Friday 2 November 2012

வெட்கத்தின் விலை !



பொம்மலாட்டம்
பார்க்கப் போனநானே
பொம்மையானேனே!

சிலம்பாட்டம்
கண்டு வந்தேநானும்
சிரிச்சி நின்னேனே!

கயிறாட்டம்
ஆடப்பார்த்து
கனவு கண்டேனே -நானும்
பகல் கனவு கண்டேனே!

கிழங்காட்டம்
நானிருந்தேன்னெனையும்
கிறங்க வச்சாயே ..
.மடியில உறங்க வச்சாயே

 சூதாட்டம்
ஆடி என்னைநீயும்
தோற்க்க வச்சாயே   ..
உன்னை ஏற்க வச்சாயே !

46 comments:

  1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/upcoming.php

    பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க பார்க்கிறேன்.

      Delete
  2. வெட்கத்திற்கு விலை கிடையாது...
    ஆனால் அதன் பலனோ எவ்வளவு
    கொடுத்தாலும் எளிதில் கிடைக்காது...

    அப்படி வேடிக்கை பார்க்க போனதில்
    நடந்ததை அழகாக சொன்னீர்கள் சசி...
    பொம்மலாட்டம் பார்க்க போய் பொம்மையாய்...

    கிறங்க வைக்க ஒருநிமிடமும் போதுமே
    உறங்க வைக்க ஒரு வார்த்தையும் போதுமே...
    உண்மையை நம்ப வைக்கவே போராட வேண்டி இருக்கும்...

    அழகாக சொல்லியவிதம் கி(உ)றங்க வைக்கிறது சசி கலா...வாழ்த்துக்கள்...
    தொடரவும் இந்த முயற்சியில்...பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நான் ஏதோ சும்மா கிறுக்கினா நீங்க அதுக்கு அழகா விளக்கம் தருகிறீர்கள் நன்றிங்க.

      Delete
  3. கிறங்க வெச்சு உறங்க வெச்சவனை பாடிய கவிதை நல்லா இருக்கு. கவிதைய விட நீஙக வெச்கிருக்கற பொம்மை படம் இன்னும் அழகு. ஹி... ஹி...

    ReplyDelete
    Replies
    1. கிறுக்கினதை சகியாது பொம்மைய ரசித்த விதம் அழகு.

      Delete
    2. கணேஷ், இதுக்குப் பேருதான் டெலிபதியா? :-))

      கவிதைக்குப் படம் அழகு சேர்க்குறது! :-)

      Delete
  4. கவிதை நன்று தொடர வாழ்த்துக்கள் சகோதரி .....

    ReplyDelete


  5. தினம் ஒன்று! இது இன்று!மிக நன்று!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஆசியோடு தொடர்கிறேன் நன்றி ஐயா.

      Delete
  6. Replies
    1. தங்கள் ஆசியோடு தொடர்கிறேன் நன்றி ஐயா.

      Delete
  7. நல்ல இருக்குங்க

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. கவிதை சூப்பரோ சூப்பர். ஆனா நீங்க இதுல காஜல் போட்டோவைப் போடாமல் ஒரு அழகான இளம்பெண்ணின் ஒவியத்தை போட்டிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அவங்க பெயர் காஜல்ஆ தெரியாதுங்க. ஆமா ஓவியம் அழகாக இருந்திருக்கும்.

      Delete
  9. ஹா...ஹா... ரசித்தேன்...

    நன்றி...
    tm6

    ReplyDelete
  10. முடிவு இனிமையாகத்தான் இருக்க வேண்டும்
    அருமை
    சூதாட்டம்
    ஆடி என்னைநீயும்
    தோற்க்க வச்சாயே ..
    உன்னை ஏற்க வச்சாயே !

    ReplyDelete
  11. ரசிக்க வைத்த கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க எங்க தங்களை சில நாட்களாக காணவில்லை ?

      Delete
  12. இப்படியெல்லாம் கவிதை எழுதி
    படிக்க வந்த எங்கள் மனதை
    கிறுக்கு பிடிக்க வைத்தாயே



    ஆமாம் எப்படியப்பா நீங்கள் இப்படியெல்லாம் சிந்திக்கிறீர்கள் எங்களுக்கு கவிதை எழுத சொல்லித்தாருங்களேன்

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருப்பது பிடிக்கவில்லையா ?

      Delete
  13. வெட்கத்தை இப்படி எல்லாம் கூட சொல்ல முடியுமா? அருமை சகோ!

    ReplyDelete
    Replies
    1. வெட்கப்பட்டதையும் இப்படி வெட்கமில்லாம கவிதைய போட்டிருக்கியே உனக்கு வெக்கமா இல்லை?!

      Delete
    2. கிறுக்குவதற்கு எல்லாம் வெட்கப்படக்கூடாதுங்க.

      Delete

    3. @ராஜி உங்களின் பின்னுட்டம் என்னை மிகவும் சிரிக்க வைத்துவிட்டது நல்ல அக்கா தங்கைகள்

      Delete
  14. செம கலக்கல் அக்கா

    ReplyDelete
  15. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  16. //சூதாட்டம்
    ஆடி என்னைநீயும்
    தோற்க்க வச்சாயே ..
    உன்னை ஏற்க வச்சாயே !//
    சூப்பர் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  17. அருமை. படிக்கும் பொழுதே மனம் வார்த்தைகளை இசைக்கிறது

    ReplyDelete
  18. எல்லா ஆட்டங்களும் இணைத்து அருமையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  19. // சூதாட்டம்
    ஆடி என்னைநீயும்
    தோற்க்க வச்சாயே ..
    உன்னை ஏற்க வச்சாயே !// இதை ரசித்தேன் அருமை...

    ReplyDelete
  20. தங்கள் சிந்தனை வேகமும்
    மொழி பாண்டித்தியமும்
    பொறாமை கொள்ளச் செய்கிறது
    மனம் கவர்ந்த அருமையான கவிதை
    குறிப்பாக இறுதி வரிகள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. மிக, மிக அருமையாய், உயிரோட்டமாய்,

    ReplyDelete
  22. ஆட்டங்கள் அருமை!

    ReplyDelete