Monday 3 December 2012

விட்டொழிய மனமுமில்ல..!



குலுக்கிப்போட்டச் சோழியாட்டம்
குதித்தோடிப் போவதேன்
கொம்புத் தேனே..

விரட்டிப் பிடிக்க
எண்ணமில்லை
விட்டொழிய மனமுமில்ல..

உன் முன்னே
வண்டாட்டம் நிக்குரேன்டி
முன்னே வாடி சின்னப்புள்ள..

கன்னம் தொட்டுப் பேசப்போறேன்
கதவடைத்து காத்தா உரசப்போறேன்
உரக்கக் கூவி ஊர அழைத்திடாதே...
ஓடிப்போகவும் எண்ணமிடாதே..

சொக்கத் தங்கமென உன் உடலா?
சொர்ணமென்ன உன் பெயரா ?
சொக்க வைக்கும் உன்னழகே-வா
ஜோடியா தான் சேர்ந்திடுவோம் பேரழகே.

மவுனமென்ன மான்விழியே
மயங்கி நிற்பதென்ன தேன்மொழியே?
பதிலெனக்கும் சொல்லேன்டி
இல்ல பார்வையாலே கொல்லேன்டி.

24 comments:

  1. எளிமையான சொற்களைக் கையாண்டு
    படைத்த அருமையான காதல் கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  2. பதிலேதும் சொல்லாத வார்த்தையை விட
    எனக்கொன்றுவிடு என்பது மேலாக தெரியுது
    அழகாக சொன்னீர்கள் அன்பினை வெளிக்காட்டி
    இதுபோல கொஞ்சி பேச ஆளிருந்துவிட்டால்
    சொர்க்கம் என்பது இதைவிட வேறேதுமில்லை...

    தெளிவான பதிவு..அழகான கொஞ்சல்..கெஞ்சல்..
    பாராட்டுக்கள் தங்களுக்கு சசி கலா..வளருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் விரிவான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. மெட்டும் போட்டால் பிரபல பாடலாக மாறிடும் :)

    ReplyDelete
    Replies
    1. வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  4. ayyayo.....

    ippothaan naan-
    vera vithamaa ezhuthuren....


    intha kavithai ennai thiruppidumo....

    arumai sako...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹாஹ அப்படியா மகிழ்ச்சிங்க.

      Delete
  5. வணக்கம் சகோதரி...
    மானே தேனே என கலைவாணர் அவர்கள்
    பாடிய பாடலொன்று நினைவுக்கு வருகிறது...
    அழகான உருவாக்கம்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் அண்ணா. நன்றி அண்ணா.

      Delete

  6. // கன்னம் தொட்டுப் பேசப்போறேன்
    கதவடைத்து காத்தா உரசப்போறேன்
    உரக்கக் கூவி ஊர அழைத்திடாதே...
    ஓடிப்போகவும் எண்ணமிடாதே..//

    கிராமியக் காதல் மணக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  7. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. முதல் வரியிலேயே மயக்குகிறது.
    சின்னப்புள்ளே நிக்குறேண்டி போன்ற பேச்சு வழக்குச் சொற்களுக்கு இடையே அழைத்திடாதே எண்ணமிடாதே போன்ற சொற்களைத் தவிர்த்திருக்கலாமோ?

    ஒரு இசையமைப்பாளரின் கையில் நல்ல மெட்டாகும் சாத்தியம் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க திருத்திக்கொள்கிறேன். தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்.

      Delete
  9. ரசிக்கவைக்கும் பாடல்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்.நன்றிங்க.

      Delete
  10. பதிலை சொல்ல முடிஞ்சா பரிதவிக்க விடுவாளா? எக்கம்மான கவிதை

    ReplyDelete
  11. காதல் ரசம் சொட்டுதே!
    த.ம.7

    ReplyDelete
  12. "குலுக்கிப்போட்டச் சோழியாட்டம்....." அழகான ஆரம்பம்.

    ReplyDelete
  13. வர வர இந்த பக்கத்துல இளமை பொங்குது .. நாங்கெல்லாம் கடைய சாத்திட்டு வேண்டியதுதான் அக்கா கவிதை கலக்கல்

    ReplyDelete
  14. காதல் பாடல் அருமை சசிகலா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete