Wednesday 31 October 2012

நீலமிங்கே புயலாய் !


கடந்ததைத் நின்று திரும்பிப்பார்த்தேன்
மனதில் புயலுக்குப்பின் அமைதியாய்!
வானைநோக்கின கண்கள் காணோம்
வான் நிறமிழந்து கரும்போர்வையுடன்!
நீலமெங்கே தேடினேன் அதுபுயலாய்..
ஆர்ப்பரித்தன ஆழ்கடலும் அலையாடி
வானுயர்ந்தன அலைகளும் கர்ச்சித்தே!

திசையின்றி சுழன்றாடும் சூறைக்காற்று
இசையின்றி பேரிரைச்சல் தாண்டவமாய்!
அசையாத அடையாறு ஆலமரமுமிங்கே
அசைந்தே சாய்கிறது விழுதுகளும்சேர்ந்தே!
திருக்களின் மடிமீது மழைநீரின் பெருமச்சம்
திருவானமியூர் மீளுமா மனதிலோரச்சம்!

வரப்பென்றே வரைந்த மணல்தடுப்பைத்தாண்டி
தலை மிதித்தே ஏறிவரும் உப்புநீரில் துடித்தே
வீட்டில்விழும் மீன்களே காட்சிப்பொருளாய்
பாய்சுருட்ட நேரமின்றி உயிர்க்காய் ஓட்டம்!

நீண்ட சமவெளி மெரினா கடற்கரைதனிலே
ஏழாம் எச்சரிக்கை புயல் கரைகடக்குதென்றே!
மாண்டார் எத்தனையதில் மீண்டாரெத்தனை
ஊடகங்களின் உறுதியிலாதகவல் பயமுறுத்தல்!

நேற்றைய தாணேபுயல் இன்று நினைவிலில்லை
இன்றைய நீலப்புயலும் வந்துதனவழி போகும்
நடந்தவைகள் நினைவாகும் நடப்பதுமப்படியே
நாளையிருப்போர் மீண்டும் இயந்திரமாய்!

அமெரிக்கா வல்லரசு இயற்கையின்முன் கதியிதுவே
அனைவர்க்குமிது பொது-அழிவும் வாழ்வும்!

41 comments:

  1. நல்ல கவிதை...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2012/11/4.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அங்கு புயலின் தாக்கம் எந்த அளவில் இருந்தது.

      Delete
  2. //நேற்றைய தாணேபுயல் இன்று நினைவிலில்லை
    இன்றைய நீலப்புயலும் வந்துதனவழி போகும்
    நடந்தவைகள் நினைவாகும் நடப்பதுமப்படியே
    நாளையிருப்போர் மீண்டும் இயந்திரமாய்!//

    நேற்றும் இன்றும் நாளையும் நாம் எப்போதும் எந்திர கதியாய் இருக்கின்றோம் என்றே சொல்லிவிட்ட கவிதை.



    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. புயலைப் பற்றிய தென்றலின் கவிதை நன்று!

    ReplyDelete
    Replies
    1. புயலின் சேதத்தை தங்கள் சேட்டை வரியிலும் காண ஆவல். ஹஹ

      Delete
  4. Replies
    1. நீண்ட நாளாக காணமல் போன தங்களை புயல் அழைத்து வந்ததோ ?

      Delete
  5. புயல் பற்றிய புயல் கவிதை நன்று!

    ReplyDelete
    Replies
    1. ஐயா தங்கள் நலம் அறிய ஆவல்.

      Delete
  6. நீலப்புயலின் பிடியில் உதித்தகவிதை நினைவுகளில் நிலைத்து நிற்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ அங்கு எப்படியிருக்கு நீலத்தாக்குதல் ?

      Delete
  7. வரப்பென்றே வரைந்த மணல்தடுப்பைத்தாண்டி
    தலை மிதித்தே ஏறிவரும் உப்புநீரில் துடித்தே
    வீட்டில்விழும் மீன்களே காட்சிப்பொருளாய்
    பாய்சுருட்ட நேரமின்றி உயிர்க்காய் ஓட்டம்!

    நினைவுகள் புயலாய் தென்றலில்... அருமை சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ அங்கு எப்படியிருக்கு நீலத்தாக்குதல் ?

      Delete
  8. இயற்கையை மிஞ்சுவார் யாருமில்லை
    என்பதை மனிதன் மறந்துவிடக்கூடாது
    என்பதற்காகவே இப்படி வருடத்துக்கு
    ஒரு முறையாவது புது புது பெயரை
    தாங்கி புயலென்ற உருவில் எல்லோருக்கும்
    நினைவு படுத்தி செல்கிறது என்றே நம்மில்
    அமைதியான மக்கள் சிலர் சொல்கிறார்களாம்...

    நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் அதிகமாக
    அதிகமாக இப்படி இயற்கையின் சீற்றமும்
    அதிகமாவதில் ஆச்சரியமில்லை என்றே
    இயற்கை ஆர்வலர்களும் அருமையாகவே
    சொல்லியும் வருகிறார்கள் வேறுவிதமாக...

    சசி கலா தாங்களும் இந்த இயற்கையின்
    கோபத்தை அழகாகவே படம்பிடித்து
    காட்டியது போல தெளிவாக கூறியுள்ளீர்கள்
    அதுவும் தங்களின் இயல்பான கவியை
    தாங்கி வந்ததால் புயலும் கூட தென்றலாய்
    மாறி எல்லோரையும் வருடி சென்றது....

    பாராட்டுக்கள் சசி கலா தங்களுக்கு...

    ReplyDelete
    Replies
    1. நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் அதிகமாக
      அதிகமாக இப்படி இயற்கையின் சீற்றமும்
      அதிகமாவதில் ஆச்சரியமில்லை...

      தெளிவுபடுத்தும் வரிகள் நன்றிங்க.

      Delete
  9. // அனைவர்க்குமிது பொது-அழிவும் வாழ்வும்!//
    இயற்கை சீற்றம் கூட யாருக்கும் ஒர வஞ்சனை செய்வதில்லை என்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  10. Replies
    1. காட்சிகளை இப்படித்தானே பகிர முடிகிறது.

      Delete
  11. அருமையான கவிதை நீலம் நீலம் என்கிறாங்க ஒரு இடத்திலயும் நீலத்தைக் காணஏ இல்லீங்க.... :)
    வாழ்த்துக்கள் வலைச்சர அறிமுகத்துக்கு

    ReplyDelete
    Replies
    1. அதனால தான் நீலம் என்று பெயராம் (சும்மா)

      Delete
  12. கடந்ததைத் நின்று திரும்பிப்பார்த்தேன்
    மனதில் புயலுக்குப்பின் அமைதியாய்!

    அருமையான கையாடல் நன்று

    ReplyDelete
  13. //நேற்றைய தாணேபுயல் இன்று நினைவிலில்லை
    இன்றைய நீலப்புயலும் வந்துதனவழி போகும்
    நடந்தவைகள் நினைவாகும் நடப்பதுமப்படியே
    நாளையிருப்போர் மீண்டும் இயந்திரமாய்!

    அமெரிக்கா வல்லரசு இயற்கையின்முன் கதியிதுவே
    அனைவர்க்குமிது பொது-அழிவும் வாழ்வும்!//

    தாங்கள் எழுதிய இந்த வரிகளைக் காணும் பொழுது,

    ஆண்டொருப் புதுப் பெயரில்
    மீண்டொதொருப் புதுப் புயலால்
    மாண்டவர் எண்ணிக்கையை
    கண்ட பின்பும் ஆள்பவர்கள் - துயர்
    வருமுன் காப்பதற்கு
    வழியேதும் செய்யாமல்
    விழிமூடி தூங்குகிறார்
    வல்லரசுக் கனவினிலே!

    என்று தான் கூறத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. அற்புதமான வரிகள் நன்றிங்க.

      Delete
  14. அலையலையாய் கவிதைகள்
    அனைத்தும் தேன்தமிழாய்!
    ஆர்ப்பரித்த அலைகடலும்
    ஆரவாரமாய் காற்றலையும்
    இரவெல்லாம் துடித்திருந்த
    இதயங்களின் அலங்களும்
    ஈரமில்லாப் புயல்போனறு
    ஈகையில்லா எண்ணமுமே
    உள்ளங்கள் மறந்துவிடும்
    உறவுகள் பிரிந்தாலும்
    ஊனங்களாய் காப்பாரும்
    ஊமையாய் பார்வையாளர்
    எங்கோ சரியில்லை யினி
    என்னவென்ற கேள்வியே?
    ஏடுகளையும் விடவில்லை
    ஏனிப்படி பயமுறுத்தலென!
    ஐயமில்லைக் காலம்மாறும்
    ஐக்கியமாய் நாமொன்றுபடின்
    ஒவ்வொருதனி மனிதருமேதம்
    ஒழுக்கம் பேணிக் காப்பின்
    ஓயாத இயற்கை தாக்குதலும்
    ஓய்வெடுக்கும் நற்காலம் மலரும்!
    கவிதையும் கருத்தும் புயலாய்..

    ReplyDelete
  15. புயல் பற்றிய கவிதையும்
    முடிவாகச் சொன்ன கருத்தும் மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . மிக்க நன்றி ஐயா.

      Delete
  16. நன்றி சசிகலா, அருமையான கவிதை. அதுக்காக கவிதை நடையில் எல்லாம் பின்னூட்டம் போட தெரியாது. புயலின் பெயர் நீலமா அல்லது நிலமா.

    ReplyDelete
    Replies
    1. நிலம் விழுங்கிய நீலம்

      Delete
    2. எனக்கு சரியாக தெரியவில்லை நான் தேடிய நீலம் ஆதலால் நீலம்.

      Delete
  17. கவிதையும் நன்று. சேட்டை கமெண்ட்டும் நன்று! புயல் பற்றிய கவிதையை இந்தப் பயல் ரொம்ப ரசித்தேன்! உரம் போடாமலேயே வளர்ந்த நல்ல மரமொன்று வீழ்ந்தது எங்கள் ஏரியாவிலும்!!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக்கருத்திட்டமைக்கு மிகவும் நன்றிங்க.

      Delete
  18. புயலுக்கே கவி எழுதிய தென்றலை கண்டு வியக்கிறேன் .
    அருமைங்க அக்கா

    ReplyDelete
    Replies
    1. சகோ நேத்து எங்க இருந்திங்க ? நலமா?

      Delete
  19. புய்லடிக்குதேன்னு லீவு குடுத்தா கவிதை எழுதி போஸ்ட் பண்ணுறியா?!

    ReplyDelete
    Replies
    1. நானாவது வீட்ல இருந்தபடியே கவிதை எழுதினேன்.

      Delete