Tuesday 4 December 2012

எது வெற்றி ...?


வெற்றி வெற்றி வெற்றியென
முழக்க ஒலி கேட்கிறது
வென்றது யார் எனப்பார்த்தால்
அண்ணன் தோற்றதற்கு
தம்பியின் கொக்கரிப்பு.

விழுந்ததும் ஒரே இரத்தம்
எழுந்ததும் அதே உதிரம்
உறவு தோற்றதனை
அவர் உள்ளம் அறியாமல்
பாராட்டும் சீராட்டும்
பாடை வரை அதன் பிறகு ?

வாழும் வாழ்வைத் தொலைத்துவிட்டு
வசந்தமென சூளுரைத்தால்
வாடிவிழும் நாளில்
வாய்க்கரிசி கிடைத்திடுமா ?
எண்ணல் நன்றென்பேன்!

15 comments:

  1. வாழும் வாழ்வைத் தொலைத்துவிட்டு
    வசந்தமென சூளுரைத்தால்
    வாடிவிழும் நாளில்
    வாய்க்கரிசி கிடைத்திடுமா ?
    எண்ணல் நன்றென்பேன்!


    இந்த வரிகள் ரொம்ப ரொம்ப அருமை மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. இன்றைய வாழ்வில் நாம் அன்றாடம் செய்திகளில் படிக்கும் நிகழ்வை மிக அருமையாய் வரிகளில் சாட்டையடி போல் வெளி கொணர்ந்திருகின்றீர்கள்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எண்ணல் நன்றென்பேன்! என சொல்ல நீங்கள் எடுத்துக் கொண்ட வார்த்தைகள் மிகவும் கூர்மை....

    ReplyDelete
  4. கவிதை அருமை சகோ

    ReplyDelete
  5. வாழும் வாழ்வைத் தொலைத்துவிட்டு
    வாய்க்கரிசி கிடைத்திடுமா //
    மிகஅருமை

    ReplyDelete
  6. //வெற்றி வெற்றி வெற்றியென
    முழக்க ஒலி கேட்கிறது
    வென்றது யார் எனப்பார்த்தால்
    அண்ணன் தோற்றதற்கு
    தம்பியின் கொக்கரிப்பு.//
    அன்றிலிருந்து இன்றுவரை நடப்பதுதான் இது. என்று இந்த உறவுப்போர் நிற்குமோ? அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அண்ணன் தம்பி பகை என்பது ஒருவரையொருவர் கொன்று தீர்க்கும் அளவிற்குப் போய் விடுகிறதே!
    நல்லதொரு கவிதை!

    ReplyDelete
  8. இன்றைய உலகில் இரத்த பந்தம் ஏது...
    பண பந்தம் புகழ் பந்தம் இருந்தால் போதும்

    நல்ல வரிகள்

    ReplyDelete
  9. எண்ணல் நன்றென்பேன்! ஆம்! நானும் எண்ணல் நன்றென்பேன்!

    ReplyDelete
  10. அழகான வரிகள் மிகவும் ரசித்தேன்

    ReplyDelete
  11. அருமையான வரிகள்! இன்று பாசத்தை விட பணமும் பதவியும் தான் பெரிதாக கருதுகிறார்கள்! அவர்களுக்கு சாட்டையடி கவிதை!

    ReplyDelete

  12. வாழ்வியலின் ஒரு பகுதியை எடுத்துரைக்கும் உங்கள் எண்ணம் நானும் நன்றென்பேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. நியாயமான ஆதங்கம் தான்! அடித்து வீழ்த்துவதே வெற்றி என்ற மனோநிலை ஆபத்தானதுதான்!

    ReplyDelete
  14. ஒருவரையொருவர் விழுத்தி ஏறி நடக்கும் உலகமாய் இப்போது சசி.இதில் உறவுகளும் அப்படியேதான் !

    ReplyDelete
  15. வாழும் வாழ்வைத் தொலைத்துவிட்டு
    வசந்தமென சூளுரைத்தால்
    வாடிவிழும் நாளில்
    வாய்க்கரிசி கிடைத்திடுமா ?
    எண்ணல் நன்றென்பேன்!

    சாட்டையடி.
    அருமையான கவிதை

    ReplyDelete