Thursday, 20 December 2012

பழசு போய் புதுசு வந்தது !குடம் குடமா நீரெடுத்து
குளத்து தண்ணீ வத்திப்போச்சி
கூடை கூடையா மண்ணெடுத்து
குழியுந்தான் பெருசாச்சி...
மச்சானே சட்டிப் பானை
செய்தது போதும் மச்சான்
நாட்டில் நாகரீகப்  பெயராலே
மண்பாண்டமெலாம் மறந்தேபோச்சு

மண்ணைச் சுரண்டி சுரண்டி
மாடி வீடுந்தான் பெருகிப்போச்சு
சுரண்டல் இங்கு பெருகியதாலே
இயற்கை வளமும் தான் சுருங்கிப்போச்சு.

குலத்தொழிலும் அழிந்தொழிந்து
குடும்பமெலாம் சிதைந்து போச்சு
மண் அடுப்பு மறைந்து போக
கேஸ் அடுப்பு வெடிக்குது மாமா.

மாட்டு வண்டி பயணம் குறைய
மாசு பெருகி மருந்து கடை 
பெருகிப் போச்சு....
மச்சானே பழசு போய்
புதுசு வந்தா பரவாயில்ல
பாதிப்பு பெருகுதே என்ன சொல்ல.

16 comments:

 1. பழசை நேசிப்போம் !

  புதுமையை வரவேற்போம் !!

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. பழையன கழிதலும் புதியன புகுதலும் மாறி வரும் கால சூழ்நிலையில் சரி தான்

  இருந்தும் பழசுக்கு இருக்கும் மதிப்பையும் புதுசுக்கு இருக்கும் பாதிப்பையும் சுட்டி காட்டும் தங்கள் வரிகள் மிக சரியே

  ReplyDelete
 3. பழசாய் இருந்தாலும் அது சுகாதாரமாய் இருந்தது...
  புதுசு வந்தது இலகுவாக இருந்தாலும் அது சுகாதரத்துக்குக் கேடுதான் :)

  ReplyDelete
 4. பழசு போய்
  புதுசு வந்தா பரவாயில்ல
  பாதிப்பு பெருகுதே என்ன சொல்ல.

  காலத்தின் கோலம் !

  ReplyDelete
 5. பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயமே! புதியவை பாதிப்பு தராமல் இருக்குமானால் நல்லதே. ஆனால் இந்த மாறிவரும் சூழ்நிலையில் அது நடக்க வாய்ப்பில்லை. உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. அருமையா சொல்லிருக்கிங்க..

  பழசு போய் புதுசும் வந்தது! பாதிப்புகளும் கூடவே வர மருந்து கடைகளுக்கு மதிப்பு கூடியது. கலக்கல் தொடருங்கள்

  ReplyDelete
 7. பதிலுமிங்கே நானுஞ் சொல்லுறேன்
  பழசு போயி புதுசு வந்தா
  இப்படித்தான் இருக்கும் புள்ள
  சொகுசா இருக்கணுமுன்னு
  ஆசப்பட்டா ஆயுசு குறச்சுத்தான்
  நமக்கெல்லாம் கூழுக்கும் ஆச மீசைக்கும்
  ஆசயின்னா எப்படி புள்ள...

  காலமிங்கே வேகமாக ஓடுவதால்
  அதுக்கு ஈடு கொடுத்து நாமும்
  தான் விழுந்து எழுந்து ஓடனும் புள்ள
  மேடுன்னு ஒண்ணு இருந்தா
  புறவு பள்ளமுன்னு ஒண்ணு
  இருந்து தானே ஆகணும்
  அப்படித்தான் இந்த காலமும்...

  யார் சொல்லியும் ஒண்ணும்
  ஆகப்போறதில்ல இங்க..
  எல்லோரும் போவது போல
  நாமும் தான் முடிந்தவர
  இந்த பூமியில நல்லபடியா
  இருந்துவிட்டு போவோம் புள்ள...

  யோசிச்சு நின்னோமுன்னா
  குடிக்க கூட கஞ்சி நமக்கு
  கிடைக்காது ஆரம்பமுன்னு
  ஒண்ணு இருந்தா முடிவுன்னு
  ஒண்ணு இருக்குமுல்ல அந்த
  கடைசி கட்டத்துலதான் இப்ப நாம
  நின்னுக்கிட்டு இருக்கிறோம் புள்ள...

  இந்த உலகத்தின் கிளைமேக்ஸ்
  காட்சிதனை அப்படியே சொன்ன
  சசி கலா தங்களுக்கு என் பாராட்டுக்கள்...

  ReplyDelete
 8. அருமையான பகிர்வு! பழசு போய் புதுசு வந்தால் பரவாயில்லை! புதுப்புது நோய்களை இல்ல கொண்டு வருது! அருமையான படைப்பு!

  ReplyDelete
 9. இது தான் காலத்தின் கோலம்

  ReplyDelete
 10. பாதகமில்லாத வரை புதியன புகுதல் நல்லதே!ஆனால் நிலைமை அப்படியில்லையே!
  அருமை.

  ReplyDelete
 11. அருமையான கருத்துள்ள கவிதை சசிகலா.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. // மச்சானே பழசு போய்
  புதுசு வந்தா பரவாயில்ல
  பாதிப்பு பெருகுதே என்ன சொல்ல.//

  சரியாத் தான் கேட்டுருக்காங்க! ஆனால் மச்சானிடம் மட்டுமல்ல, யாரிடமும் பதில் இல்லை!

  ReplyDelete
 13. இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

  ReplyDelete
 14. மாறிட பழகணும்
  மாறும் உலகில்
  மாசு நீங்க
  மாற்று திட்டம் வேணும்

  விறகடுப்பு
  விலக்குமோ மாசை
  விலையில்லா நேரத்தை
  மிச்சமாக்குமோ?

  கும்பி வளர்க்க
  உடலும் உழைக்க
  ஒரு தொழில் வேண்டும்

  அதுவே
  குலத்தொழிலாயின்
  குடும்பம் சிறக்குமா?

  ReplyDelete
 15. பழயவை அழிய அழிய அதன் ஆசையும் தேவையும் அதிகமாகத் தெரிகிறது !

  ReplyDelete
 16. இதுவும் மாற்றமோ ? மீண்டும் மாறுமோ?

  ReplyDelete