Wednesday 3 October 2012

துளித் துளியாய் !



எதிர்பார்ப்பின்றி கொடுக்கும் அன்பில்
 இரட்டிப்பு மகிழ்விருக்கும்.


 கல்வெட்டில் வாழ்ந்த வரலாறு
இன்று கடைவீதியில்
ஏணிப்படியான உறவு
எருக்கஞ்செடியாக
சுமந்தவளே சுமையாக
சுமையென்று வாழ்வின்
அர்த்தத்தைஇழக்காமல்
முதுமையை வணங்குவோம்..


எச்சமானாலும்
மிச்சம் வைக்கவில்லை
வறுமை.


மூன்றினத்தில் இருந்தும்
வழுக்கி விழுந்தது
முற்றுப்புள்ளியானது.


சருகாவதில் தவறில்லை
உரமாக யோசிப்பது தான் தவறு.

17 comments:

  1. துளித்துளியாய் மழையாய் வந்தாயே...

    1) எதிர்பார்ப்பில்லா அன்பு இனம் பார்த்தும்
    வருவதில்லை.

    2) கல்வெட்டில் இல்லை நம் மனதில் வைத்து பூஜிக்க வேண்டிய அன்பு தெய்வம் இப்படி நிற்பதும் நெஞ்சை பிளக்கத்தான் செய்கிறது.

    3) உமிழ் நீரே உணவாகும் சில சமயங்களில்...

    4) முற்றுப் புள்ளியாவது முற்றுப்பெறாமல் நிலைக்கட்டும்.

    5) வீழ்வது தவறில்லை...வீழ்ந்தே கிடப்பது தான் தவறு. சருகாக வீழ்ந்தாலும் உரமாக மாறவேண்டும்.
    பயனின்றி வாழவும் கூடாது. பயன்படாமல் சாகவும் கூடாது...

    அத்தனையும் அழகாக மின்னுகின்றன இருட்டிலும்..
    பிறருக்கு பயன்படும் மின்மினியாய்...
    பாராட்டுக்கள் சசி கலா. வளருங்கள் மென்மேலும்...

    ReplyDelete
  2. எச்சமானாலும்
    மிச்சம் வைக்கவில்லை
    வறுமை.

    சருகாவதில் தவறில்லை
    உரமாக யோசிப்பது தான் தவறு.

    மின்னும் வரிகள் இவை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ////

    எச்சமானாலும்
    மிச்சம் வைக்கவில்லை
    வறுமை.
    ////

    வறுமையின் உசச்த்தை காட்டும் வரிகள்

    ReplyDelete
  4. வறுமையின் கொடுமையை விளக்கிய வரிகள் அருமை!பகிர்விற்கு நன்றி!

    என்னுடைய வலைப்பக்கத்தில் "மீட்டிட வருவானோ?" கவிதை!

    ReplyDelete
  5. வறுமை வரிகளும் அது தொடர்பான புகைப்படமும் மனதை வருடுகிறது

    ReplyDelete
  6. எதிர்பார்ப்பின்றி கொடுக்கும் அன்பில்
    இரட்டிப்பு மகிழ்விருக்கும்.
    >>
    அன்பில் எதிர்பார்ப்பு வேணாம். ஆனா, பாத்திரம் அறிஞ்சு பிச்சையிடுன்னு ஒரு பழமொழி இருக்கு. தானத்துக்கே இப்படின்னா! அன்புக்கு?

    ReplyDelete
  7. அனைத்து வரிகளும் அருமை !..இதில் சருகாகுவதில் தவறு இல்லை .
    உரமாக நினைப்பதுவே தவறு இது கொஞ்சம் புரியவில்லைத் தோழி .
    பிறர் வாழ தன்னுயிர் நீர்த்தவர்கள் உரமாவது திண்ணம் என்னும் போதில்
    உரமாக நினைப்பது தவறு என்ற கருத்தின் ஆழம் புரியவில்லை தோழி ?...

    ReplyDelete
    Replies
    1. சோம்பேறியாக இருப்பதை விட மண்ணுக்கு உரமாகலாம்னு நினைத்து எழுதியதுங்க.

      Delete
  8. சருகும் ஒரு உரம் தான்...

    /// உரமாக யோசிப்பது தான் தவறு. ///

    யோசிக்கவே கூடாது... அருமை சகோதரி...

    ReplyDelete
  9. கலக்குங்க டீச்சர் கலக்குங்க ..

    ReplyDelete
  10. நல்ல சிந்தனை கவிதை..

    ReplyDelete

  11. எதிர்பார்ப்பின்றி கொடுக்கும் அன்பில்
    இரட்டிப்பு மகிழ்விருக்கும்.

    இந்த மகிழ்ச்சியெல்லாம் நான் அனுபவித்ததே கிடையாது சசிகலா.
    நன்றி

    ReplyDelete
  12. யோசிக்க வைத்த வரிகள்..!

    பகிர்ந்தமைக்கு நன்றி


    http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_4.html

    ReplyDelete
  13. துளித் துளியாய் இருந்தாலும், எல்லாமே மணித்துளிகள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete