Wednesday 22 August 2012

புயலின் வரிகள் !


மண்ணெடுத்து பிசைந்து நின்னேன்
மணிக்கணக்கா பார்த்தவரே
சொல்லெடுத்தே வீசியிங்கே
சொக்கிப்போய் நிப்பவரே.

சோத்துப் பானை செய்ய வந்தேன்
சொப்புச் சாமானும் செய்யலியே
சேத்து நட காலுந்தான்
சேம நலம் பேசிடுதே...

காத்து வழி சேதி சொல்லி
கண்ணடித்து நிப்பவரே
காதலென்ற பெயராலே
கால நேரம் கழிந்திடுதே..

தென்றல் வரும் பாதையிலே
புயலடிச்சி ஓய்ந்ததென்ன
புழுதியாட்டம் மனமிங்கு-உன்னில்
புதைந்தொழிந்து போனதென்ன.

13 comments:

  1. புயலின் வரிகள் தென்றலாய் நமையும் தீண்டிவிட்டு செல்கின்றதே இதமான வரிகளால்...பக்குவம் நிறையவே உள்ளது பக்குவப்படாத நெஞ்சத்தில்...பேச்சாலே எனை மடக்கி ஊமையாய் நானும் நின்றேன்...பாராட்டுக்கள் சசி கலா தங்களுக்கு... சுலபமாகி சொல்லிவிட்டீர்கள் எல்லோரும் அறியும் வண்ணம்.

    ReplyDelete
  2. அழகான கவிதை.... எனக்கு அழகிய கிராமமும் மண்வாசனையும் கற்பனைக்கு வருகிறது உங்களின் கவிதை வரிகளை காண்கையில்!!!

    ReplyDelete
  3. நல்ல காதல் வரிகள் சசி!
    இனிய வாழ்த்துகள்.
    எனக்கு எனது 3 புத்தகங்களின் வெளியீடுகள் நினைவுக்கு வருகிறது.
    விழா சிறப்புடன் அமையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. அழகான கவிதை... வாழ்த்துக்கள் சகோ!

    "அந்தி நேர பூக்கள்" - இது காமக்கதை அல்ல, இருளில் வாழும் விலைமாதர்கள் பற்றிய கதை.
    என் சிறுகதையை படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன், உங்கள் கருத்துகளையும் பதியவும்! நன்றி

    ReplyDelete
  5. கிராமியக் காதல் அருமை!

    ReplyDelete
  6. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கவிதை வரிகளில் பழமை வசனக்கள் தெரிகிறது,,மீண்டுமொரு முறை ரசிக்கிறேன்

    ReplyDelete
  7. அடடா! தென்றல் புயலாயிடுச்சு.

    ReplyDelete