Tuesday, 23 October 2012

அன்புக்கும் பூஜை !


அன்பும் உறவென்ற ஆயுதமணிதல்போல்
ஆண்டவன் படைப்பில் ஆயுதம் உறவுகளாய்
இரும்பு வெள்ளித் தங்கமென உலோகங்கள்
உருக்கியெடுத்தே வாழ்வில் ஓட்டங்கள்!

ஊர்வலம்போக நம்மூர்சாமிக்கும் காவலாய்
ஏர்மாட்டின் கழுத்தில் ஆழஉழும் ஏர்சுமையாய்
ஐயங்கள் வாழுமிடம் கொலைக் கருவிகளாய்
ஒருமைப்பாட்டு கீதத்தில் ஆலை இயந்திரமாய்!

ஓலையது செதுக்கின் தூசியோட்டும் துடப்பம்
ஔவைத் தமிழில் காப்பானுங்கெடுப்பானும்
அஃதொன்றும் பெரிதில்லை இன்னுமுண்டு
கடைக்கண் பார்வையும் ஆயுதமாவதுண்டு!

அரங்கேறும் பூஜைகளாயிரமாயிரமுண்டு
அதுபாடும் பண்பாடு படும்பாடுசொலில்
முரண்பாடாய் கருத்துரைத்தாயென்பார்
ஆனாலும் சொன்னேன் என்கருத்தை!

வெள்ளைச் சுவரினிலேயோர் கரும்புள்ளி
அதைமட்டும் பார்க்காதே என்பவரே நம்
முன்னோர் மூடரல்ல இதயமுள்ளவரவரே
முதற்கனி கடவுளுக்கு ஏன்சொன்னார்?

பூஜைகள் முடிந்தவுடன் அதையெடுத்தே
ஏழைக்குத் தானமென அள்ளிக்கொடுப்பார்
காக்கையும் காத்திருக்கும் அதைக்கூடியுண்ண
எங்கேநாம் நிற்கின்றோம் எண்ணியதுண்டா?

மெழுகாலே பழங்கள்செய்து படைக்கின்றோம்
அடுத்தமுறையதைவைக்க கழுவிவைப்போம்
ஆயுதங்களே பரவாயில்லை நினைக்கின்றேன்
நாம்வாழ அதுதேய்ந்து மாள்கிறதேஆதனில்!

ஆயுதமாயிருக்கும் எண்ணம் களைந்து
அன்பேந்தி ஆயுதபூஜை செய்வோம்
ஆயுதமாயல்ல இதயமுள்ள மனிதராய்
புகழுக்காயுமல்ல தர்ம புண்ணியமென்றே!!

18 comments:

 1. சிறப்புக்கவிதை... அருமை சகோதரி...

  விழாக்கால வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 2. அஃதொன்றும் பெரிதில்லை இன்னுமுண்டு
  கடைக்கண் பார்வையும் ஆயுதமாவதுண்டு!

  ஆயுதமாயிருக்கும் எண்ணம் களைந்து
  அன்பேந்தி ஆயுதபூஜை செய்வோம்
  // நல்ல பகிர்வு! நன்றி! என்னுடைய வலைப்பூவில் "வாய்திறவாய்" படக்கவிதை! வருகை தாருங்கள்!

  ReplyDelete
 3. அன்பேயாயுதமெனும் புனித நிலைமாறி
  ஆயுதத்தின் துணையோடாண்டவனும்
  இயந்திரமாய் மனம்மாறி இரக்கமின்றி
  ஈனராய் மாறிவிட்டோம் ஆறறிவென்றே
  உண்மையைக் கொன்றிடும் ஆயுதங்கள்
  ஊனமன எண்ணங்களில் ஊஞ்சல்கட்டி
  எப்படிச்சொன்னாலும் மாற்றமில்லை
  ஏக்கமே உம்முரையின் தாக்கங்களாய்
  ஐந்தறிவு மிருகங்கள் நம்மிலும்மேலே
  ஒன்றுபட்டு வாழுமது அதுவேமேன்மை
  ஓட்டங்கள் ஆசை ஆயுதமேந்தியாயின்
  ஔவித பயணத்தில் ஆழிவு ஆயுதமேந்தும்
  அஃதே வாழ்வெனில் அன்பும் பொய்யே!

  அற்புத எண்ணங்கள் அருமை கருத்துக்கள்
  ஆலமரம்போல் கவிதை விழுதாய் ரசிகர்கள்!!

  ReplyDelete
 4. தமிழ்மணத்துல இணைச்சுட்டேன் நாத்தனாரே.

  ReplyDelete
 5. ஆயுதபூஜை என்றாலும் அன்பை மையப்படுத்தி ஒரு கவிதை

  அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
  மறத்திற்கு மஃதே துணை - திருக்குறள் 76

  டாக்டர் மு.வ உரை:
  அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.


  ReplyDelete
 6. ஆயுதமாயிருக்கும் எண்ணம் களைந்து
  அன்பேந்தி ஆயுதபூஜை செய்வோம்//

  அருமையான மாறுபட்ட
  மனம் முதிர்ச்சிக் காட்டும் சிந்தனை
  கவிதை.தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. தமிழ் மணத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு நீங்கிவிடது என்று நினைக்கிறேன். வழக்கம் போல உங்களுக்கு ஒரு ஓட்டு போட்டு விட்டேன்.


  ReplyDelete
 8. சிறப்பான கவிதை.

  த.ம. 4

  ReplyDelete
 9. அன்பும் ஒரு ஆய்தம்தான் என்று சொல்லும் கவிதை அருமை.

  ReplyDelete
 10. கவிதை சூப்பர் சசிகலா.

  ReplyDelete
 11. அன்பேந்தி ஆயுதபூஜை செய்வோம்

  விஜயதசமி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய வரிகள்...

  ReplyDelete
 13. சிறப்பான கவிதை...விஜயதசமி வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. நல்ல கவிதை....
  வாழ்த்துக்கள் விஜயதசமி

  சின்னதொரு வேண்டுகோள் உங்களுடைய இண்ட்லி விட்ஜெட்டைத் தூக்கிடுங்கள்

  ReplyDelete
 15. அன்பேந்தி ஆயுதபூஜை செய்வோம்.
  அருமை.

  இனிய நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 16. நல்ல நடையில் கருத்தை பதிவிட்டுள்ளீர்கள்

  ReplyDelete
 17. அன்பேந்தி பூஜை செய்வோம். விஜயதசமி வாழ்த்துகள்.

  ReplyDelete