Wednesday 5 September 2012

உயிர் வருடும் காதல் இதோ?



பத்து விரல் பிடித்திழுத்து
பக்கத்தில் எனையமர்த்தி
பாடென்று சொன்னதினால்
பயந்தோடி ஒளிந்தேனே...

கூடொன்று கண்டதினால்
குதித்தோடி மகிழ்ந்திருந்து
கும்மியடித்து தினம் ஓடி.....
குதூகலமாய் வாழ்ந்திருந்தேன்.

தென்றலெனை தீண்டியதாய்
புயலது கவி மழையாய்
காற்றசைவும் கீதமாய்
கடலினிலும் அலை தாலாட்டாய்.

உதிரத்தில் உன்நினைவே
உழன்றாடிக் களித்திருக்க
உறக்கத்தை தினம் விரட்டி
உயிர் வருடும் காதல் இதோ?

43 comments:

  1. அழகு நடை.. கொஞ்சிப்பேசும் கிளியின் பேச்சு கேட்குதே தாலாட்டாய் என்றுமே எனக்கு... ஆழ்ந்த உறக்கத்தில் கூட நானும் விழித்துக்கொண்டே இருப்பது போல் ஒரு உணர்வு... அருமையாக சொன்னவிதத்திற்கு பாராட்டுக்கள் சசி கலா தங்களுக்கு...

    ReplyDelete
    Replies
    1. ரசித்து பாராட்டியமைக்கு நன்றிங்க.

      Delete
  2. கூடு விட்டுக் கூடு பாய்ஞ்சு நானும் கிளியாய்டலாமோன்னு படத்தையும் கவிதையையும் பார்த்ததும் தோணிடுச்சு சசி. சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க கிளி ஆகனும்னு ஆச தான் என்ன பண்ண.

      Delete
  3. படிப்போரின் உயிரையும் வருடுகிறது காதல் (கவிதை) சசி.

    ReplyDelete
  4. ''...உதிரத்தில் உன்நினைவே
    உழன்றாடிக் களித்திருக்க
    உறக்கத்தை தினம் விரட்டி
    உயிர் வருடும் காதல் இதோ?...''

    ReplyDelete
  5. தென்றலெனை தீண்டியதாய்
    புயலது கவி மழையாய்

    அருமையான வரிகள். அழகாக காதலைச் சொல்கிறது.

    ReplyDelete
  6. படத்திலும் தங்கள் கவிதை வரிகளிலும்

    சும்மாக் கிளி கொஞ்சுது ! ;)))))

    பாராட்டுக்கள்.

    வாழ்த்துகள்.

    அன்புடன்

    vgk

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் மிகவும் மகிழ்வளித்தது ஐயா. நன்றி ஐயா.

      Delete
  7. உதிரத்தில் உன்நினைவே
    உழன்றாடிக் களித்திருக்க
    உறக்கத்தை தினம் விரட்டி
    உயிர் வருடும் காதல் இதோ?

    இவ் வரிகள் அருமை

    kudanthaiyur.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க.

      Delete
  8. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. உதிரத்தில் உன்நினைவே
    >>>>
    சங்கர் அண்ணா ஊருக்கு போய் இருக்காரா?

    ReplyDelete
    Replies
    1. ஏன் பக்கத்தில் இருந்தால் ஒத்துக்க மாட்டிங்களோ ?

      Delete
  10. கொஞ்சும் கிளி மொழிபோல் அழகிய கவிதை.

    பாராட்டுகள். இன்னும் இதுபோல் பல கவிதை படைத்து

    இலக்கியத்தில் நீங்கா இடம் பெற வாழ்த்துகிறேன்.

    அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.

      Delete
  11. அழகிய கவிதை.
    பாராட்டுகள்

    சுப்பு தாத்தா காவடி சிந்துமெட்டில் இங்கு பாட கேட்கவும்.

    ReplyDelete
    Replies
    1. கேட்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  12. சுப்பு தாத்தா வீடு இது.
    இங்கேயும் உங்க கவிதை ஒலிக்கக் கேட்பீர்.
    http://menakasury.blogspot.com
    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  13. ம்ம்ம் ...உயிர் வருடும் காதல்
    வருடுகிறது சகோ

    ReplyDelete
  14. அசத்தல் போங்க...

    ReplyDelete
  15. கவிதை கிள்ளைமொழி! :-)

    ReplyDelete
  16. தத்தை நெஞ்சம் தென்றலின் கவிமழையில் தத்தளித்து தனை மறந்ததோ..படமும் பொருத்தமான கவிதையும் அருமை சகோ..

    ReplyDelete
  17. காதல் வரிகள் கலக்கல்! அருமையான கவிதை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html

    ReplyDelete
  18. அழகான வார்த்தைகளால் அலங்கரித்துவிட்டீர்கள்.
    உங்கள் கவிதையை சுப்புத் தாத்தாவின் பாட்டாகவும் கேட்டுவிட்டேன். அருமை.

    ReplyDelete
  19. வருடுகிறது வரிகள்..

    ReplyDelete
  20. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. உயிர் வருடும் காதல் படிக்க
    எங்களையும் வருடுகிறது தான்... சகோ.

    ReplyDelete
  22. வணக்கம் அக்கா எப்படி சுகம் எவ்வளவு நாளாச்சு பாத்து.

    கவிதை றொம்ப நல்லா இருக்கு....

    ReplyDelete
  23. கவிதையும் கவிதைக்கேற்ற படமும் நன்று... பாராட்டுகள்.

    ReplyDelete
  24. அழகு கவிதையே

    அனைவருக்கும் பிடிக்கும்
    அடிஎனைபோல

    ReplyDelete
  25. படத்துக் கிளி அழகா,பாடிய கவிதை அழகா!அருமை.
    என் தளத்தில் தங்கமணி மீது நான் கொண்ட காதல் பாருங்களேன்--http://kuttikkunjan.blogspot.in/

    ReplyDelete