Wednesday 5 September 2012

களவும் கற்றதே !


கண்ணா உன்னை பார்த்த பின்னே
கதையும் பேசுதே விழியிரண்டும்
களவும் கற்றதே....

முன்னே உனை போகவிட்டு
பின்னே அலையுதே -மனமும்
உன்னே சுத்துதே....

கண்ணே மணியே எனவும் கொஞ்ச
கனவு காணுதே -என்னில்
என்னே விந்தை -மதியில்
எண்ணும் எழுத்தும் மறந்தே போனதே !

36 comments:

  1. எண்ணும் எழுத்தும் மறந்து போனப்பறம் கூட இப்படி கவிதையா கொட்ட முடியுதுன்னா... மறக்காட்டி என்ன ஆகியிருக்கும்? அசத்தறீங்க தென்றல்!

    ReplyDelete
    Replies
    1. மதியில்
      எண்ணும் எழுத்தும் மறந்தே போனதே !
      >>
      விடுங்கண்ணா, சசி கீழ விழுந்து அடிகிடி பட்டிருக்கும், அதனால் மறந்து போய் இருப்பா

      Delete
    2. அண்ணனுக்கும் தங்கைக்கும் கிண்டல் போதுமா? என்னடா அடி பட்டிருக்காலே வந்து பார்ப்போம்னு இல்ல கிண்டலு........

      Delete
  2. நல்ல வரிகள்...

    என்னமா சிந்திக்கிறீங்க சகோ...

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு மேல சிந்திச்சா இங்க அடிக்க வறாங்க சகோ. தலைல அடி பட்டும் அடங்க மாட்டியானு...

      Delete
  3. காதல் களவும் கற்கும்!...............

    நல்ல படைப்பு தோழி

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ இது காதல் களவு இல்லை கவிதை களவும் கற்றது.

      Delete
  4. விழியிரண்டும் களவும் கற்றதே... அதுதான் திருட்டு முழியோ! நல்ல கவிதை . ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. திருட்டு முழியில்லங்க திருட்டு பதிவு உடம்பு சரியில்லாம ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க யாரும் இல்லாத நேரமா வந்து ஒரு பதிவு எப்படி.......

      Delete
  5. எண்ணும் எழுத்தும் மறந்தும் கவிதையா

    ReplyDelete
  6. என்னங்க கவிதை சுருங்கிட்டே போகுது...

    அதுக்கு நல்ல ஊட்டசத்தா கொடுங்க...

    ReplyDelete
    Replies
    1. மண்டைல 3 தையல் போட்டா சுருங்காம என்ன செய்யும்.

      Delete
    2. //மண்டைல 3 தையல் போட்டா சுருங்காம என்ன செய்யும்.//

      ஓ...அதான் step up 3 கவிதையா...கவிதை சுருங்கினாலும் இனிமையில் குறைவில்லை சசி..

      Delete
    3. அடடா எல்லாம் ஒரு முடிவோட தான் இருக்கிங்க யாரும் எனக்கு அடி பட்டா கூட கவலைப் படமாட்றாங்களே ?

      Delete
    4. மண்டையில 10 தையல் போட்டிருக்கலாமோ?

      Delete
  7. கண்ணன் மேல் கவிதை .... நல்லா இருக்கு, பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  8. கலக்கல் அக்கா .. சுருக்கமாக நறுக்கென்று உள்ளது

    ReplyDelete
  9. நல்ல தொரு படைப்பு! சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    பழஞ்சோறு! அழகான கிழவி!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

    ReplyDelete
  10. களவும் கற்று மற என்பார்கள். ஆனால் அந்தக் களவைப் போல் அல்லாது இந்தக் களவு அப்படி இல்லை என்பதை உணர்த்தும் வரிகள்!

    ReplyDelete
  11. சசிகலா... மண்டையில அடிபட்டதுல ஏதும்
    மூளைகீளைக் கலங்கலையே....!!!
    பாடல் நன்றாகத் தானே உள்ளது...
    அடுத்த வரிகளை எழுத மறந்து விட்டீர்கள் போல் இருக்கிறது.

    இருந்தாலும் நல்லா ரெஸ்ட் எடுத்துவிட்டு எழுதுங்கள்.
    இல்லாவிட்டால் கற்ற களவும் மறந்துவிட போகிறது சகோ.

    ReplyDelete
  12. அற்புதமான சிந்தனை////

    ReplyDelete
  13. கவிதை நல்லாருக்கு அக்கா..

    ReplyDelete
  14. தமிழ்தன்னுயிர் தமிழை மறப்பதில்லை
    கவி கவிதையை மறக்காததுபோல்!

    ReplyDelete
  15. கண்ணா கண்ணா அழகாக என்று புலம்பிவிட்டு பெண்படம் போட்டதற்கு எனது கண்டனம். இப்படி எல்லாம் கவர்ச்சி படம் போட்டு எங்களை மாதிரி உள்ள ஆண்களின் மனதை நோக அடிக்காதீர்கள் இதெல்லாம் கவர்ச்சி படமா என்று கேட்காதிர்கள் எனக்கு இதெல்லாம் கவர்ச்சிதான் ஹீ ஹீ

    ReplyDelete
  16. கவிதையில் மிளிரும் காதல் அழகு சசி.

    என்னாச்சு சசி தலையில் அடிபட்டிருக்குன்னு சொல்றீங்களே... உடல்நலத்தை முதலில் கவனித்துக்கொள்ளுங்க. அப்புறம் பாக்கலாம் வலைப்பக்கம்.

    ReplyDelete
  17. பாடல் வரிகளை இன்னும் கூட்டியே எழுதியிருக்கலாம் சசி. அருமையா இருக்கு.

    ReplyDelete
  18. கவி அழகா இருக்கு அருமை அக்கா...

    ReplyDelete
  19. சசிக்கு ஏதோ ஆயிடிச்சா? மண்டையிலா மனதிலா?

    சிறப்பான கவிதை சிந்திக்க வைக்குது

    ReplyDelete