Tuesday 9 October 2012

பேருந்து கலாட்டா !



அலமு : ஏண்ணா... இன்னைக்கும் கிளம்பியாச்சா ?

மாமா : என்னடிம்மா புதுசா கேக்குற? எப்பவும் நான் ஆபிஸ் போறது தான? இன்னக்கி என்ன ?

அலமு : ஆமா, உங்களுக்கு என்னையே ஞாபகம் இருக்காது இதில் கல்யாண நாள் மட்டும் எப்படி ஞாபகம் இருக்க போகுது-

மாமா : கல்யாண நாளா..? அத வேற ஏன்டி ஞாபகப்படுத்துற- அப்புறம் நான் ஆபிஸ்ல இஞ்சி தின்ன குரங்கு மாதிரி தான் இருக்கனும். அத வச்சே எல்லாம் என்ன வீட்ல விசேஷமானு ட்ரீட் கேட்பானுங்கடி.
அலமு : அதுக்குத்தாண்ணா சொல்றேன்... லீவ் போடுங்க. வாங்க, எங்காவது கோவில் குளம்னு அழைச்சிட்டு போங்களேன்.

மாமா : ஆமாண்டி, எனக்கும் ரொம்ப நாளா ஆசை எங்காவது குளத்துல உன்னைய பிடிச்சி தள்ளிட்டு வரனும்னு.

அலமு : ஏன் சொல்ல மாட்டிங்க..? நான் என்ன ஒவ்வொருத்தி மாதிரி அக்கம் பக்கத்துக்கே கேக்குற மாதிரி சண்ட போட்டேனா, இல்ல அது வேணும் இது வேணும்னு அரிச்சுப் பிடுங்கினேனா? சொல்லுங்கோண்ணா.

மாமா : ஆரம்பிக்காதடியம்மா உன் ஆலிந்தியா ரேடியாவ....

அலமு : இப்ப நான் பேசினா ரேடியா மாதிரி தான் இப்ப இருக்கும். பொண்ணு பார்க்க வரும் போது அழகா இருக்கியே அப்படியே ஒரு பாட்டும் பாடுடினு நீங்க தான கேட்டது.

மாமா : ஆமாண்டிம்மா அது அப்ப! பொய் சொல்லலியே நீ அழகா தான் இருந்த.

அலமு : சரி விடுங்க இப்ப அழைச்சிட்டு போறிங்களா இல்லையா ?

மாமா : நீ சொல்லி நடக்காம இருக்குமா? போவோண்டிம்மா.

அலமு : ஏன்னா அப்படியே இந்த கிஷ்கிந்தா பீச் இப்படி எங்காவது போவோமே.

மாமா : ஆமாண்டி புதுப் பொண்ணு அதனால பீச்சுக்கு போவோம். உன்ன பார்த்தாலே சுனாமி வந்துடும்டிமா.

அலமு : வரட்டுமே... இங்க என்ன இருக்கு அப்படியாவது போவோமே ஜோடியா.

மாமா : நல்ல ஆசைடிம்மா உனக்கு.

அலமு : பேசியே பொழுத ஓட்டாதிங்க சீக்கிரம வாங்க. கரண்ட் வேற இல்ல... எல்லா சுவிட்சும் ஆஃப் பண்ணிட்டு வாங்க.

மாமா : உன்னைய மாதிரி பேசியே பொழுத ஓட்றதெல்லாம் என் பொழப்பில்லடிமா. அதெல்லாம் நான் பார்த்துட்டேன் கிளம்பு கிளம்பு.

அலமு : ஏண்ணா டிவிய ஆஃப் பண்ணிங்களா? யாரோ சிரிக்கிற மாதிரி கேக்குதுண்ணா...

மாமா : அது டிவில இல்லடி நீ பேசுறத கேட்டுட்டு பக்கத்து வீட்ல சிரிக்கிறாங்கடி...

அலமு : ஆமா உங்கள மாதிரி ஒருத்தரக் கட்டிண்டா எல்லாம் சிரிக்க தான் செய்வாங்க,,,

மாமா : அசிங்கமா பேசாதடி! அதுக்கு வேற சிரிச்சி வைக்க போறாங்க... பத்தடி கேப்லதானே நானே இருக்கேன்!
பஸ் நிறுத்தத்தில்...
அலமு : ஏண்ணா. எனக்கு எங்க இறங்கனும்னு தெரியாதுண்ணா. இறங்கும் போது சொல்லுங்க.

மாமா : அப்படியாவது எங்காவது தொலைச்சிட்டு போன நான் கொஞ்சம் நிம்மதியா இருப்பேனே அது நோக்கு பிடிக்காதே, சரி சரி வா.

இரண்டு மூன்று நிறுத்தத்திற்கு பிறகு கூட்ட நெரிசலினால் இறங்கி இறங்கி ஏறும்படியாக இருந்தததால் மாமா இறங்கி இறங்கி இள வயது பையனைப் போல படிக்கட்டுகள்ல மாமா தொங்கிட்டு வந்தார். அடுத்த நிறுத்ததில் மாமா இறங்கி நின்றதும் மாமி பார்த்து விட்டு இது தான் இறங்குமிடமென இறங்கிவிட்டார்.

பேருந்து நகர்ந்ததும் மாமா தேட ஆரம்பிக்க. மாமி கீழிருந்து ஏண்ணா ஏண்ணாவென்று கதற... 1 கி லோ மீட்டர் தூரம் வரை சென்று பிறகு மாமா இறங்கி பின்னோடி வந்து பிரிந்த மாமியை தேடிப்பிடித்தார். காரசார மான பேச்சு முடிந்து கோவிலும் வேண்டாம் குளமும் வேண்டாமென வீட்டுக்கு மாமியை கரம்பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தார் வீட்டுக்கு.

15 comments:

  1. என்ன ஒரு கொல வெறி கலாட்டா...

    இதுல ஏதாவது சொந்த அனுபவம் கலந்திருக்கா...?

    ReplyDelete
    Replies
    1. இல்லங்க கேட்ட அனுபவம்.

      Delete
  2. ஆஹா..கடைசியில எங்க போகணும் என்று நினைத்தார்களோ அங்க போகவே இல்லையா... கல்யாணம் ஆகி கொஞ்ச வருஷம் ஆனாலே எல்லாருமே ஒரே மாதிரி தான் இருப்பாங்களோ...அருமையாக சொன்னீங்க சசி கலா... பாராட்டுக்கள்... நமக்கெல்லாம் இப்படி ஆகாதுன்னு நினைக்கிறேன்... பாப்போம்.. அப்பா என்ன நடக்குதுன்னு....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. மாமாவும் மாமியும் நடத்தும் ரகளைக் குடித்தனத்துலருந்து ஒரு பகுதியை அழகா படம் பிடிச்சு காட்டியிருக்கீங்க. அதென்னமோ.. கல்யாணமான நிறைய ஆண்கள் மாமாவோட மனநிலையில தான் இருக்காங்க. ஹி... ஹி... தொடரட்டும் மாமா-மாமி கலாட்டா அனுபவங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆண்கள் மனநிலை இப்படித்தான் என்பதை ஒப்புக்கொண்டமைக்கு நன்றிங்க.

      Delete
    2. அதிகம் பேசினால் இப்படித்தான்
      ஒன்றும் ஆகாமல் போகும்
      எப்பத்தான் மாமி மாமா
      புரிந்து கொள்ளப் போகிறார்களோ ?
      மனம் கவர்ந்த அருமையான பதிவு
      தொடர வாழ்த்துக்கள்

      Delete
    3. புரிதல் இருந்தால் இப்படி இன்னல்கள் தேவையில்லைதான். நன்றி ஐயா.

      Delete
  4. akka unkalukku romba nallave varathu sirappa ezhutharel unka thoppanaar sirantha ezhuththalaro... pes pes..

    ReplyDelete
    Replies
    1. ஹஹ இல்லம்மா என் தகப்பனார் சிறந்த விவசாயி.

      Delete
  5. நல்ல பதிவு.வாழ்ட்த்துக்கள்,

    ReplyDelete
  6. நல்ல நகைச்சுவை ...போங்கொ!.....
    நல்வாழ்த்துங்கோ!..
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. //வீட்டுக்கு மாமியை கரம்பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தார் வீட்டுக்கு.///

    ரோட்டிலே அடிவாங்கி மானம் போக கூடாது என்று மாமியின் கரம் பிடித்து சென்றரோ மாமா?

    கோயிலில் பூஜை மிஸ் ஆனாதால் மாமாவுக்கு வீட்டில் வந்தது மாமி நல்ல பூஜை செய்து இருப்பார்களே அது உண்மைதானுங்கோ

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு.... இது அவ்வப்போது எல்லா வீட்டிலும் நடக்கும் நாடகம் தான்.... இதே போன்ற ஒரு பகிர்வு - ஊடல் என்ற தலைப்பில் இன்று எனது பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறேன். முடிந்தால் படியுங்கள்.

    ReplyDelete