Monday 1 October 2012

ஏடுகளில் வாழும் அஹிம்சை !


அக்கினிச் சிறகெடுத்து
 இங்கேவநதாயோ!
அகிம்சையை ஏராய்
 பூட்டி வென்றாயோ!

ஆலயம் காத்தும்
 உனைக் கொனறனரோ!
ஆகாயம் சென்றும்
 புவியில் வாழ்ந்தனையோ!
இந்தியத் தாயின்
கண்ணீர் துடைத்தவரே!

இதயத்தில் தீபமாய்
என்றும் வாழ்பவரே!
ஈடல்லா இமயமே
விடுதலை நாயகனே!
ஈட்டித்தந்த சுதந்திரம்
 காக்க நாதியில்லை!

உன்னதன் நீகாட்டியப்
பாதையிலேயிங்கு!
உறங்குகிறோம்
 உதவாக்கரை வேடத்தில்!
ஊர்கூட்டி செக்கிழுத்தாய்
விடுதலைக்காய்!

ஊனமாய் நாங்களெங்கோ
ஓடுகிறோம்!
எண்ணத்தில் நீயில்லாமல்
 பணத்தில் அச்சிட்டு!
எங்குமதன் வினியோகம்
ஏழைவாழ்வு சுடுகாடாக!

ஐக்கியமென்று நீ முழங்கியதால்
நாங்கள் உனக்கு!
ஐந்துகுண்டைப் பரிசாய்த்
தந்தோம் இனியும்!
ஒருமுறைப் பிறந்து
 எமக்காய் மரித்தாலும்!

ஒருநாளும் திருந்தமாட்டோம்
பணமே எம்கனவு!
ஓரணியே வெற்றியென்றாய்
ஓர் அணியும் சரியில்லை!
ஓட்டையான ஓடத்தில்
பயணங்கள் சுயம்வளர!

கடவுளாய் நீவந்தாலும்
பதிவிருக்கும் துரோகங்கள்!
கருணையே சொன்னாலும்
கொலையாகும் உண்மைகள்!
நினைக்கின்றோம் இன்றுனை
 இதுவே பெரிதென்று!

நினைத்திருப்பாய் வானுலகில்
உன்புகழ் சிறக்கட்டும்!
மகாத்மா மீண்டுவா நல்வழி காட்டவா!!

26 comments:

  1. ம்! என்ன செய்வது சகோதரி? கள்ள நோட்டடிப்பவர்களுக்குக் கூட காந்தி பயன்படுகிறாரே? ஆதங்கத்தை அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  2. "ஐக்கியமென்று நீ முழங்கியதால்
    நாங்கள் உனக்கு!
    ஐந்துகுண்டைப் பரிசாய்த்
    தந்தோம் இனியும்!
    ஒருமுறைப் பிறந்து
    எமக்காய் மரித்தாலும்!
    ஒருநாளும் திருந்தமாட்டோம்"

    முகத்தில் அறையும் வரிகள்

    நினைக்கின்றோம் இன்றுனை
    மகாத்மா மீண்டுவா நல்வழி காட்டவா!!

    ReplyDelete
  3. // ஒருநாளும் திருந்தமாட்டோம்
    பணமே எம்கனவு!
    ஓரணியே வெற்றியென்றாய்
    ஓர் அணியும் சரியில்லை! //
    இன்றைய இந்தியா இப்படித்தான் உள்ளது. காந்தியின் பிறந்தநாளில் மட்டுமாவது அவரை நினைப்போம்.

    ReplyDelete
  4. இது கலி யுகம் சகோ

    ReplyDelete
  5. மகாத்மா மீண்டு வா,ந்ல் வழி காட்ட வா/நல்ல் கனவு நல்ல கவிதை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மீண்டு வா மகாத்மா....!

    ReplyDelete

  7. காந்திகளை உருவாக்கி விட்டோம்
    காந்தி பேருக்கு முன்
    சோனியா, ராகுல் என சேர்த்து வைத்துவிட்டோம்
    இந்தியாவைக் கொள்ளையிட்டு
    இத்தாலிக்கு கடத்த சொல்லிவிட்டோம்
    இந்த மண்ணுக்கே பிறந்த நாம்
    இளிச்சவாய் தனமாய் கத்திக்கிடக்கின்றோம்.

    இதுக்கும் மேலயா “காந்தி” பிறக்கனும்?

    ReplyDelete
  8. முடிவில் கனவு மெய்ப்பட வேண்டும்...

    ReplyDelete
  9. உள்ளக் குமுறலால் உரிவான கவிதை நன்று!

    ReplyDelete
  10. மிகச் சிறப்பான சிறப்புப் பதிவு
    வித்தியாசமான சிந்தனையும்
    வார்த்தைப் பிரயோகங்களும்
    மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. எத்தனை காந்தி வந்தாலும்நம்ம அரசியல்வாதிகளைத் திருத்த முடியாது.!
    நம்ம பதிவுக்கும் வாங்க சகோ!

    ReplyDelete

  12. THE SOLE JUSTIFICATION FOR EXISTENSE IS THE SEARCH FOR TRUTH என்று வாழ்நாளை அர்ப்பணித்தவர், பிறந்த நாளில் அவர் வழி நடக்க முடற்சியாவது செய்யலாமே.

    ReplyDelete

  13. முயற்சியாவது என்றிருக்க வேண்டும். தட்டல் பிழை....!

    ReplyDelete
  14. ஒருநாளும் திருந்தமாட்டோம்
    பணமே எம்கனவு!
    ஓரணியே வெற்றியென்றாய்
    ஓர் அணியும் சரியில்லை!
    ஓட்டையான ஓடத்தில்
    பயணங்கள் சுயம்வளர!

    சாட்டையடி வரிகள்..அருமை சகோ.

    ReplyDelete
  15. சாட்டையடி கவிதை! வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! நன்றி!

    ReplyDelete
  16. // ஒருநாளும் திருந்தமாட்டோம்
    பணமே எம்கனவு!
    ஓரணியே வெற்றியென்றாய்
    ஓர் அணியும் சரியில்லை!//

    உண்மை !

    ReplyDelete
  17. மகாத்மா உதித்தார் பெருந்தலைவர்
    உதிர்ந்தார்-நாம் மறந்தோம்!
    அருகதையில்லை எனக்கு!

    ReplyDelete
  18. மனம் தொட்ட படைப்பு !

    ReplyDelete
  19. ''...மகாத்மா மீண்டுவா நல்வழி காட்டவா!!...''

    ஆம் உண்மை நடக்கட்டும்.
    அன்றி இவ்வுலகம் திருந்தாது.
    நன்று சொன்னீர்.
    வேதா. இலங்காதிலகம்.


    ReplyDelete
  20. ஊர்கூட்டி செக்கிழுத்தாய்
    விடுதலைக்காய்!

    ஊனமாய் நாங்களெங்கோ
    ஓடுகிறோம்!
    //நன்று! நன்றி!//

    ReplyDelete
  21. அருமை............. சூப்கர்

    ReplyDelete
  22. நல்லதொரு கவிதை
    தாத்தாவை நினைவு கூர்ந்தது அழகு

    ReplyDelete