Tuesday 2 October 2012

காலத்தை வாழவிடுவோம் !



சக்கரமொன்று சுழல்வதுபோல்
காலத்தின் சுழற்சியிலே ஞானம்
கண்மூடக் கண்டேன் நானும்!

காடழியக்கண்டேன் புவியும்
சுடுகாடாய் மாறக் கண்டேன்!
மலையுடைத்ததினால் காற்று
திசைமாறிப் போகக்கண்டன்!
வானிங்கே பொய்த்துப்போக
விதையெல்லாம் கருககண்டேன்!

மாடிவீடு உயரவுயர அங்கே
மனச்சாட்சி உதிரக்கண்டேன்!
மண்பாண்ட மாற்றத்தினால்
நோய்கள் பெருகக் கண்டேன்!
நதியோட்டம் வாய்க்காலாக
தாய்மடி வெடிக்கக் கண்டேன்!

தஞ்சம்வந்த பறவைக்கூட்டம்
தண்ணீரினறி இறக்கக் கண்டேன்!
மண்ணுக்குணவாகும் மனிதமனம்
மரிக்கவும் கண்டேன்!

ஆசையின் விளைச்சலினால்
நாளையும் மடியக்கண்டேன்!
திருந்திவிடு மானிடமே
காலத்தை வாழவிடு!

18 comments:

  1. மானிடம் திருந்த வேண்டும். மனங்கள் மாற வேண்டும் என்பதுதான் என் விருப்பமும்.

    ReplyDelete
  2. இயற்கையின் மாற்றத்தை
    நாமாக மாற்றுவதினால்
    மாறுவது இயற்கையென்றாலும்
    அழிவதும் நாமல்லவா....

    இயற்கையை வருடிவிட்டால்
    நமக்கு அன்னையாவாள்
    இயற்கையை சீண்டினால்
    அவதாரமாவாள் காளியாய்...

    அருமையாக சொன்னீர்கள்
    வாழ்த்துக்கள் தங்களுக்கு...

    ReplyDelete
  3. // திருந்திவிடு மானிடமே
    காலத்தை வாழவிடு! //
    மானிடம் திருந்துவது எப்போது? நம்மைவிட ஒரு உயர்ந்த உயிரினம் தோன்றி நம்மை அடிமைப்படுத்தும் போதுதான்

    ReplyDelete
  4. கண்டதே இத்தனை இருந்தால்
    காணாதது எத்தனையோ !!
    அண்டத்திலே இன்னும் இன்னும்
    வீணாவது எத்தனையோ !!

    ஞாலத்தில் என்றேனும்
    ஞானம் உதித்திடுமோ ?
    வானம் உதிருமுன்னே
    வையகம் விழித்திடுமோ !!

    தென்றலே !! நீ தளராதே !!
    தனியேயும் போராடு.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  5. ஆசைதான் அழிவுக்கு காரணம்..ஆசையே அலை போலே....பாட்டுதான் ஞாபகத்திற்கு வருது சகோ..

    ReplyDelete
  6. உங்கள் கவிதையில் எப்பொழுதுமே இயற்கையின் மேலுள்ள ஆழ்ந்த அக்கரை வெளிப்படுவதை காண முடிகிறது. அருமையான கவிதை சகோதரி...

    ReplyDelete
  7. கனவு நனவாக இருக்க வேண்டுமெனில் விழிப்புடன் இருக்கவேண்டும் அக்கா

    ReplyDelete
  8. ஆமாம்... காலத்தை வாழவிடுவோமே....

    ReplyDelete
  9. திருந்திவிடு மானிடமே
    காலத்தை வாழவிடு!

    ஆம் காலத்தை வாழவிடுவோம்

    ReplyDelete
  10. ஆம்! இயற்கையை சிறிதேனும்
    நாளைக்கு மிச்சம் வைப்போம்.

    ReplyDelete
  11. அருமை............. அக்கா...........

    ReplyDelete
  12. மண்பாண்ட மாற்றத்தினால்
    நோய்கள் பெருகக் கண்டேன்!


    உணர்வுள்ள ஆதங்கம் என்ன செய்வது காலத்தின் கட்டாயம்

    ReplyDelete
  13. தலைவர் பால கணேஷ் அவர்கள் சொன்னதுதான் என் கருத்தும்

    ReplyDelete
  14. காலத்தை வாழவிட்டால் நாம் வாழ்வது..?
    ஹி ஹி ஹி......
    நல்லா இருக்குது வரிகள்

    ReplyDelete
  15. sako!

    uruththukirathu manam....

    ReplyDelete