Monday 3 September 2012

உன்னுருவில் வாழ்ந்திருப்பேன் !

நேரம் காலம் புரியலையே
நேத்திரவு தூங்கலையே

நெற்றி வியர்வை சிந்தலியே
நெஞ்சோடணைத்து தூங்கலியே

காற்றடிக்கும் திசை வழியா ?
கதவடிக்கும் ஒலி வழியா ?

விரல் பிடித்த நடை வழியா ?
விட்டொழிந்த பகை வழியா ?

கண் கூசும் வெயில் வழியா ?
காதிசைத்த இசை வழியா ?

கண் மலர்ந்த பூ வழியா ?
கால் நடந்த பாதை வழியா ?

எந்த வழி தெரியலையே
எனக்கொன்றும் புரியலையே

என்னில் எப்படிக் கலந்தாயோ ?
எனக்கென கவி முகவரி தந்தாயோ...

எம்தமிழே என்னுயிரே
இப்பிறவி போதாதே....

உன்னழகை நான் ரசிக்க
உயிர் பிரிந்து போனாலும்
உன்னுருவில் வாழ்ந்திருப்பேன் !

23 comments:

  1. அழகு கவி..தமிழால் தமிழை உச்சத்திற்கு கொண்டு சென்று விண்ணையும் தாண்டி முயற்சிக்கும் உங்களின் எண்ணங்களை வெகுவாக பாராட்டுகிறேன்.சசி கலா...

    ReplyDelete
  2. இதனை வழிகளில் தேடும் கவிதை யை அழகுற தந்திருக்கும் விதம் நன்று வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. very superb pa... i like that tamil kavidhai very much

    ReplyDelete
  4. தாய்மொழியில் பா உருவில் என்றும் வாழ்ந்திருப்பாய், கவிதாயினி.

    ReplyDelete
  5. அருமையாக முடித்துள்ளீர்கள் சகோதரி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. ''..எம்தமிழே என்னுயிரே
    இப்பிறவி போதாதே....''
    ஆம் இப்பிறவி போதாது.
    மிக நல்ல வரிகள் நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.
    (என்வலையில் மட்கும் மனிதம் பூத்துள்ளது)

    ReplyDelete
  7. ம்ம்ம் ..அருமை கவிதாயினி

    ReplyDelete
  8. தமிழ்க்காதல் அருமை

    ReplyDelete
  9. எம்தமிழே என்னுயிரே
    இப்பிறவி போதாதே..
    >>>
    எதுக்கு தமிழை கடிச்சு துப்பவா?

    ReplyDelete
  10. படித்து பின் கருத்து பகிர்கிறேன் சசிகலா....

    அன்புடன் ரமணிசார் எனக்கு தந்த விருதினை தங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

    ReplyDelete
  11. அன்பு வாழ்த்துகள் சசிகலா...

    ReplyDelete
  12. உன்னழகை நான் ரசிக்க
    உயிர் பிரிந்து போனாலும்
    உன்னுருவில் வாழ்ந்திருப்பேன் !

    சிறப்பாக உள்ளது
    சிந்திக்கவும் வைக்குது
    பிறப்பாலே தமிழனென
    பெருமைகொள்ள சொல்லுது

    ReplyDelete
  13. எம்தமிழே என்னுயிரே
    இப்பிறவி போதாதே....

    அழகிய வரி!!
    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  14. நன்றாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  15. தமிழை சிறப்பித்த கவிதை அருமை சகோதரி! நன்றி!

    இன்று என் தளத்தில்
    பேய்கள்ஓய்வதில்லை!பகுதி7
    http://thalirssb.blogspot.in/2012/09/7.html

    ReplyDelete
  16. தமிழ் மீது உள்ள மொழிப்பற்று கவிதையின் வரிகளில் அழகாக பொங்கி வழிகிறது சகோ..

    ReplyDelete
  17. சுவையான பகிர்வு... வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  18. எளிமை இனிமை நன்று

    ReplyDelete
  19. உயிர் பிரிந்து போன பின்பும் உன்னுருவில் வாழ்ந்திருப்பேன் என சொல்கிற பிடிவாதம் மிகவும் அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. எளிய நடையில் அழகிய கவிதை வரிகள்.....
    நேசம் மனதில் தொடங்கிவிட்டால் கவிதை வரிகள் அனாயசமாக அழகாக வெளிப்பட ஆரம்பிக்கிறது சசி....

    காதல் எனும் வாசம் மனதில் மலர்ந்திருக்கும்போது எங்கிருந்து நேரம் காலம் தெரிவது? தூக்கமும் வராது.... உணவும் இறங்காது....பகையை கூட காதல் தன் வசமாக்கிவிடும் என்று அறியமுடிகிறது.... காதல் வந்த வழி எது தேடிச்செல்லும் அழகு அலாதி..... நேசத்தை என்றும் அழியா தமிழுக்கு ஒப்பாக்கி உயிருக்கு ஒப்பாக்கி....

    இருந்தாலும் இல்லையென்று ஆனாலும் உன் உருவில் வாழ்ந்திருப்பேன் என்று முடித்திருப்பது மிக அழகு சசி...

    அன்பு வாழ்த்துகள் சசி அழகிய கவிதை வரிகளுக்கு.

    ReplyDelete