Tuesday 11 December 2012

இன்றைய பெற்றோரின் வளர்ப்பு முறை !



மாந்தளிரும் மான்விழியும்
ஆறாட்டம் ஓடுதிங்கே...
கிள்ளை மொழி பேசியே
கதிராட்டம் ஆடுதிங்கே!

அன்னத்தின் நடை நடந்து
அருகம்புல்லின் விரல் கொண்டு
ரோஜா இதழால் முத்தமிட்டு
ராசாவைப் போல் மனமாள
பிறந்தவன் நீ தானடா...

அகிலமாளப் பிறந்தவனே
ராஜாக்கள் கதை கேளடா
ஜான்சி ராணியும் ஆண்ட தேசமடா..
தாத்தா பாட்டி கதை கேளடா
தரணியையும் அன்பால்வெல்லடா!

மன்னராட்சி காலத்திலும்
மக்களாட்சி நடந்த போதும்
ஆடல் பாடல் கலை வளர்த்து
ஆன்மிகத்தில் மனதை செலுத்தி
வாழ்ந்து வென்றோமடாநாமே
வளர்ந்து நின்றோமடா!

ஒற்றுமையின் பலம் உணர்ந்து
ஒருமித்த கருத்துடனே மக்கள் வாழ
பாடுபடும் தேசம்தானடா நம்மை
வாழவைக்கும் மண்தானடா நம்
தாய் நாடு பொன்நாடடா!

கேள் கண்ணே கேளு நீயே
 வளர்த்து வைத்தப் பண்பு மாறி
வேஷமிட்டப் பொய் உலகம் நாடி
பின்னாலேப்போனோமடா நாமே
புழுதியாகி நின்றோமடா நம்மை
காக்கின்ற உறவேதடா இனியும்
பொய்மை ஆள்வது முறைதானடா?

ஆபாச நடனம் பயில எங்கோ
ஆலாப்ப் பறக்கும் கூட்டம்
ஒழுக்கமிங்கே ஒழுங்கீனமே கண்ணே
உண்மையிங்கே காணத உரலாகுதே!

தீயைத்தேடு்ம்  விட்டில்பூச்சி
வாழ்வுக்கு விளம்பரமேன் கனவுகள்
காண்பதுமேன் பெற்றோரே ...
சிதைவது நல் வாழ்வாகுமேயினி
நலம்வாழ வழிகாட்டுங்களேன்
கண்ணின் மணியாக வாழுங்களேன்!
நல்லொழுக்கம் சிந்தனையை ஊட்டி
அன்பாய்ச் சீராட்டுங்களேன் அறிவை
ஏர்பூட்டித் தாலாட்டுங்களேன் ஒளியை
பிள்ளை வாழ்வில் ஏற்றுங்களேன்!!

15 comments:

  1. அருமையான இந்த காலக்கட்டத்திற்கு
    ஏற்ற பயனுள்ள பதிவு பாராட்டுக்குரிய
    அழகான பகிர்வும் கூட கூடுதலான
    விஷயங்கள் நிறைந்த தெளிவான ஒன்று...

    தொலைக்காட்சி என்ற ஒன்றால்
    பயன்கள் இருக்கிறது என்பது என்னவோ
    உண்மையாக இருந்தாலும் அதனால்
    தொல்லையில்லை பிள்ளைகள் தொடர்ந்து
    பார்ப்பதனால் பாதிப்பு கண்களுக்கு...

    சொன்னால் புரியாத வயது அவங்களுக்கு
    காரணம் பெற்றோர்களும் அந்த பெட்டியை
    பார்க்காமல் இருப்பதில்லை அவர்கள்
    தவிர்த்தால் மட்டுமே பிள்ளைகளும்
    திருந்த வாய்ப்புகள் உண்டு....

    தேசத்தை பற்றிய எவ்வளவோ
    நம் வீரர்களின் கதைகளை சொன்னாலே
    போதும் பிள்ளைகளின் வீரம்
    பிஞ்சிலிருந்தே தழைத்து வளரும்...

    நாட்டை பற்றிய உயரிய சிந்தனையை
    சொல்லி சொல்லி வளர்த்தாலே
    போதும் நம் பிள்ளைகள் ஒவ்வொருவரும்
    நாட்டை காக்கும் உயரிய குடிமகன்களாக
    வருவார்கள் என்பது நிச்சயமான ஒன்று...

    இன்றைய அனைத்து பெற்றோர்களின்
    வளர்ப்பு முறை எப்படி இருக்கவேண்டும்
    என்பதை அப்பட்டமாக சொல்லி இங்கே
    எல்லோரின் பாராட்டையும் கணக்கில்லாமல்
    பெற்றிருக்கும் சசி கலா தங்களுக்கு நானும்
    என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களை
    நானும் ஒரு பெற்றோ(ன்)ர் என்பதால்
    சொல்லிக்கொள்வதில் பெரிதும் மகிழ்கின்றேன்..

    ReplyDelete
  2. புத்திமதி சொல்லும் புதுக் கவியா இது
    பாரதி கண்ட புதுமைப் பெண் தரும் புதுக் கவியா இது..
    அருமை அருமை

    ReplyDelete
  3. //ஆபாச நடனம் பயில எங்கோ
    ஆலாப்ப் பறக்கும் கூட்டம்
    ஒழுக்கமிங்கே ஒழுங்கீனமே கண்ணே
    உண்மையிங்கே காணத உரலாகுதே!//

    இது ஏக்கம்

    // நலம்வாழ வழிகாட்டுங்களேன்
    கண்ணின் மணியாக வாழுங்களேன்!//

    இது அந்த ஏக்கத்தின் தேக்கத்திலிருந்து வடிகாலாய் புறப்படும்
    நல்லாறு

    நற்சிந்தனை.
    நற்செய்தி.
    நல்லொழுக்கம்.
    நலம்.

    வாழ்க.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  4. சொல்லி திருந்துவதில்லை இவர்கள்! பட்டுதான் திருந்துகிறார்கள்! நல்ல கவிதை! நன்றி!

    ReplyDelete
  5. நல்ல கருத்துகளை, உங்களுடைய கவிதை மூலம் அழகாக உணர்த்தியது மிக மிக அருமை மிகவும் ரசித்து படித்தேன்.

    ReplyDelete
  6. நல்லதொரு விழிப்புணர்வூட்டும் கவிதை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. unmai sako...!


    nalla padaippu...

    ReplyDelete
  8. விட்டில்பூச்சி
    வாழ்வுக்கு விளம்பரமேன்////அருமை! நன்றி!

    ReplyDelete
  9. அட...கவிதை கருத்துள்ளது

    ReplyDelete
  10. நல்ல கருத்துள்ள கவிதை அருமை

    ReplyDelete
  11. கவிதை நல்லாருக்குங்க..

    ReplyDelete
  12. நல்ல கருத்துக்கள் சொல்லி குழந்தைகளை வளர்த்தால் குழந்தைகள் நல்ல முறையில் வளரும், குழந்தை வளர்ப்புக்கு தேவையான கவிதை... நல்ல படைப்பு சகோ

    ReplyDelete
  13. யாருக்காவது ஒருவரின் காதில் விழுந்தாலும் சந்தோஷமே சசி !

    ReplyDelete