Tuesday 21 August 2012

மனதுக்கு விடியலில்லை !


சட்டெனப் பறந்து பட்டென விழுந்த,
சிட்டொன்று தரையினிலே,
மீண்டுமது தானேஎழுந்து பறக்குமா,
காத்திருந்து பார்த்திருந்தேன்.

தாயோடிவந்து கிளைதனில் அமர்ந்து.
அபயக் குரல் கொடுக்க,
உறவுகள் யாவும் பறந்தோடிவந்து,
அதனுடன் தோள்கொடுக்க.

இறகுகள் முளைக்குமுன் பறக்க நினைத்த,
மழலை அழுகைகண்டு,
தவிப்புடன் அங்கு மிங்குமென பறந்தன,
காப்பாற்ற வழியின்றி!

மனிதவாழ்விலும்  நிகழ்வுகள்,
சகஜம் என்றுணர்ந்தேன்.
சிதறிய கண்ணீரில் ஆயிரம் கதைகள்,
ஒளித்து வாழ்கிறது.

அன்புத் தாகம் அறிவற்ற விவேகம்,
ஆளும் காலமுண்டு.
இளமையில் இதயம் தேடிய நினைப்பில்,
விழுந்தவர் பலருண்டு.

மீண்டுவந்திட நெஞ்சம் துடிக்கும்
குணம் கோடு போடும்.
மீளாத்துயரில் மாண்டுபோகும்
மனதுக்கு விடியலில்லை.

11 comments:

  1. உண்மைதான்... அறியாமல் செய்யும் புரியாத வயதில் அனைத்துமே இப்படித்தான் அமைந்துவிடும்... தவறி விழுந்தாலும் பாதிப்பு இல்லாத ஒன்றாக இருக்கவேண்டும்... அதற்கு ஏற்ற பக்குவம் முதலில் எற்படவேண்டும் முதலில்.

    அத்தகைய பக்குவத்தை அந்த வயதில் ஒருசிலர் மட்டுமே பெற்று மீண்டும் மீண்டு வந்து விடுகிறார்கள். தெளிவான எண்ணம் ஒன்று எப்போதும் இல்லாத மனது எந்த வயதானாலும் சரி
    அவர்களால் விடியல் என்ற ஒன்றை காணவே முடியாது இவ்வுலகை விட்டு செல்லும்வரை...
    நல்லதொரு கருத்தை சொன்னவிதம் பாராட்டுக்குறியது சசி கலா... அதற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. தாயோடிவந்து கிளைதனில் அமர்ந்து.
    அபயக் குரல் கொடுக்க,
    உறவுகள் யாவும் பறந்தோடிவந்து,
    அதனுடன் தோள்கொடுக்க.

    இந்த வரிகளில் உள்ள பாசமும்,நேசமும் மனிதத்தில் இறந்து விட்டது..ஆதரவு இல்லா மனதுக்கு விடியல் எங்கே..?குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி என்பது ஏது.. கருத்தான கவிதை சகோ.

    ReplyDelete

  3. மீண்டுவந்திட நெஞ்சம் துடிக்கும்
    குணம் கோடு போடும்.
    மீளாத்துயரில் மாண்டுபோகும்
    மனதுக்கு விடியலில்லை.//

    நீங்கள் சொல்வது சரிதான்
    இது மனிதனுக்கு மட்டுமே உள்ள குணம்
    வித்தியாசமான கோணத்தில் எதையும் சிந்திக்கும்
    தங்கள் சிந்தனை திறன்
    தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தலைப்பிற்கேற்ற அருமையான கவிதை சகோதரி....
    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  5. அருமையாக உள்ளது சகோ! தொடரட்டும்! வாழ்த்துக்கள்...
    "விடை தேடும் காதல்" .......
    காதலிக்கும் அனைவருக்காகவும்,காதலை நேசிப்பவருக்கும்...
    காதலின் விடை தேடும் காதலி எழுதும் கவிதை இது....
    உங்களை என் வலைக்கு அன்புடன் வரவேற்கிறேன்...

    ReplyDelete
  6. பதிவர் சந்திப்பிற்கு வரும் அனைத்து பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..அடுத்த பதிவர் சந்திப்பில் அவசியம் கலந்து கொள்கிறேன் சகோ..

    ReplyDelete
  7. ஆழமான பொருள் பொதிந்த வரிகள்.அருமை

    ReplyDelete
  8. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
    ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

    ReplyDelete
  9. அழகான அர்த்தம் பல புதைந்துள்ள கவிதை அக்கா

    ReplyDelete
  10. ////அன்புத் தாகம் அறிவற்ற விவேகம்,
    ஆளும் காலமுண்டு.
    இளமையில் இதயம் தேடிய நினைப்பில்,
    விழுந்தவர் பலருண்டு.
    ///

    வரிகள் எல்லாம் அருமை...

    ReplyDelete