Sunday 2 December 2012

செல்லக் கோபமும் ஏனோ ?


முல்லை அரும்பும்
முறைத்துக்கொண்டு
கொடியோடு நிற்குதடி
கொண்டையில் ஏறாமலே

கொஞ்சிப் பேசும் மழலையும்
கோபம் கொண்டே ஓடுவதேன்
எனைப் பாராமலே...

தங்கமேனி ஆடைபூண்டு
தளதளனு ஓட்டமிடும் நீரோடையும்
தயங்கி நின்னே தேங்குதடி
என் கால்கள் சேராமலே...

வானவில்லின் வண்ணம்பூசி
வளைந்து நெளிந்து ஆட்டமாடி
வசந்தக் காற்றை சுருட்டிப் போகுதே
பட்டாம்பூச்சியும் என் வாசல் வாராமலே..

தோப்போர குயிலிரண்டு
தோள் உரசி பேசிடுதே
தூது செல்ல அழைத்து நின்றேன்
ஒன்றோடொன்று துரத்தி ஓடிமறைந்ததெங்கோ ?
செவிக்கும்  கேட்காமலே...

தேடிப்போனதெல்லாம்
விட்டு ஓடிப்போவதேனோ ?
விரும்பி நாடி வந்த நீயும்
விளையாட்டாகவும் கோபம் கொண்டுவிடாதே ?

17 comments:

  1. செல்லக் கோபம் இல்லையென்றால் வாழ்வில் சுவரஸ்யம் அற்று விடும் சகோதரி

    ReplyDelete
  2. கிராமத்து மணம் வீசுகிறது கவிதையில்.....
    ரசித்தேன்

    ReplyDelete
  3. விரும்பி நாடி வந்த நீயும்
    விளையாட்டாகவும் கோபம் கொண்டுவிடாதே
    >>>
    சரிம்மா நாத்தனாரே! கோவம்லாம் போய்டுச்சு. உன் பேச்சு பழம் விட்டுட்டதா அண்ணா சொல்ல சொன்னாரு.

    ReplyDelete
  4. வானவில்லின் வண்ணம்பூசி
    வளைந்து நெளிந்து ஆட்டமாடி
    வசந்தக் காற்றை சுருட்டிப் போகுதே
    பட்டாம்பூச்சியும் என் வாசல் வாராமலே..

    ம்ம்ம்ம் அருமையான கற்பனை, ரசித்தேன்.

    ReplyDelete
  5. அழகான கவிதை.
    செல்லக்கோபமும் நல்லதுதான் அதன் பின்னே அளவிடமுடியாத அன்பும் இருக்கின்றதே..!!

    ReplyDelete
  6. உங்களின் கவிதை வரிகள் அற்புதம்.கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இருக்கும்

    ReplyDelete
  7. ஊடல் என்பது காதலின் கெளரவும் கவிதாயினி.

    ReplyDelete
  8. அடடே அழகா சொன்னீங்க செல்ல கோபம்

    ReplyDelete
  9. வானவில்லின் வண்ணம்பூசி
    வளைந்து நெளிந்து ஆட்டமாடி
    வசந்தக் காற்றை சுருட்டிப் போகுதே://அருமை

    ReplyDelete
  10. ஊடல் ஊடல்! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. விளையாட்டான கோபம் என்கிறபோதே இது தற்காலிகம் தான் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். கவிதை அருமை!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. mmmmm.....


    engo azhaiththu sentruvittathu...

    ReplyDelete
  13. செல்ல கோபம் இல்லையென்றால் எப்படி...? அருமையாக சொல்லி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. கவிதை அருமை சசிகலா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. நயமான வரிகள்..
    அழகுமிகு வார்த்தைகள்..
    பாராட்டுக்கள் தங்களுக்கு...

    ReplyDelete
  16. செல்ல கோபத்தை சொல்லும் வரிகள் ரசனைக்குரியது

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. அழகான் வரிகள்! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete