாசகர்களிடமிருந்து நல்ல பின்னூட்டங்களுக்கு காத்திருப்பதுபோல

    காத்திருந்தாலும் மக்களின் நிலை சிறப்பாக அமையட்டும் !

    நல்லதொரு கவிதை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. காத்திருப்பின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறதே...

      தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  17. காத்திருப்பு...சுமைபோல தோன்றினாலும் அது சுகமானதாகவே முடியும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  18. காத்திருப்புகள் பலவகை! சில நேரங்களில் காத்திருப்பது கூட நன்றாகத்தான் இருக்கிறது! :)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  19. காத்திருப்புக்குத்தான் எத்தனை காரணங்கள்!
    கவிதை ரொம்ப நன்றாக இருக்கிறது சசி!
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  20. உவமைகள் அனைத்தும் அருமை

    ReplyDelete