Sunday 7 October 2012

நினைவலைகள் !


வண்டாட்டம் கண்ணிரண்டு
வலைய வலைய வந்ததே
பூச்செண்டாட்டம் முகமென்றே
சுத்தி சுத்தி வந்து தினம்
சொக்குப்பொடி போட்டதுவே
கொக்கு போல வந்து நீயும்
ஒத்தக் காலில் நிக்குறியே

பொத்தி பொத்தி மனசுக்குள்ள
பொதைச்சி வச்சி ஆசையெல்லாம்
பத்திக்கிட்டே எரியுதய்யா
பார்வையத்தான் என்ன செய்ய .

தேரோடும் வீதியிலும்
உனை தேடி மனம் அலையுதடா
அலையாட்டம் நினைவேனோ
அரிச்சி தினம் கொல்லுதடா.

ஜாடிக்கேத்த மூடிபோல
ஜோடியாத்தான் சேர்ந்திடுவோம்
சோதனைகள் வந்தாலும்
சாதனையாய் மாற்றிடுவோம்.

18 comments:

  1. அன்பு என்றால் எ(இ)ப்படியும்
    சேர்ந்து வாழ எண்ணுவதும்
    எண்ணியதை எடுத்து இங்கு
    சொன்னதுவும் அருமைதாங்கோ...

    தேரோடும் வீதியிலே இருவரின்
    மண ஊர்வலமும் வரணுமிங்கே
    கைபிடித்த பின்னும் முன்னமிருந்த
    அன்பு என்றும் மாறாமல் வேண்டும்...

    ஜாடிக்கேத்த மூடிபோல ஜோராக
    சேர்ந்து வாழ முன்னோர்களை
    நினைத்து நானும் வள்ளுவன்
    வாசுகி போல வாழ வாழ்த்துகிறேன்...

    அழகாக சொல்லி உள்ள சசி கலா
    தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் என்றுமே...


    ReplyDelete
  2. //ஜாடிக்கேத்த மூடிபோல
    ஜோடியாத்தான் சேர்ந்திடுவோம்//

    அட, நல்ல இருக்குங்க...

    ReplyDelete
  3. விட்றாதீங்க... இறுக்கமாப் பிடிச்சுக்கங்க சொல்றேன் அவர் கைய... சும்மாவா பின்ன... ஜாடிக்கேத்த மூடியா சேர்ந்தவராச்சுதே... அழகா உணர்வுகளை விளக்கிட்டீங்க தென்றல். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஜாடிக்கேத்த மூடிபோல
    ஜோடியாத்தான்....

    வாழ வாழ்த்துகிறோம்

    ReplyDelete
  5. அழகாக அமைந்த சந்த நயத்த்துடன் இசையும் கொஞ்சம் கலந்து படிக்கையில் ஒரு வித மகி்ழ்வை மனது பெறுகிறது

    ReplyDelete
  6. அருமையான நினைவலைகள்.
    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  7. //ஜாடிக்கேத்த மூடிபோல
    ஜோடியாத்தான் சேர்ந்திடுவோம்//
    வாழ்த்துக்கள்!

    நம்பிக்கைக் கீற்றைக் காண வாருங்கள் என் வலைப்பூவிற்கு!

    ReplyDelete
  8. அழகான கவிதை... சந்தோசமாக இருந்தது...

    ReplyDelete
  9. நினைவலைகள் அருமையான கவிதையா வந்து எங்களை உள்ளே இழுத்துக் கொண்டது.

    ReplyDelete
  10. வருகிற சோதனைகளை சாதனைகளாக்கி மாற்ற எண்ணுகிற ஜோடிகளின் நன்றாக வாழ்வார்கள்,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நல்ல கவிதை... பராட்டுகள்.

    ReplyDelete
  12. நினைவலைகள் மனத்தை விட்டு நீங்கா அலைகள்

    ReplyDelete
  13. அக்கா தங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! அதை ஏற்றுக்கொள்ள தங்களை எனது வலைப்பூவிற்கு அழைக்கிறேன்!
    http://dewdropsofdreams.blogspot.in/2012/10/2.html

    ReplyDelete
  14. ஜாடிக்கேத்த மூடிபோல
    ஜோடியாத்தான் சேர்ந்திடுவோம்
    சோதனைகள் வந்தாலும்
    சாதனையாய் மாற்றிடுவோம்.//நல்ல கவிதை... பராட்டுகள்.

    ReplyDelete
  15. பொத்தி பொத்தி மனசுக்குள்ள
    பொதைச்சி வச்சி ஆசையெல்லாம்
    பத்திக்கிட்டே எரியுதய்யா
    பார்வையத்தான் என்ன செய்ய .

    வார்த்தைகளில் சந்தம் பூந்து விளையாடுகிறது தோழி !....
    அருமை ......வாழ்த்துக்கள் இனிய கவிதை தொடரட்டும் .

    ReplyDelete
  16. ஓட்டுப் போட்டாச்சு மேளம் அடிக்கிறத நிப்பாட்டுங்க :)

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அப்படித்தாங்க கேக்குது என்ன செய்ய தெரியளயே.

      Delete