Friday 14 December 2012

அன்புள்ள மனம் தனில்வாழும் !


பச்சைப் பசுந்தளிர் உதிர்வோப் பண்பாடு-தீய
இச்சையின் இம்சையில் அழுகியதோ இதயம்!
பகலை இரவாள்வதோப் பகைமை இனிமை
உறவையதடித்துப் புசித்து பசியாறுமோ நாளும்!

முயற்சியது மூலை முடங்கியழுதுக் கிடக்க-துயில்
முந்தானை விரித்தே மடமையாய் வந்தாண்டிடுதே!
நல்லதென்றக் கரு உருபெறாமல் போகுமோ-நன்மை
கருவழிந்த பிண்டமாகி மண்ணில்போயது சேருமோ!

இமையது மூடின் பொய் நினைவாகி வாழுமோ-கனவு
தினம் நம்பிக்கை விதைத்து கனவாகவேயது ஓயுமோ!
கற்றாழைச்செடி ரோஜா மலரையிங்கு ஈன்றிடுமோ
அறியுமுன் பொருளுரைத்தே மனமிங்கே வேகலாமோ!

கொண்டதெல்லாம் கொடுமதியோ பொய் வாழ்வில்
கண்டு நிற்பதெலாம் கண்ணீர்ப் புயல் மழைதானோ!
வடிவமெலாம் பனியாகி நிழலாகி உருமாறி போனதோ
உரத்துக்குமாகா நாயினங் கீழான மனித உடலின் வாழ்வு.

உலகாளுதல் கூடுமோ அறியாமை அழிமதிதான் வாழுமோ!
கொற்கை வேந்தனுமே வெட்டியான்கை எரிபொருளாய்
மண்பாண்டமுருகி வடிவங்கள் வேறுவேராய் வேறில்லை!
சேமித்தலொன்றுண் டதுவே நாளை நம் பெயர் சொல்லும்.

அன்புள்ள மனம் தனில்வாழும் அறமன்றி வேறேதுமில்லை!
அன்பைத்தேடி நாடி யோடின் அதுபுனிதம் அறிதல் மேன்மை!!

22 comments:

  1. //அன்பைத்தேடி நாடி யோடின் அதுபுனிதம் அறிதல் மேன்மை!!//
    கடைசி வரி என்றாலும் கவனத்தை ஈர்த்த வரி. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. // அன்பைத்தேடி நாடி யோடின் அதுபுனிதம் அறிதல் மேன்மை!!//

    இறுதியில் நச் !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. புரிந்து கொள்வதற்கு முயற்சிக்கிறேன்..
    நம்ம கொஞ்சம் டியூப் லைட்டுங்கோ

    ReplyDelete
  4. அன்புள்ள மனம் தனில்வாழும் அறமன்றி வேறேதுமில்லை!
    அன்பைத்தேடி நாடி யோடின் அதுபுனிதம் அறிதல் மேன்மை!!

    அருமையான கருத்து !...மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .

    ReplyDelete
  5. // அன்புள்ள மனம் தனில்வாழும் அறமன்றி வேறேதுமில்லை!//

    அவ்வற வாழ்வோருக்கெல்லாம் வீடு இறை தனியே இல்லை.

    சசிகலா அவர்களின் கவிதை
    இன்று முழு நிலவு.
    முழுவதும் அழகு.

    சுப்பு ரத்தினம்.
    @ சுப்பு தாத்தா.

    ReplyDelete
  6. தினம் நம்பிக்கை விதைத்து கனவாகவேயது ஓயுமோ!

    நயமான வரிகள்.
    கவிதை நன்று.

    ReplyDelete
  7. //அன்புள்ள மனம் தனில்வாழும் அறமன்றி வேறேதுமில்லை!
    அன்பைத்தேடி நாடி யோடின் அதுபுனிதம் அறிதல் மேன்மை!!//

    அருமை அருமை!

    ReplyDelete
  8. உண்மை ,\\அன்புள்ள மனம் தனில்வாழும் அறமன்றி வேறேதுமில்லை!
    அன்பைத்தேடி நாடி யோடின் அதுபுனிதம் அறிதல் மேன்மை!!//

    ReplyDelete
  9. தங்கள் வழக்கமான பாணியில் இருந்து சற்று வித்தியாசமாக உள்ளது கவிதை.நன்று.

    ReplyDelete
  10. //கொண்டதெல்லாம் கொடுமதியோ பொய் வாழ்வில்
    கண்டு நிற்பதெலாம் கண்ணீர்ப் புயல் மழைதானோ!

    யோசிக்க வைத்தது.

    ReplyDelete
  11. தமிழ் வரி வடிவில் மாற்றமிது முன்னேற்றமோ!.
    நன்று!
    வாழ்த்து!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை
    அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை
    - பாடல்: மருதகாசி ( படம்: பாசவலை)

    ReplyDelete
  13. தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இல்லாதபடியினால், உங்கள் பதிவுக்கு என்னால் ஓட்டு போட இயலவில்லை.

    ReplyDelete
  14. தங்கள் பாணியிலிருந்துவித்தியாசமான பாணியில் ஒரு அருமையான
    கவிதையைத் தந்தது அருமையாக உள்ளது
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை மீண்டும் இணைத்ததற்கு நன்றி! வழக்கமாக நான் உங்கள் பதிவிற்கு தமிழ்மணத்தில் இடும் வாக்கை பதிந்து விட்டேன்.

    ReplyDelete