Thursday, 20 September 2012

படைப்பிலேன் பேதங்கள் !


கடவுளைக் கேட்ப்பதற்கு
கேள்விகள் ஏராளமுண்டு!
படைப்பிலேன் பேதங்கள்
ஊனமென்றும் குருடெனவும்!

உதாரணமவரென்றுரைத்தல்
நீதியில்லையது அநீதிதான்!
என்ன பாவமவர் செய்தார்
கேட்டால் முன்னோர் செய்த
முன்வினை பாவமென்பார்!

படைத்தது பாவமா அதில்
பாவம் கலந்தது மாபாவமா?
சிந்தித்தால் குற்றவாளி....?
அறிவுவைத்த இறைவனேன்
அளவுகோல் வைக்கவில்லை?
நன்மையெது தீமையெதறிய
கண்ணுக்கும் தெரிவதில்லை!

வெற்றியொருவன் பெறுவதற்கு
தோல்வியொருவர் சுமக்கலாமா?
கரையெது தெரிந்துவிட்டால்
கவலையில்லை பயணத்திலே!
வரம்புகளை வைத்துவிட்டு
நாடகங்கள் அரங்கேற்றம்!

அவரவர் பாத்திரத்தை
நடிக்கின்ற போராட்டம்!
நேராய் ஓடா நண்டினங்கள்
நேர்மைதவறும் மனிதர்போல்!
நாணயமில்லா நரிக்கூட்டம்
ஏய்த்துப் பிழைக்கும் எத்தகராய்!

பாடித்திரியும் பறவைகள்போல்
இசைக்காய் வாழும் வித்தகர்கள்!
ஆடிக்களிக்கும் அன்னவடிவில்
கலைகாக்கும் மணிப்பாதங்கள்!
காக்கின்ற உயர் சிங்கங்களாய்
வாழ்ந்திருக்கும் வழிகாட்டிகள்!

பாய்ந்தோடும் ஜீவநதிபோன்று
கவிதைபாடும் கண்ணொளிகள்!
அசைந்தோடும் மெனகாற்றாக
தழுவிநிற்கும் மலைமேகங்கள்!
கனிகொடுக்கும் மரங்களாக
வாழ்ந்திருக்கும் பூமாதேவி!

நீலவான் மேனியிலே தாங்கும்
கதிரோனும் வெண்ணிலவும்!
உப்புநீர் பள்ளத்தாக்கில் வாழும்
கோடிகோடி உயிரினங்கள்!

எல்லாம் சரியாய் சமைத்து
எமக்குமட்டும் ஆறறிவுவைத்து.
நன்மைதீமை சேர்த்துதந்து
விதியெழுதியதேனோ-இது
மதியெழுதிய வினையோ?

14 comments:

 1. padaippilum artham irukku....

  ReplyDelete


 2. // நீலவான் மேனியிலே தாங்கும்
  கதிரோனும் வெண்ணிலவும்!
  உப்புநீர் பள்ளத்தாக்கில் வாழும்
  கோடிகோடி உயிரினங்கள்! //

  அந்த நீல வானில்
  இந்த உயிரனங்கள்
  உயிருடன் இருப்பது
  எப்படி சாத்தியம் ?
  ஒப்புதல் சரியோ என நீ
  உரப்பது புரிகிறது !!

  ஆகவே !! கதிரே ! நிலவே நீங்கள்
  ஈசனாய் உலவி வானில்
  ஊணும். யாம் என்றும்
  ஏங்காதவாறு நல் நீரும்
  ஓயாது தந்திடுவாய் !!

  சுப்பு ரத்தினம்.
  http://vazhvuneri.blogspot.com  ReplyDelete
  Replies
  1. வரம்புகளை வைத்துவிட்டு
   நாடகங்கள் அரங்கேற்றம்!

   கேள்விக்கு என்ன பதில் சொல்வது. இது எல்லாவற்றையும் சமன் செய்யும் ஒன்று அன்பு மட்டும் தான்.

   Delete
 3. இவையெல்லாம் யோசிக்க, தீர்வு காண தான் ஆறறிவு வைத்தானோ...?

  ReplyDelete
 4. ஆறறிவு பெற்ற உயிரினமான மனிதனும் பல சமயங்களில் மனிதத்தை இழந்து நிற்கையில் ஐந்தறிவாய் மாறி விடுகிற விந்தையும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது தென்றல். மனதைத் தொட்ட அழகிய வரிகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள் உங்களுக்கு.

  ReplyDelete
 5. கடவுளைக் கேட்ப்பதற்கு
  கேள்விகள் ஏராளமுண்டு!
  படைப்பிலேன் பேதங்கள்
  ஊனமென்றும் குருடெனவும்!


  நெடு நாளாய் என்னை வாட்டும் கேள்வி இது  ReplyDelete
 6. தலைப்பும் அது தொடர்பாக எழுப்பிச் செல்லும்
  கேள்விகளும் மிக மிக அருமை
  ஆழமாக சிந்தித்து எழுதியுள்ள படைப்பு
  மனம் கவர்ந்தது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. // கடவுளைக் கேட்பதற்கு
  கேள்விகள் ஏராளமுண்டு! //
  ஒவ்வொருவர் கையிலும் ஆயிரம் கேள்விகள் அடங்கிய வினாத் தாள்கள். அதனால்தான் அவன் ஓடி ஒளிந்து கொண்டான் போலிருக்கிறது. எங்கு தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை!

  ReplyDelete
 8. ம்ம்ம் அருமை எல்லாமே பிடித்த வரிகளாய் அமைந்து விட்டன அக்கா...................................

  ReplyDelete
 9. கடவுளிடம் கேள்வி கேட்டால் கடவுளுக்கு சொல்ல தெரியாது...! மனிதனிடம் சில கேள்விகளை கடவுள் வைத்தால் மனிதனுக்கும் பதில் சொல்ல முடியாது...!

  ReplyDelete
 10. எல்லோருமே பலகேள்விகளோடுதான் அந்தக் கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.அகப்பட்டால்தானே !

  ReplyDelete
 11. எல்லாம் சரியாய் சமைத்து
  எமக்குமட்டும் ஆறறிவுவைத்து.
  நன்மைதீமை சேர்த்துதந்து
  விதியெழுதியதேனோ//

  ஏன் என்ற கேள்விமட்டும் என்றைக்கும் தங்கும்! மனிதன் இன்பதுனபம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்!//
  கவியரசரின் வரிகள் நெஞ்சில் ஓடியது!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete