Sunday 14 October 2012

துளித் துளியாய் -2



உன்னிடம் கோபிப்பதாய்
நடிக்கக்கூட
எத்தனை ஒத்திகை
தேவைப்படுகிறது.


விடுவிப்பதாய்  நினைத்து
விரட்டிப்பிடித்ததில்
விம்மிக்கொண்டிருக்கிறது
பட்டாம்பூச்சி.


ஒதுங்கி நின்றாலும்
உரசி சிரிக்கிறது
சாரல்.


எல்லாமே நன்றாய்
நடந்து கொண்டிருக்கும் போது
நான் மட்டும் ஏன்
இறகில்லாமலும் பறந்து கொண்டிருக்கிறேன்.


எனக்கு பிடித்ததெல்லாம்
உனக்கு பிடிக்காமலும்
உனக்கு பிடிக்காததும்
எனக்கு பிடித்துப் போக
என்னை மட்டும் உனக்கு
பிடித்திருப்பதாகவே...
நினைத்துக்கொள்கிறேன்
நம்பிக்கை தான் வாழ்க்கையாம்.


 தவிர்ப்பதற்காக
நீ தவிப்பதையே
தாங்க முடியாதவள் நான்.

26 comments:

  1. இந்த சசியை
    நடு நிசியிலே
    எழுப்பி
    பசிக்கலயா என
    வினவியது வானத்து நிலா.

    பசியா ! எனக்கா ?
    எனக்கிருப்பதெல்லாம்
    எப்பவுமே ஒரே
    பசி . அவன் நினைவுகளை
    ரசிப்பதும்
    புசிப்பதும் தான் எனக்கெப்பவுமே
    ருசி. ...என்றாள்.

    சீ ...
    வெட்கத்துடன்
    வெண்ணிலா
    மறைந்தது
    மேகங்களுள்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டமா அழகான கவிதை வரும் என எதிர்பார்த்தேன் சசியை கிண்டல் செய்வதாக வந்த வரிகளும் சிறப்பு ஆனால் ஒரு மாறுதல் எனக்கிருப்பதெல்லாம் தமிழ்ப் பசி.

      Delete
  2. பாக்கெட் மணி வேணும்னா கேட்டு வாங்கிகோனும்.... மொபைல் ரீச்சார்ஜ் பண்னனுமா நேரடியாக் கேட்டுக்கோனும்.... இப்படி கவிதை எழுதி...ஐஸ்வச்சி, ஏமாத்தி வாங்கக்கூடாது..... :-))))

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஐஸ் வச்சா சளிபிடிக்குமாம் அதான் கவிதை ஹஹ.

      Delete
  3. காதல் ததும்பும் வரிகள், எதுக்கும் அவருக்கு ஒரு மிஸ்ட் கால் போட்ருங்கோ. :)

    ReplyDelete
    Replies
    1. நீங்களுமா நடத்துங்க.

      Delete
  4. துளித்துளி - 2.

    1) எத்தனை ஒத்திகை பார்த்தாலும் அத்தனையும் பொய் என்பதை காட்டிகொடுத்துவிடும்... உண்மையான அன்புக்கு பொய்யாககூட நடிக்கத் தெரியாது.

    2) பிறருக்கு நாம் செய்யும் உதவி கூட அவர்களை எந்தவிதத்திலும் சங்கடபடுத்தி விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நெருடலாக அவர்களுக்கு இருந்துவிடக்கூடாது.

    3) நம்மீது அன்பு கொண்டவர்கள் நாம் வெறுத்தாலும் கூட அவர்கள் நம்மை விட்டு விலகாமல் அன்போடு இருப்பார்கள்.

    4) என்னையும் மீறிய ஒரு ஆர்வத்தோடு கூடிய ஆசை என் உள்மனது ஏதோ ஒன்றை தேடிக்கொண்டுதான் இருக்கிறது. அதற்கு கிடைக்கும்வரை... அதை என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

    5) இப்படியும் ஒருவகை அன்பு செலுத்தும் உள்ளங்கள் எத்தனையோ இருக்கத்தான் செய்கின்றன.
    இதனை கண்மூடித்தனமானது என்றுகூட பார்ப்பவர்கள் சொல்வார்கள்.


    6) நம்மேல் அளவுக்கு அதிகமாக அன்புள்ளவர்கள் ஆனந்த சிரிப்பில் நம் விழியில் நீர் வந்தாலும் அதைக்கூட தாங்க மாட்டார்கள். தெரிந்தும் அவர்களால் கட்டுப்படுத்த முடியாது.

    ஆறுமே அருமை சசி கலா...எண்ணிக்கையிலும் வளர்ந்து எண்ணத்திலும் வளர்ந்து வானையும் தாண்ட வேண்டுகிறேன் தங்களை மனதார வாழ்த்தியும் பாராட்டியும்.

    ReplyDelete
    Replies
    1. அழகிய வரிகள் நன்றிங்க.

      Delete
  5. சின்னச் சின்னப் பூக்கள். நன்று.

    ReplyDelete
    Replies
    1. நல்லதா போச்சி இங்க எதுவும் கிண்டல் இல்ல.

      Delete
  6. காதலை தெரிவிப்பதிலும் தெரியப்படுத்துவதிலும் ஒரு ஆணுக்கு மட்டுமே கவிதைத்தனமாக யோசிக்கத் தெரியும் என்று நினைத்திருந்தேன். ஆணுக்கு நிகராக ஒரு பெண்ணாலும் தன்னவனிடம் உள்ள காதலை இவ்வளவு அருமையாக வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபித்த கவிதாயிணி வாழ்க வாழ்க.

    ReplyDelete
  7. படங்களுக்கான வரிகள் வெளிப்பாடு அருமை

    1,3, 6 கவிதைகள் நல்லாருக்கு

    ReplyDelete
  8. எல்லாமே நச்...நச்...ரகம். அருமை.

    ReplyDelete
  9. முதல் மூன்று மிகவும் அருமை...

    ReplyDelete
  10. கோபம், சாரல், தவிப்பு அருமை சகோ.........

    ReplyDelete
  11. எல்லாமே நன்றாய்
    நடந்து கொண்டிருக்கும் போது
    நான் மட்டும் ஏன்
    இறகில்லாமலும் பறந்து கொண்டிருக்கிறேன்.
    ///////////////////////////////////////////////////

    ஒரு வேளை காதல் அப்பிடி இப்பிடி என்னு போயிட்டீங்களோ...:)
    அழகான வரிகள் அக்கா

    ReplyDelete
    Replies
    1. கல்யாணம் ஆன பெண்கள் காதலில் விழுவதற்கு நேரம் இருக்காது காரணம் அவர்கள் எப்போதும் மோதலில் ஈடுபட்டு கொண்டிருப்பதால்

      Delete
  12. //நான் மட்டும் ஏன்
    இறகில்லாமலும் பறந்து கொண்டிருக்கிறேன்///

    எனக்கு தெரிந்து தேவதைகள்தான் இறகில்லாமல் பறந்து கொண்டிருக்கின்றன அப்ப நீங்க????

    ReplyDelete
  13. ஒதுங்கி நின்றாலும்
    உரசி சிரிக்கிறது
    சாரல்.//
    நல்ல அழகான கற்பனை

    ReplyDelete
  14. அத்தனை குட்டி கவிதைகளையும் ரசித்தேன்... பாராட்டுகள்.

    ReplyDelete
  15. மிக ரசித்தேன்!

    ReplyDelete
  16. அடடா... அடடடடா....அடடடடா
    புல்லரிக்குது சசிகலா.

    ReplyDelete
  17. எனக்கு பிடித்ததெல்லாம்
    உனக்கு பிடிக்காமலும்
    உனக்கு பிடிக்காததும்
    எனக்கு பிடித்துப் போக
    என்னை மட்டும் உனக்கு
    பிடித்திருப்பதாகவே...
    நினைத்துக்கொள்கிறேன்
    நம்பிக்கை தான் வாழ்க்கையாம்.

    மிகவும் சிறப்பான கருத்து .தொடர
    வாழ்த்துக்கள் சகோதரி.....

    ReplyDelete

  18. கவிதைப் புயலே
    கற்பனை வயலே
    எழுது எழுது
    இன்னும் எழுது

    ReplyDelete
  19. எல்லாமே நல்லாயிருக்கு; ரொம்பவும் பிடிச்சது பட்டாம்பூச்சி! :-)

    ReplyDelete