Thursday 6 December 2012

தோழி ஒருத்தி வேண்டும்..!



பார்த்துப் பார்த்து சிரித்திட்டான்
பார்க்கும் இடமெலாம் முகம் பதித்தான்
சிந்தை முழுதும் அவன் நினைவிருந்தும்
சிரித்துப் பேச மறந்தேனடி தோழி...

விழியசைவில் எனையழைத்தே
மடியினில் அமர்த்திட்டான்
'செல்லமே' என்றழைத்தான்
செவிகுளிர பாட்டென்று நினைத்தே-நானும்
அடுத்த வரி எனக்கேட்டேன்
அந்தோ பொத்தென கீழே தள்ளி
பறந்தோடிப் போனானடி..தோழி

அவனுள் விழுந்ததினால் வலிக்குதடி
சோற்றுப் பருக்கையோடு நானும்
சோதிடக் கட்டம் வரைகிறேனடி தோழி...
மாவரைக்கப்போனாலும் உரலிடுக்கில்
அவனுருவம் தெரியுதடி..தோழி

அவனிடத்தில்
என் அறியாமை கூறாயோ..?
பாட்டெல்லாம் தேவையில்லை
அவனைப் பார்த்திருந்தால் போதுமடி ..தோழி
பக்கம் வர சொல்வாயோ..?

17 comments:

  1. ஐயோ! தோழி பாவம்! இந்த மாதிரி ### பொலம்பினாக்கா அப்பறமா கடுப்பாகிடப் போராங்க! ஆனாலும் நயமான ஞாயமான புலம்பல்தான் சகோ!

    ReplyDelete
  2. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ..கலக்கல்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. சிறப்பான கவிதை! தூதுவிடும் அழகு மிகச் சிறப்பு!

    ReplyDelete
  4. மாவரைக்கப்போனாலும் உரலிடுக்கில்
    அவனுருவம் தெரியுதடி..தோழி

    ReplyDelete
  5. //மாவரைக்கப்போனாலும் உரலிடுக்கில்
    அவனுருவம் தெரியுதடி..தோழி//

    இப்படியெல்லாம் இருந்தால் சிரமம்தான்!
    அருமை

    ReplyDelete
  6. மாவரைக்கப்போனாலும் உரலிடுக்கில்
    அவனுருவம் தெரியுதடி..தோழி....

    ஐயோ... சசிகலா... இப்படியா உன்னவரை நசுக்குவ? பாவம்பா.
    கவலைப்படாதே சசி. நான் போய் துாது சொல்கிறேன்.

    ReplyDelete
  7. இரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
  8. //அவனுள் விழுந்ததினால் வலிக்குதடி
    சோற்றுப் பருக்கையோடு நானும்
    சோதிடக் கட்டம் வரைகிறேனடி தோழி..///

    மிக அருமையான வரிகள்...பாராட்டுக்கள்

    ReplyDelete
  9. தோழியை தூதுவிட அழைக்காதீர்கள் அப்புறம் தோழி அவனை உங்களிடம் இருந்து பறித்து சென்றுவிடுவாள்.


    தோழிவிடு தூது என்பது அந்தகாலம் இப்போது தோழி இடத்தை பேஸ்புக் எடுத்துக் கொண்டது எனவே அதை உபயோகித்து தூதுவிட்டு பாருங்கள்

    ReplyDelete
  10. அருமையான கவிதையாடல்...

    ReplyDelete
  11. பித்துப் பிடித்தால்
    சிட்டு குருவியும்
    சிலிர்ந்தோடும் ஓடையும்
    திசை தெரியா மேகமும்
    தோழியாகதான் தெரியும்

    ReplyDelete
  12. கவிதை சூப்பர்.காதல் தவிப்பை அழகாய் உரைக்கிறது.

    ReplyDelete
  13. நல்லதொரு தூது!

    ReplyDelete
  14. அன்பின் சசிகலா - தோழி விடு தூது - கவிதை அருமை - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete