Thursday, 13 September 2012

பனித்துளி சேகரிப்பாய் !மண்ணோடு விழுந்த விதையாய்
மனதோடு சேர்ந்த நினைவே
மன்னவனைக் காணமல்
மனம் சோர்ந்த கதையாமே !

திண்ணையில் முகம் தேடி
தினம் தினம் பாட்டெழுதி
திகட்டாத செந்தமிழும்
தித்திப்பாய் இனித்த போதும் !

திங்கள் ஒன்று ஓடிப்போச்சே
மனம் தின்றவனைக் காணோமே.
மன்னவனாய் வருவானோ ?
மலர் கொண்டு தருவானோ ?

கன்னம் குழிவிழ சிரிக்க
கதை சொல்லிப் போவானோ ?
முன்னம் ஒரு நாள் செய்தபடி
முறைத்தபடி நிற்பானோ ?

பனித்துளி சேகரிப்பாய்
பகல் கனவு கண்டிருந்தேன்
வழித்துணையாய் வந்தவனே
விழிக்கனவு பலித்திடுமோ
விரைந்தோடி வருவானோ ?

31 comments:


 1. ம்ம்ம் வருவார் .. இனிப்பான செய்தியோடு வருவார் ...
  மிகுந்த சொல்லாடல் .. எங்கோ எனக்காக காத்திருக்கும் தேவதை பற்றி
  சிந்திக்க வைத்தது இந்த கவிதை .. வாழ்த்துக்கள் அக்கா

  ReplyDelete
  Replies
  1. அப்படியா அரசனே..அரசனுக்காக காத்திருக்கும் ராணி விரைவில் வந்து கைபிடிக்க ஆசீர்வதிக்கின்றேன்...கனவில் அல்ல நிஜமாக...

   Delete
 2. பனித்துளி சேகரிப்பாய்... தலைப்பே மனசை இழுத்தது. கவிதையும் அதுக்கு வெச்கிருக்கற படமும் வெகு பொருத்தம், மன்னவன் விரைந்தோடி வருவானான்னு விம்முகிற இதயத்தோட காத்திருக்கற பெண்ணின் உணர்வுகளை எனக்குள்ளயும் கடத்தினது தான் இந்தப் ‘பா‘வின் வெற்றி. தொடர்ந்து கலக்குங்க தென்றல்!

  ReplyDelete
 3. திங்கள் ஒன்று ஓடிப்போச்சே
  மனம் தின்றவனைக் காணோமே.

  பனித்துளி சேகரிப்பாய்
  பகல் கனவு கண்டிருந்தேன்

  வார்த்தை ஜாலங்கள் கவிதையை ரசிக்க வைக்கின்றன வாழ்த்துக்கள்

  படம் நல்லா இருக்கு

  ReplyDelete
 4. ஏக்கம் நிரம்பிய பெண் மனது, கவிதையாய் வழிகிறது

  அருமை சசி.

  ReplyDelete
 5. //மன்னவனாய் வருவானோ ?
  மலர் கொண்டு தருவானோ ?

  கன்னம் குழிவிழ சிரிக்க
  கதை சொல்லிப் போவானோ ?//

  அழகான கவிதை. அருமையான வரிகள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. ஏங்க வைக்கும் வரிகள்... அரசனையே சிந்திக்க வைச்சிட்டீங்க... வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
 7. Replies
  1. ம் ஸ்ரெட்டு.

   Delete
  2. செளந்தர் அண்ணன் போலீசு..அவர்தான் டிபார்மென்ட்ல புதுசா சேர்ந்தவங்களுக்கு பயிற்சி கொடுத்துகிட்டு இருக்காருன்னா நீங்களுமா? :) :) :) :)

   Delete
  3. யாரப்பா அது சகோ அழகான கவிதை எழுதினா அதை பாராட்டுவதைவிட்டு விட்டு ரைட்டு லெப்ட்டுன்னு சொல்லுறது....நீங்கள் அப்படி எல்லாம் சொல்லிட்டா லேட்டா வரும் நான் அப்புறம் என்ன சொல்லுறதாம்.....அதுனால நான் நல்லா யோசிச்சு ஸ்டாண்டு அப் & சிட் டவுன் என்று சொல்லிவிட்டு சகோ வருவதற்கு முன் நான் ஒடிப் போகிறேன் ஸூட்......

   Delete
  4. ம் நடத்துங்க.

   Delete
 8. முறைத்தபடி நிற்பானோ ?
  >>
  உன்னை பார்த்தா முறைக்காம என்ன செய்வாங்க?

  ReplyDelete
 9. azhaku!
  arumai!
  silaakiththu vitten!

  ReplyDelete
 10. அழகாக சொல்லி வார்த்தைகளால் பின்னி இருக்கிறீர்கள்...அத்தனையும் முத்துக்கள்.
  தொடருங்கள் முத்துக்களை அழகாக கோர்த்து
  முடியுங்கள்..அதற்கு என் பாராட்டுக்கள்...

  ReplyDelete
 11. தலைப்பும் அதற்கான அருமையான
  விளக்கமாக ஆமைந்த கவிதையும் மிக மிக அருமை
  மன்ம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. வழி மேல் விழி வைத்து ஏக்கத்துடன் பாடும் கவிதை அழகு..அதற்கு ஏற்ற பொருத்தமான படமும் அழகு சகோ..

  ReplyDelete
 13. ம்ம் அழகான கவி........

  ReplyDelete
 14. திங்கள் ஒன்று ஓடிப்போச்சே
  மனம் தின்றவனைக் காணோமே

  மனம் தின்றவனைக் காணோமே அருமையான சொல்லாடல்.

  ReplyDelete


 15. வரிகள் தொறும் அருமை-வாரி
  வழங்குகிறாய் தமிழுக்குப் பெருமை

  ReplyDelete
 16. பனித்துளி சேகரிப்பாய்
  பகல் கனவு கண்டிருந்தேன்
  வழித்துணையாய் வந்தவனே
  விழிக்கனவு பலித்திடுமோ
  விரைந்தோடி வருவானோ ? superb

  ReplyDelete
 17. பனிதுளி சேகரிப்பாய் பகல் கனவு கண்டிருந்தேன்! வித்தியாசமான சிந்தனை! பாராட்டுக்கள்!

  இன்று என் தளத்தில்
  சரணடைவோம் சரபரை!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html

  ReplyDelete
 18. கவிதை அருமை!

  #சத்தியமா இது டெம்ப்ளேட் கமெண்ட் இல்லை :) :)

  ReplyDelete
 19. எங்களையும் ஏங்க வைக்கிறது வரிகள்.அருமை சசி !

  ReplyDelete
 20. கனத்தில் வந்தவனே..
  கண்முன்னே வருவாயோ
  கண்டபடி துடிக்கட்டுமென
  கண்ணாமூச்சி ஆடுவாயோ.....

  பெண்ணின் காதல் மனதை
  அழகான வரிகளுடன்
  சொல்லியவிதம் அருமை....

  ReplyDelete
 21. திண்ணையில் முகம் தேடி
  தினம் தினம் பாட்டெழுதி
  திங்கள் ஒன்று ஓடிப்போச்சே மனம்
  தின்றவனைக் காணோமே.

  இப்படி இணைத்தால்
  இன்னும் இனிக்கிறது !!

  சோகமே சுவை. அதை
  சொல்லும் விதமே இசை.

  சுப்பு ரத்தினம்.
  ( ஒரு மூன்று ராகங்களிலே சோகத்துக்கே சொந்தமான மெட்டுக்களிலே
  பாடி நான் மன நிறைவடைந்தேன்.
  உங்க்ளுக்கும் பாடிக்காட்டலாம். குரல் ஒத்துழைக்கவில்லை இன்று. )  ReplyDelete
 22. சோகத்தை சுகமாக்கிய விதம் அருமை!

  ReplyDelete