Monday 31 December 2012

துளித் துளியாய் !



எத்தனை எத்தனை
நாட்கள் மாதங்களாகி
மாதங்கள் வருடங்களாக..
கழிந்தாலும்..
உனக்காக சேமித்து வைத்த
சொல்லப்படாத வார்த்தைகள்
யுகங்கள் தாண்டியும்
வெளி வராத கவிதை
தொகுப்பாக.

புதிதாய் வந்த எதுவும்
நிரந்தரமும் அல்ல
பழையன எல்லாம்
அழிந்து விடுவதுமல்ல
நினைவலைகளில்
முன்னும் பின்னுமாய்
கிழிபடும் நாட்காட்டியாய்.

கட்டி வச்ச மாடாட்டம்
மனசு உன்னையே சுத்தி சுத்தி
வருதய்யா...
மண்ணில் புதைஞ்ச
முளைக்குச்சியாட்டம்
நெனப்பு பேயாட்டம்
ஆடுதய்யா...

உன் கோபத்தை மட்டுமல்ல
மவுனத்தையும் ரசிக்கத்
தெரிந்தவள் நான்....

அவசர அவசரமாய்
கிளம்பிச்  செல்லும் போது
எதற்கு அந்த பார்வை வேறு ?

கன்னம் குழி விழ
சிரிக்க வைத்து
களவாடிப் போகிறான்
வெட்கத்தை.


வாழ்த்தொன்றை சொல்லிவிடவே
வரிசைப்படுத்த முயன்று தோற்கிறேன்...
வார்த்தைகளை.

18 comments:

  1. அகரநாளின்று 2013 இன்
    சிகரநாளிதுவே!
    பகர வாழ்த்தேந்தி இதயம்
    பாடும் கானங்களே!
    ஒளிர வாழுங்களேன் மனம்
    மகிழப் பாடுங்களேன்!
    உதிரக் கூடுங்களேன் பகை
    யுதிர வாழ்த்துங்களேன்!
    பகிரப் பழகுங்களேன் பண்பு
    இசைபாட பாடுங்களேன்!
    அன்புள்ளம் கொள்ளுங்களேன்
    நானதை வெல்லுங்களேன்!
    கரம் சிரம் தாழ்த்துங்களேன் நீதி
    வெல்ல ஓடுங்களேன்!

    ReplyDelete
  2. அருமை

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்று
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. அழகான வாழ்த்து தான்...
    சொல்லாத வார்த்தைக்கு
    தானே எப்போதுமே மதிப்பு
    அதிகம் எங்குமே இங்குமே...

    மண்ணில் புதைந்த முளைக்குச்சி
    ஆழமான அழகான மண்வாசனை
    ஒட்டி இருக்கும் மணமான வார்த்தை
    அழகான ஒப்பீடு ஒத்துக்கொள்கிறேன்...

    மனதுக்கு பிடித்தவனால் மட்டும் தானே
    உங்களிடம் இதுபோன்ற சாதனைகளை
    நிகழ்த்தி காட்டமுடியும் அளவில்லா
    மகிழ்ச்சி தானே இதைவிட இன்பம் வேறென்ன...

    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சசி கலா
    இதுவும் ஓர் இனம்புரியாத மகிழ்வுதானே
    வாழ்த்துவதில் தோற்பது என்பது வெற்றிதானே
    இது வாழ்த்தும் நபர்களுக்கு மட்டுமே தெரிந்தவொன்று...

    ReplyDelete
  5. வாழ்த்தொன்றை சொல்லிவிடவே
    வரிசைப்படுத்த முயன்று .......

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.........

    ReplyDelete
  6. பறக்கட்டும் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப்
    பிறக்கட்டும் புத்தம்புது சிந்தனைகள் உயிரெடுத்துத்
    திறக்கட்டும் தினம் ஒரு புதிய பாதை தடை தகர்த்துச்
    சிறக்கட்டும் உங்கள் பதிவுகள் தகதகத்து!

    அனைவருக்கும் சென்னை பித்தனின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!


    ReplyDelete
  7. கவிதை அழகு..

    உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. கடைசி மூன்று வரிகள்! அருமை! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. களவாடிச் செல்லப்பட்ட வெட்கமும்,சொல்ல முயன்று தோற்றுப்போன வார்த்தைகளும் சுற்றிச்சுற்றி வந்த மனதும் கொள்ளட்டும் வெற்றி 2013 ல்/

    ReplyDelete
  11. வாழ்த்தொன்றை சொல்லிவிடவே
    வரிசைப்படுத்த முயன்று ...

    //நல்வாழ்த்துக்கள்!//

    ReplyDelete

  12. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
  13. கவிதை அழகு....
    //
    கட்டி வச்ச மாடாட்டம்
    மனசு உன்னையே சுத்தி சுத்தி
    வருதய்யா...
    மண்ணில் புதைஞ்ச
    முளைக்குச்சியாட்டம்
    நெனப்பு பேயாட்டம்
    ஆடுதய்யா...//

    ஏனோ தெரியவில்லைகவிதை நடையில் மேற்குறித்த வரிகள் உங்கள் கவிதையிலிருந்து விலகி நிற்பதாய் என்று எனக்குத் தோன்றுகிறது.... உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்... மவுனம் என்பதை மௌனம் என்று திருத்திக் கொள்ளலாம் ... மற்றப்படி உங்கள் கவிதை நன்றாகவே இருக்கிறது... நேரம் இருந்தால் எனது வலைப்பூவை ஒருதடவை பார்த்தால் மகிழ்ச்சியடைவேன்... www.moongilvanam.blogspot.com

    ReplyDelete
  14. என்ன சொல்வது சகோதரி, கிராமியப் பாடல் போன்று ஒரு தோற்றத்தை தருகிறது.
    என்னத் தான் இருந்தாலும், கிராமிய மணத்திற்கு ஒரு தனி சிறப்பு இருக்கிறது. நானும் பல முறை முயற்சிக்கிறேன். முடியவில்லை.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. களவாடிப் போகிறான் வெட்கத்தை. அருமை தென்றல். உங்களுக்கும உங்கள் வீட்டில் எல்லோருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete