Sunday 17 February 2013

ஏ...புள்ள தென்றல் காத்து !



ஏ...புள்ள தென்றல் காத்து
உனப்பாத்து நாளாச்சி!
உன்னினைப்பில் களமேட்டில்
கண்ணுறக்கம் போச்சிதாயி!
வெள்ளரிப் பிஞ்சிருக்கு
மஞ்சளும் வெளஞ்சிரிச்சி
உனையிங்கே காணாம
மல்லிக்கொடி பட்டுப்போச்சி!
பேறுகால பேரச்சொல்லி
தாய்வீடு போனபிள்ள இங்க
பனங்காட்டு நரியைப்போல
பிரிவுவந்து படுத்துது தொல்ல!
பூன்னகப் பூவையணிந்து
நீகொடுத்த காந்தாரி
இனிப்பதை அள்ளித்தர
நான் வச்ச அயிரமீனும்
விரைக்குது ஏனோபுள்ள!
எப்படி நீ இருக்கே தாயி?
காத்திருக்கேன் வரவைஎண்ணி!
சித்திரையில் வரும்போது
சின்னத்தாய கூட்டிவரணும்!
அடியாத்தி மறந்துபோச்சி
அத்தைகிட்ட சொன்னதாசொல்லி
ஆட்டுகாலு சூப்புகுடிடீ!
உச்சியில நல்லெண்ண வச்சிநீயும்
உச்சிவெயில் போகாத
உனக்கது ஆவாது 
சொன்னது கேக்கவேணும்!
 நீராட ஆத்துக்கோடி
படித்துறையில் இறங்கும்போது
பாத்து காலவையிபுள்ள
பாசியிருக்கும் கவனிச்சுதாயி!
சந்தனக் கட்டச் செதுக்கி
தொட்டில்போட வச்சிருக்கேன்
தங்கமே உன்வரவையெண்ணி
ராப்பொழுதா பாத்திருக்கேன்
சீக்கிரமா வாடி புள்ள
மாமன் நான் காத்திருக்கேன்!
அச்சசசோ விட்டுப்போச்சி
இன்னுமொண்ணு சொல்லவிருக்கு....

37 comments:

  1. சொல்லச் சொல்லத் தீராத விஷயங்கள்... ஸ்வீட் நத்திங்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தாங்க சொல்லச் சொல்லத் தீராத செய்திகள் ஏராளம் உண்டு.நன்றிங்க.

      Delete
  2. கடைசியில மாமன் பேச்சாக்கிட்டீங்களே...
    கிராமத்துக்குப் போற பேத்திக்கிட்ட பாட்டி சொல்லுதோ எனஒ்னு நினைச்சுப் படிச்சேன் :)

    ReplyDelete
    Replies
    1. பாட்டி சொன்னாலும் நன்றாகத்தான் இருக்கும் நன்றிங்க.

      Delete
  3. அடடா!
    இத்தனை சொல்லியும் இன்னுமும் ஏதோ ஒண்ணு விட்டுப் போச்சா?

    மாமனநான் கா்திருக்கேன்! - எழுத்துப் பிழைகளை சரி செய்து விடுங்கள் ப்ளீஸ்! அழகான கவிதையில் கல்லாக வந்து கெடுக்கின்றன!

    நல்ல மாமா, நல்ல புள்ள!
    ரொம்பவும் ரசித்துப் படித்தேன்!
    பாராட்டுக்கள் சசி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க பார்க்க மறந்துவிட்டேன். தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  4. ஏக்க அழைப்பு பாடல் அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  5. //அச்சசசோ விட்டுப்போச்சி
    இன்னுமொண்ணு சொல்லவிருக்கு....//

    இது ஊருக்கு பெரிசு.

    ஏனடி தங்கப்புள்ள
    இந்த ஒரு மெத்தனமுனக்கு...
    பாவம்டி உங்க மாமனு அங்க
    மனசுடைஞ்சு கூப்பிடுது பாரு...

    இது அவள்;

    சும்மா கெட பெரிசு நீயும்
    எம்மாச்சி இந்த விலா மீனு
    புடிச்சுகினு ஊடு போனா
    குழம்பு வச்சு திங்கலாம் பாரு....

    மாமனுக்கு வேலையில்ல‌
    பாட்டு பாட இது நேரமில்ல‌
    சாமக்கோழி கத்துமுன்னே
    சுகமா ஊடு வந்துடுவேன்.
    சொல்லிப்போட்டு நீயும் போவேன்.


    சுப்பு ரத்தினம்.



    ReplyDelete
    Replies
    1. தகுந்த எசப்பாட்டு பாடி அசத்திவிட்டீர்கள் ஐயா. நன்றி.

      Delete
  6. தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
    அனைத்தும் ஒரே இணையத்தில்....
    www.tamilkadal.com

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றிங்க.

      Delete
  7. அழகிய நாட்டுப்புற கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. ஹ்ம்ம்... தென்றலையும் தீண்டும் கவிதை அன்பை தீண்டாதோ

    ReplyDelete
    Replies
    1. தீண்டாமல் இருக்குமோ ?

      Delete

  9. சொன்னதையெல்லாம்விட சொல்ல விட்டுப்போன செய்திக்காகவே ஏங்குது மனம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தாங்க என்னவாக இருக்கும் என்று நினைக்கவே தோன்றும். தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  10. ethaarthamaana arumaiyaana-
    kavithai..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  11. ஏ.. புள்ள.... ஏங்கும் நாட்டுப் புற பாடல் கிராமத்துக்கு எம்மையும் அழைத்துச் செல்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. கிராமத்தைப் பற்றிய நினைவு என்னிலிருந்து நீங்குவதேயில்லைங்க. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  12. அச்சசசோ விட்டுப்போச்சி
    இன்னுமொண்ணு சொல்லவிருக்கு....

    தென்றலே... அந்தக் கடைசி வரியையும் சொல்லி இருக்கலாம்.

    கடித கவிதை அருமை சசிகலா.
    வாழ்த்துக்கள். 3

    ReplyDelete
    Replies
    1. ஒரே கடிதத்தில் சொன்னால் அடுத்த கடிதத்தை எதிர்பார்க்க மாட்டாங்க சகோ.

      Delete
  13. இதுதானம்மா காதல்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  14. வெள்ளரிப் பிஞ்சிருக்கு
    மஞ்சளும் வெளஞ்சிரிச்சி

    தென்றலாய் வருடும் அழகான வரிகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  15. பாட்டும் எசப்பாட்டும் சூப்பர்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  16. ஓ.. மாமன் மனசு மல்லிகைப்பூ மனசு..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  17. நீராட ஆத்துக்கோடி
    படித்துறையில் இறங்கும்போது
    பாத்து காலவையிபுள்ள
    பாசியிருக்கும் கவனிச்சுதாயி!
    சந்தனக் கட்டச் செதுக்கி
    தொட்டில்போட வச்சிருக்கேன்
    தங்கமே உன்வரவையெண்ணி
    ராப்பொழுதா பாத்திருக்கேன்
    சீக்கிரமா வாடி புள்ள
    மாமன் நான் காத்திருக்கேன்!
    அச்சசசோ விட்டுப்போச்சி
    இன்னுமொண்ணு சொல்லவிருக்கு....//

    அருமையான மனைவி மேல் கரிசனத்துடன் பாடபட்ட பாடல்.
    சூரி சார் அழகாய் பாடி விட்டாரே அழகாய்! கிராமத்து பெரியவரும் மனைவியும் நல்ல கற்பனை.
    நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  18. ''..தங்கமே உன்வரவையெண்ணி

    ராப்பொழுதா பாத்திருக்கேன்

    சீக்கிரமா வாடி புள்ள

    மாமன் நான் காத்திருக்கேன்!..''
    nal vaalththu..
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  19. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete