Sunday 30 September 2012

சிறை பட்ட வரிகள் !



உன் கண்கள் காட்டுவது போல்
 கண்ணாடி கூட எனை
அழகாக காட்டுவதில்லை.


 சொட்டுச் சொட்டாக விழுந்து
 மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது
உன் நினைவைப் போல் மழையும்.


உனக்காக எழுத
விரல் பிடித்த பேனாவும்
விலகி ஓட்டம் பிடித்து
கிறுக்கிக்கொண்டேயிருக்கிறது.


நீ உறங்கும்
அழகைக் காண
விழித்திருக்கும் நிலவு.


சிரித்து விடாதே
சிறைப் படும்
கவிதைகள்.

26 comments:

  1. அழகு மிளிரும் கவிதை

    ReplyDelete
  2. வரிகள் மட்டுமா இங்கே சிறைபட்டு இருக்கின்றன.
    வார்த்தைகளும் அல்லவா உங்களிடம் சிறைபட்டு
    அவ்வப்போது ஒவ்வொன்றாக வெளியில் வருகின்றன.
    ஐந்தும் அருமை...

    1) கண்ணாடி என்பதே கண்ணின் வழி பார்ப்பதுதானே.

    2) மழையில் மூழ்குவது சந்தோசம் தானே.

    3) கிருக்களே இப்படியென்றால் சரியாக எழுதினால்..

    4) நிலவே விழித்திருக்கிறது என்றால் எண்ணிப்பாருங்களேன் மனிதர்களின் நிலையை...

    5) அதிகமாக சிரித்து விடாதே தினமும் சிரித்து விடு கொஞ்சமாக கொஞ்சும் கவி வரத்தான் இதையும் சொல்கிறேன்...

    பாராட்டுக்கள் சசி கலா. அத்தனையும் முத்துக்கள்.

    ReplyDelete
  3. மிக மிக அருமையான கிறுக்கல்கள் தோழி .ஒவ்வொரு வரிகளும்
    மனதில் இதமாக ஒட்டிக்கொண்டது தங்கள் கிறுக்கல்கள் போலவே .
    அதிலும் சிரித்து விடாதே சிறைப்படும் கவிதை மெய் சிலிர்க்க வைத்தது .
    மிக்க நன்றி பகிர்வுக்கு .மேலும் தொடர வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  4. அத்தனையும் அற்புதம்...

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. நீ உறங்கும்
    அழகைக் காண
    விழித்திருக்கும் நிலவு.
    excellent words

    ReplyDelete
  6. அத்தனையும் படித்தேன், ரசித்தேன்... நல்ல குறுங்கவிதைகள்... சகோ!

    ReplyDelete
  7. ரசனை ததும்பும் அழகிய கவிதை.நல்ல கற்பனை.

    ReplyDelete
  8. சிறகாய் பறக்கிறது மனம் வரிகளை வாசிக்கையில்...

    ReplyDelete
  9. ம்ம்ம் அருமை சகோ
    ஒவ்வொன்றும் முத்துக்கள்

    ReplyDelete
  10. குறுங்கவிதைகள் ஒவ்வொன்றும் அசத்துகின்றன. கடைசிக் கவிதை சிறப்பு. பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
  11. azhakaana padangal!

    azhakiya kavikal!

    ReplyDelete
  12. வித்தியாசமான பாணியில் உங்கள் தளத்தில் கவிதை காண்கிறேன் ... வாழ்த்துக்கள் அவித்தியாசமான பாணியில் உங்கள் தளத்தில் கவிதை காண்கிறேன் ... வாழ்த்துக்கள் அக்கா ...க்கா ...

    ReplyDelete
  13. வரிகளும் படங்களும் அழகு... அழகு... முடிவில்-மிகவும் அருமை...

    ReplyDelete
  14. அனைத்துக் கவிதைகளுமே சிறப்பூ...
    உனக்காக எழுத
    விரல் பிடித்த பேனாவும்
    விலகி ஓட்டம் பிடித்து
    கிறுக்கிக்கொண்டேயிருக்கிறது.
    /// அருமை!

    ReplyDelete
  15. நிழற்படங்களும் கவிதையும் அருமை

    ReplyDelete
  16. ///கண்ணாடி கூட எனை
    அழகாக காட்டுவதில்லை///

    வீட்டு கண்ணாடியை முதலில் துடையுங்க அப்புறம் பதிவு போடூங்க ஹீ...ஹீ

    ReplyDelete
  17. //நீ உறங்கும் அழகைக் காண விழித்திருக்கும் நிலவு./// அதுக்கு அடுத்த நாள் ஆபிஸ் போகணும்னு கவலை இருக்காதுங்க ஆனா உங்க கணவருக்கு அப்படி எல்லாம் விழித்து இருந்து பார்க்க முடியாதுங்க

    ReplyDelete
  18. ///சிரித்து விடாதே
    சிறைப் படும்
    கவிதைகள்.///

    கவலைப்டாதீங்க பெயில்ல கவிதையை எடுத்துடுறலாம் அதுக்கா சிரிக்காமள் இருக்க வைச்சுடாதிங்க அப்புறம் அழ வேண்டிய நிலமை வந்துடும்

    ReplyDelete
  19. ///உனக்காக எழுத
    விரல் பிடித்த பேனாவும்
    விலகி ஓட்டம் பிடித்து
    கிறுக்கிக்கொண்டேயிருக்கிறது.////

    கொடுக்க வேண்டிய செக்கை கொடுக்காமல் இருப்பத்ற்கு எப்படியெல்லாம் சாக்கு சொல்லுறாங்கப்பா

    ReplyDelete
  20. அருமை! ஒரு வார்த்தை கூட கூடுதலாக இல்லை.

    ReplyDelete
  21. எல்லாமே அசத்துது சசி !

    ReplyDelete
  22. ரசித்தேன் - சிறைபட்டு கிடப்பது வரிகள் மட்டுமா???

    ReplyDelete
  23. அருமை! அருமை! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  24. தொடக்கமே அமர்க்களம்

    ReplyDelete