Wednesday 29 August 2012

அறிமுக அம்பலம் !



அவரவர் எழுத்துக்களை
முன் நிறுத்தி....
அதற்கான முகங்களை
தேடித் தேடி களைத்துப்போனேன்.

செல்லப் பெயரோ...
ஜாதகப் பெயரோ...
அம்மா வைத்த பெயரோ
அப்பா வைத்த பெயரோ..
எந்தப் பெயரால் அழைத்தும்
அடையாளம் தெரியாது.

விழி வலை விரித்ததில்
வலைக்கு வைத்த பெயரே
எங்களுக்கு முன்
சுயஅறிமுகம் செய்துகொண்டு
எங்களையும் அறிமுகப்படுத்துகிறது.

41 comments:

  1. /// விழி வலை விரித்ததில்
    வலைக்கு வைத்த பெயரே ///

    அருமை... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 1)

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் உங்களையும் இந்த பெயர்தான் அறிமுகம் செய்தது.

      Delete
  2. உண்மைதான் சசி கலா... வைத்த பெயரை விட வந்த பெயர்தான் நிலைத்தும் விடுகிறது...வலைவீசி தேடிய பெயரல்லவா...அதுவும் தமிழ்வலையால் வீசி கிடைத்த பெயர் என்றால் சொல்லவா வேண்டும்... அதனுடைய மகிமையை தமிழ் வலைப்பதிவர்களின் திருவிழா அன்றுதானே கண்டோம்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சிற்பபான நிகழ்வு.

      Delete
  3. //
    விழி வலை விரித்ததில்
    வலைக்கு வைத்த பெயரே
    எங்களுக்கு முன்
    சுயஅறிமுகம் செய்துகொண்டு
    எங்களையும் அறிமுகப்படுத்துகிறது
    //

    உண்மைதான்! (TM 2)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ . உங்க உண்மையான பெயர் என்ன?

      Delete
  4. அறிமுகத்தையே அம்பலப்படுத்துறீங்களா...
    நல்ல வரிகள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ . உங்க உண்மையான பெயர் என்ன?

      Delete
    2. ஆகா முதன் முதலாக என்னுடைய உண்மைப் பெயரைக் கேட்குற ஆள் நீங்கதானாக்கும்...:)
      http://www.facebook.com/moosa.imran

      இதுதான் என் முக நூல் முகவரி அங்கே அனைத்தையும் காணலாம்

      Delete
  5. //விழி வலை விரித்ததில்
    வலைக்கு வைத்த பெயரே
    எங்களுக்கு முன்
    சுயஅறிமுகம் செய்துகொண்டு
    எங்களையும் அறிமுகப்படுத்துகிறது.//

    மிகவும் உண்மை தான்.

    உண்மையை
    மென்மையாகச் சொன்ன தங்களின்
    மேனமையைப் பாராட்டுகிறேன்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் வருகையும் பாராட்டும் எனக்கு மிகவும் மகிழ்வளித்தது நன்றி ஐயா.

      Delete
  6. பேரைச் சொன்னா யாருன்னு கேக்குறாங்க...


    என்ன பண்றது.. அதனாலதான் கவிதைவீதி-யை பேருக்கூடவே ஒட்டி வைச்சிக்கிட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க நானும் சசிகலா என்றால் யாரு தென்றலானுதான் கேட்குறாங்க என்ன பண்றது.

      Delete
  7. அறிமுக அம்பலம் அல்ல தென்றல்... அறிமுக அமர்க்களம் என்றுதான் சொல்லணும்.அருமையான சொல்லாடல்.

    ReplyDelete
    Replies
    1. ம்க்க்கும் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அவளை கவிதன்ற பேருல கண்டதையும் கிறுக்க வெச்சு, புக் வெளியிடுற செலவை அண்ணன் தலையில் விழ வைக்குறிங்கண்ணா

      Delete
    2. பொறாமை பா உங்களுக்கு நல்லது நீங்க என் அவரை பார்க்காம கிளம்புனது இல்லனா போட்டு கொடுத்துயிருப்பிங்க போல.

      Delete
    3. நிஜமாவே பொறாமைதான் எங்க அண்ணன் காசுலாம் வீணாகுதேன்னு. இன்னொரு தபா சென்னை வரும்போது அண்ணனை மட்டும் தனியா வரச்சொல்லி, சூதனமா நடந்துக்கோ ஷங்கர்ன்னு சொல்லி குடுத்துட்டுதான் போவேன்.

      Delete
    4. ஒரு முடிவோடதான் இருக்கிங்க போல நடத்துங்க.

      Delete
    5. எனக்கு ஒரு புக்கு வெளியிடனும் ; யாரை இதுக்கு ஹெல்ப் கேட்கணும்? சொல்வீங்களா? (இது சீரியஸா காமெடியா என யோசிச்சு சொல்லுங்க)

      Delete
  8. /// விழி வலை விரித்ததில்
    வலைக்கு வைத்த பெயரே ///
    ரெம்ப ரெம்ப ரெ ம்ம்ம்ப பிடித்த வரிகள்..அருமையான சொல்லாடல் சகோ..

    ReplyDelete
  9. அறிமுகம் அருமை...

    ReplyDelete
  10. உண்மை. வலையுலகப் பெயரே நிஜப் பெயராய் நிலைக்கிறது. முகங்களைவிட முகமூடிகளே இங்கு அதிகம்.

    ReplyDelete

  11. எனக்கொன்றும் புரிவதில்லை. எதற்காக வலைக்கென்று ஒரு பெயர் வைத்துக் கொள்ள வேண்டும்? கவிதை வீதி என்ற வலைப் பெயருக்கு முன்னிலை கொடுத்ததால்தான் பெயரைச் சொன்னாலும் யார் என்று கேட்கிறார்கள்.சிலர் தாங்கள் யார் என்று தெரிவிக்காமலேயே அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார்களோ என்னவோ.ஒவ்வொருவிதமான பதிவுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து எழுதி அப்பெயரால் என்ன விதமான பதிவுகள் என்றுதெரியும் விதத்தில்புனைப் பெயரில் எழுதியவர்கள் உண்டு.நீங்கள் சொல்ல வந்ததைவிட சொல்லாமல் விட்டதை புரிந்து கொள்ளட்டும் என்று எழுதியது போல் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தெளிவு படுத்தும் தங்கள் வரிகள் கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  12. உண்மையான கருத்துக்கள்! அருமை!

    இன்று என் தளத்தில்!
    கழுதை கௌரவம் கிடைக்கலேன்னா!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_29.html
    ஹன்சிகா ரகசியங்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_7318.html

    ReplyDelete
  13. தென்றலில் எப்பொழுதுமே
    இனிமை இருக்கத்தான் செய்கிறது.
    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ.

      Delete
  14. நூற்றுக்கு நூறு உண்மை.

    பள்ளியில், கல்லூரியில், நான் இடையறாது 41 ஆண்டுகள் பணி புரிந்த நிறுவனத்திலும்
    எனது பெயர் சூரிய நாராயணன், என்பதை சூரி, எனவும் சூர்யா எனவும், பிற்காலத்தே
    சூரி ஸார் எனவும் அதுவும் முடங்கிப்போய் வெறும் "ஸார்" என ஆயிற்று.

    எனக்கே என் பெயர் மறந்து போய் விட்ட நிலைதான்.

    வலைப்பக்கம் 1997ல் வந்த பொழுது எனது பாட்டனார் வைத்த பெயர் சுப்பு ரத்தினம்
    என்பதை நினைவுகொண்டு அதையே முன்னிட்டேன். எனது பதினைந்து வலைகளிலும் என்னை
    சுப்பு ரத்தினம் அல்லது சுப்பு தாத்தா என்றே நேயர்கள், நண்பர்கள் அழைக்கின்றனர்.

    மனதிற்கு இதமாகவும் இருக்கிறது.
    பெருமிதமாகவும் இருக்கிறது.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  15. உங்களுக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிடைத்தது.என்வலைக்கு என் பேரையே வச்சது தப்பாப் போச்சு.
    கவிதை நன்று.

    ReplyDelete
  16. சரியாய்ச் சொன்னீர்கள்!

    ReplyDelete
  17. அருமை அருமை !!!

    தோன்றின் புகழொடு தோன்றுக வலைப்பதிவு பெயரோடு !

    ReplyDelete
  18. கவிதை பத்தி சொன்னா நான் வீடுதிரும்பலால் அறியப்படுறேன் அப்படிம்பீங்க ரைட்டு ஜூட்

    ReplyDelete
  19. விழி வலை விரித்ததில்
    வலைக்கு வைத்த பெயரே
    எங்களுக்கு முன்
    சுயஅறிமுகம் செய்துகொண்டு
    எங்களையும் அறிமுகப்படுத்துகிறது.

    உண்மைதான்!

    ReplyDelete