Tuesday 28 August 2012

பதிவர் சந்திப்பில் படுத்திய நான் பேச பயந்த நண்பர்கள் !

நிகழ்ச்சிக்கு போறோமே புகைப்படம் எடுக்கலாம் என்று ஒளிப்படக்கருவி எடுத்திட்டு வந்தேன் . எனக்கு புகைப்படம் எடுக்க தெரியாது என்று
ராஜி அக்கா மகளிடம் கொடுத்தேன் அவங்க ஏற்கனவே எடுத்துக்கொண்டிருந்ததால் ராஜி கவிதை வீதிசௌந்தரிடம் தருவதாக சொன்னாங்க 
சரி என்றேன். ராஜி அக்கா சொன்னதோட சரி கொடுக்கவேயில்லை. நானே அவர் இருக்கைக்கு சென்று நண்பரிடம் கொடுத்து உங்கள் விருப்பம்
எப்படி வேண்டுமானாலும் வளைச்சி வளைச்சி எடுங்க என்று சொல்லிவிட்டு வந்தேங்க.

நேற்று எல்லோரும் பதிவர் சந்திப்பு குறித்து பதிவிடுவார்களே நாமும் புகைப்படங்களை வைத்து பதிவிடாலம் என்று என் ஔிப்படக் 
கருவியை எடுத்து பார்த்தால் நண்பர் செய்ததை நீங்களே பாருங்கள்.


இவ்ளோதாங்க இந்த படங்கள வச்சி நான் என்ன பதிவு போட முடியும் ? கீழ இருக்கிற படங்கள திருடி இப்படி பதிவு போட வச்சிட்டாங்க கவிதை வீதி சௌந்தர்.



பேசும் போதே இப்படி பார்த்த இவங்களோட நாம எப்படி பேசுறது ?

இவர் தோற்றமே அடிக்கிற மாதிரி இருக்கே அதாங்க அவங்க இருக்க பக்கமே போகல.
என்ன சோகம் தெரியளங்க இவருக்கு அதனால இவரோடவும் பேச முடியள.
யாராவது பேச வந்தீங்க என்று கேட்பது போல் இருக்கு அதனால இவரோடவும் பேச முயற்சிக்கவில்லை.
எப்பவும் பிசியாக இருப்பதாக காட்டிக்கொண்ட சிபி அதனால் அவரிடமும் பேச முடியவில்லை.

56 comments:

  1. அம்மாடி...

    ஏங்க என்னோட கேமராவில் கூட சரியா படம் எடுக்கிலிங்க...

    போட்டோ நிறைய எடுக்கனுன்னுதாங்க கேமரா எடுத்துகிட்டு வந்தேன்...

    ஆனால் அங்க கொஞ்சம் பிஸியா இருந்ததாலே இந்த பிரச்சனை...

    போட்டோ தேவைன்னா கேமராமேன் எடுத்த புகைப்படங்களை பெற்றுக் கொள்ளலாம் கவலை வேண்டாம்...

    ReplyDelete
    Replies
    1. சும்மா சும்மாங்க மற்றபடி எல்லாம் நகைச்சுவைக்காக.

      Delete
  2. ஒரு படம் (கடைசி) தவிர மற்றவை நம்ம படம் என்பதால் ஒரு படத்துக்கு நூறு ரூபாய் வீதம் போட்டோகிராபர் ஆன எனக்கு உடனே அனுப்பவும். மாசக்கடைசி ! அவசரம் !!

    ReplyDelete
    Replies
    1. அய்யோ இது என்ன பகல் கொள்ளை முதல் நான்கு படங்கள் என் ஒளிப்படக்கருவியில் உள்ளது.

      Delete
  3. மொத்தத்தில் யாரிடமும் பேசவில்லை என்று சொல்லுங்க...

    ReplyDelete
    Replies
    1. இப்படியா பளீச்சுனு உடைப்பிங்க. அடடா.....

      Delete
  4. சௌந்தர் அண்ணன் எடுத்த கடைசி படத்தில், என்னை க்ளோஸ்அப்பில் கவர் செய்துள்ளார்... பின்னாலிருந்து...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ இப்போதான் பார்த்தேன்.

      Delete
  5. நல்ல எஜ்யாய் பண்ணி இருக்காங்க...

    ReplyDelete
  6. சௌந்தர் படங்கள் சூப்பரப்பு:)

    பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பெண் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சௌந்தருக்கு என்ன பட்டம் கொடுக்கலாம் என்று கூறுங்கள்.

      Delete
  7. உங்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி சகோதரி...

    வாழ்த்துக்கள்... நன்றி... (TM 3)

    ReplyDelete
    Replies
    1. தங்களை சந்தித்ததிலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி நன்றிங்க.

      Delete
  8. சௌந்தர் அண்ணன் தான் ஒரு மறைக்கப்பட்ட பி.சி.ராம்ன்னு நிரூபிச்சிட்டாறு ஹி ஹி ஹி!

    ReplyDelete
  9. நல்ல சோக கதை! கவிதை புத்தகம் எங்கு கிடைக்கும்? விலை என்ன? சொல்லவேயில்லையே சகோ?

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
    http://thalirssb.blogspot.in/2012/08/6.html
    மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html

    ReplyDelete
    Replies
    1. என்ன சோக கதை என்று சொல்லிட்டீங்க.

      Delete
  10. நீங்களாச்சும் பரவாயில்ல... கேமரா கொண்டு வந்திங்க!

    நான் கேமராவுக்கு சார்ஜ் போட்டு வச்சு எடுத்துட்டு வர மறந்துட்டேன்...

    அதாங்க ரத்தின சுருக்க பதிவுக்கு காரணம் அக்கா......

    ReplyDelete
    Replies
    1. சரியா போச்சி .... எதோ சதி பா.

      Delete
  11. புகைப்படக்கருவி கொண்டு வர முடியவில்லை என்ற கவலை எனக்கு வராதபடி நிறைய நண்பர்களின் வலைத்தளத்தில் புகைப்படங்கள் குவிந்திருக்கிறது. பேசாததற்கு இப்படி ஒரு காரணமா...? இதையும் ஒரு பதிவாக்கிவிட்டீர்கள். அருமை

    ReplyDelete
    Replies
    1. கவிதையா போட்டா எல்லாம் அடிக்க வறாங்க அதான்.

      Delete
  12. >>>எப்பவும் பிசியாக இருப்பதாக காட்டிக்கொண்ட சிபி அதனால் அவரிடமும் பேச முடியவில்லை.

    எழுத்துப்பிழை, பசியா இருந்தேன், காலைல 2 இட்லி ஒரு ரோஸ்ட் மட்டும்தான் சாப்பிடேன், அரை வயிறு தான்( ஏன்னா அப்போதானே லஞ்ச் ஃபுல் கட்டு கட்ட முடியும்? )

    ReplyDelete
    Replies
    1. அதுவே அரை வயிறா சரிதான்.

      Delete
  13. அந்த போசுலதான் நீ ரொம்ப அழகா இருக்கே மயிலா! இத கொண்டு போய் உன் வூடுக்கரம்மாகிட்ட குடு. மேரேஜ் ஆகுறவரை பார்த்து பார்த்து ரசிக்கட்டும்.

    ReplyDelete
  14. ராஜி அக்கா சொன்னதோட சரி கொடுக்கவேயில்லை.
    >>>
    ஹல்லோ மேடம் உடம்புக்கு எப்படி இருக்கு. உங்களை படம் பிடிக்கவும், உங்களுக்கு கேமரா கொண்டு போய் குடுக்கவும் இல்லை. நான் விழாவுக்கும், மதியம் ஓசி சாப்பாடுக்காவும்தான் வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அண்ணனும் தங்கையும் இதுக்குத்தான் வந்திங்களா?

      Delete
  15. என் ஔிப்படக்
    கருவியை எடுத்து பார்த்தால் நண்பர் செய்ததை நீங்களே பாருங்கள்.
    >>.
    ஒரு டப்பாவை கேமரானு சொல்லி குடுத்தா சௌந்தர் சாரால என்னதான் பண்ண முடியும்?!

    ReplyDelete
    Replies
    1. என்ன அக்கா தங்கச்சிகுள்ள வாக்குவதம் தம்பி தூர தேசத்தில் இருக்கிறதுனால உங்களுகெல்லாம் துளிர் விட்டு போச்சா என்ன?

      (இந்த தம்பிக்கு என்றும் வயது பதினாறாக்கும் )

      Delete
    2. வாப்பா! வா வந்து சண்டைல ஐக்கியமாகிடு

      Delete
    3. ஆமா சகோ வந்து இந்த அண்ணன் தங்கைய என்னனு கேளுங்க அலும்பு தாங்கள.

      Delete
  16. ம்ம் உங்க கவிதை புத்தகம் எங்க கிடைக்கும் ?அன்பரே

    ReplyDelete
    Replies
    1. புத்தகம் முழுவதுமாக ரெடியானதும் சொல்கிறேனே.

      Delete
  17. //எப்பவும் பிசியாக இருப்பதாக காட்டிக்கொண்ட சிபி அதனால் அவரிடமும் பேச முடியவில்லை.//
    எல்லாரையும் கலாய்க்கிற சிபிய கலாய்ச்சுட்டீங்களே
    பலரின் பாராட்டுதல்களை பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் பல புத்தகங்களை வெளியிடுவீர்!

    ReplyDelete
    Replies
    1. இது பாராட்டுவதா ? போட்டுக்கொடுப்பதாங்க.

      Delete
  18. என்னங்க உங்களை நான் வீரப்புலி என்று நினைத்து இருந்தேன் நீங்க என்னன்னா மிக கோழையாக் பேச பயப்படுறீங்க..

    ஆமாம போட்டோ எடுக்கனும்னா எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்க கூடாது நான் இங்கே இருந்தே எடுத்து தந்து இருப்பேன்ல

    ஆமாம் எல்லோருக்கும் உங்க கவிதை புக்கை இலவசமாக கொடுத்தீர்களாமே அப்ப எங்களுக்கு இலவசம் கிடையாதா? உங்ககூட நான் 'கா" இனிம நான் பேச மாட்டேன்

    ReplyDelete
    Replies
    1. ஏன் சகோ கோபம் வேண்டாம் தாங்கள் இங்கு வரும் போது தருகிறேன்

      Delete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. வருண் said...

    ***இவ்ளோதாங்க இந்த படங்கள வச்சி நான் என்ன பதிவு போட முடியும் ? கீழ இருக்கிற படங்கள திருடி இப்படி பதிவு போட வச்சிட்டாங்க கவிதை வீதி சௌந்தர்.***

    இது மாதிரி ஒரு நல்ல காரியத்துக்கு திருடினால் தப்பில்லைங்க. :)

    ***பதிவர் சந்திப்பில் நான் பேச பயந்த நண்பர்கள் !***

    நீங்க பயப்படுவீங்கனுதான் நான் "மரியாதையா" எதுக்கு இவங்கள கஷ்டப்படுத்தனு வராம இருந்துட்டேன்! :))

    ReplyDelete
    Replies
    1. அடடா எப்படி கேட்டாலும் பதில தயாரா வச்சிருக்காங்கையா.

      Delete
  21. புத்தக வெளியீடு சிறப்பாக நடந்தேறியமைக்கு வாழ்த்துக்கள் சசிகலா. பதிவர் சந்திப்பு பற்றி எவ்வளவு படித்தாலும் இன்னும் ஆர்வம் குறையமாட்டேங்குது. நல்லாவே கலாய்ச்சிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. அந்த ஆனந்த அனுபவமே இப்படி கலாக்கத் தோணுது சகோ.

      Delete
  22. நீங்கள் மிஸ் பண்ணியவற்றை அழகாக சுட்டிச் சென்றுள்ளீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. இவர் தான் சரியா பதில் சொன்னார். நன்றி சகோ.

      Delete
  23. ராஜியோட அக்காவைப் பல இடங்களில் குறிப்பிட்ட நீங்கள் ஏன், அவங்க பேரைக் கேட்டு அதை எழுதலை? அவங்க அக்காவம் பதிவரா?

    அவ்வ்வ்..........

    ReplyDelete
  24. பாஸு !

    இப்டியெல்லாம் நடக்கும்னுதேன் ப்ரொஃபெஷ்னலான நம்ம மாப்ளையை தள்ளிக்கினு வந்துட்டம்.

    கூகுல் பிகாசால அல்லா படமும் இருக்கு .. யூஸ் பண்ணிக்கங்க

    https://picasaweb.google.com/109872183471177957463/ZxTtKF?authuser=0&feat=directlink

    ReplyDelete
  25. புத்தக வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடந்தது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. அடடா கடைசில யார்கிட்டயும் பேசலயா :)


    சிறப்பான பகிர்வு. வாழ்த்துகள்.

    த.ம. 9

    ReplyDelete
  27. ஒரே நகைச்சுவையாக உள்ளது பதிவும், கருத்துகளும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  28. சந்திப்பில் கலந்துக்கொள்ள முடியாமல் போனதே என்கிற வருத்தம் மேலோங்குகிறது, சசிகலா.

    ReplyDelete
  29. யாரிடமும் பேசலையா??? இவ்வளவு நாசுக்கா சொல்ல முடியுமா?

    ReplyDelete
  30. உங்கள் சம்பாஷணையை ரசித்தேன், சிரித்தேன்.....! பொறாமையாகவும் இருக்கிறது.

    ReplyDelete
  31. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். எதற்கு பொறாமை ?

    ReplyDelete
  32. நல்ல நகைச்சுவையான பதிவு.வாழ்த்துக்கள்

    ReplyDelete