Sunday, 23 September 2012

சிறகொடித்தப் பார்வை !


பாவாடை ஏத்திச் சொருகி
படிக்கட்டில் ஆடி ஓடி...

பஞ்ச வர்ண கிளி ரசித்து
பாட்டுக்கு மெட்டெடுத்து

பனித்துளி படுத்துறங்க
பார்த்து ரசித்த மலர் வனம்

விரட்டிப் பிடித்த பட்டாம்பூச்சி
விரலிடுக்கில் ஓடிய மீனீனம்

விண்மீன்  பிடித்திழுத்து
விரலுக்கு சொடுக்கெடுத்து

நிலாச்சோறுக்கு நீண்ட கைகள்
கதை கேட்டே உறங்கிய திண்ணை

விட்டுக் கொடுக்காத பிடிவாதம்
விட்டு விலகாத நண்பர் கூட்டம்

படுத்துறங்க அன்னை மடி
பகற்ப்பொழுதில் பள்ளிக்கூடம்...

கூட்டாஞ்சோறாக்கிய களத்துமேடு
வரப்போறம் வம்பிழுத்த ஒற்றைப்பார்வை

உணர்வில் கலந்த குறும்பை
ஒடித்துப்போட்ட அந்தப் பார்வை

எதுவும் நினைவில் இனி
வேண்டவே வேண்டாம்
எடுத்து செல் இல்லை
எனை எரித்துச் செல்!

25 comments:

 1. //எடுத்து செல் இல்லை
  எனை எரித்துச் செல்!//

  என்ன தாயீ
  என்ன அப்படி ஒரு கோவம் !!


  பின்ன யாரு வருவாகளாம் !
  ஒன் கன்னத்துலே
  வழியும் நீரை வழிச்சுப் போட ??

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 2. kadaisi!
  pidichi thalluthu!

  nantri!

  ReplyDelete
 3. யப்பாடி... எடுத்துச் செல். இல்லை எரித்துச் செல் என்று அறம்பாடுற அளவுக்கு கவிதாயினிக்கு என்ன கோபம்? நினைவுகள் தாம்மா வரம், சாபம் எல்லாம். இருக்கட்டும் அவை... வரிகள் அழகு!

  ReplyDelete
 4. கனல் தெறிக்கும் வரிகளில் அருமை கவிதை

  ReplyDelete
 5. அவ்வித நினைவுகள் இல்லையேல் வாழ்வு பலநேரங்களில் ஒடிந்து விடும் அக்கா ..
  கவிதை கலக்கல்

  ReplyDelete
 6. கடந்தகால வாழ்க்கை
  நிகழ்கால நினைவு!
  கூடவரும் இந்தநொடி
  நாளைய தேடல்!
  நாளைய கனவுகள்
  இன்று முயற்சியாய்!

  ReplyDelete
 7. செம காண்ட்ல இருக்கீங்க போல நான் அப்பாலிக்கா வர்ரெen

  ReplyDelete

 8. செல்லேதான் உலகம்.! ம்ம்ம்ம்ம்.....!

  ReplyDelete
 9. என்னமா கோபம்...!

  வரிகள் அசத்தல்...

  ReplyDelete
 10. நினைவுகள் ஒவ்வொன்றும் இனிமையானவை...
  இறுதியில் கொலைவெறியுடன் முடித்துள்ளது ஏனோ...

  ReplyDelete
 11. முத்தாய்ப்பாய்ச் சொன்ன வரிகள்
  அருமையிலும் அருமை
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. குளத்து நீரில் அதிர்வலைகள் போல் நெஞ்சில் நீண்ட நினைவலைகள்! கவிதை வரிகள் அருமை!

  ReplyDelete
 13. //எதுவும் நினைவில் இனி
  வேண்டவே வேண்டாம்
  எடுத்து செல் இல்லை
  எனை எரித்துச் செல்!// ஏன் சகோ
  இவ்வளவு கோபம்

  ReplyDelete
 14. சந்தோஷமான நினைவுகள்தான் வாழ்வின் உந்துசக்தி !

  ReplyDelete
 15. எடுத்துசெல்லவும் முடியாது மீண்டும் அந்த தருணங்களை கொண்டுதரவும் முடியாது

  ReplyDelete
 16. கடைசி வரிகள்!வாவ்!

  ReplyDelete
 17. உங்களின் கடைசி வரி என்னை மீண்டும் முதல் வரியை நோக்கி நகர்த்திச் செல்கிறது.

  ReplyDelete
 18. சிறகொடித்தப் பார்வையா அல்லது சினங்கொண்ட பார்வையா ஏன் இந்த கோபம்...உங்களுக்கு கோபமே வராது என்றல்லாவா நினைத்தேன். தலையில் அடிபட்ட பின் ஆள் மாறிவிட்டீர்களோ சசி

  ReplyDelete
 19. என்னக்கா மென்மையா ஆரம்பிச்சி இப்படி கோவமா முடிசிடீங்க.. உங்களின் நினைவுகள் எனக்கு படிக்கும் போதே தென்றலா வருடுகிறது.. அனுபவித்தவர்களுக்கு எப்படி வலியாகும்?? அழகான கவிதை!!!

  ReplyDelete
 20. கடந்து போன அல்லது கடந்து வந்த பசுமையான நினைவுகள் ஒரு நிறைவான பெருமூச்சினைதானே கொடுக்கும்..? கோபம் புதிதாய் தெரிகின்றது...! மேலும் ஹேமா சொன்னது சரியானது..!

  ReplyDelete
 21. //படுத்துறங்க அன்னை மடி
  பகற்ப்பொழுதில் பள்ளிக்கூடம்...//

  arumaiyaana ninaivukal vaalththukkal

  ReplyDelete
 22. விண்மீன் பிடித்திழுத்து
  விரலுக்கு சொடுக்கெடுத்து

  அருமை அக்கா...

  எப்படி கற்பனை செய்ய முடிந்தது................

  ReplyDelete