Friday 17 August 2012

அன்பொன்றே சேமிப்பாய்!



கொக்கரக்கோ குரலெழுப்ப
குயிலோசைக்  கலந்துவர
வெட்ட வெளி மைதானமும்
வெண் பனியால் நனைந்திருக்க!

மரக்கூட்டில் படுத்துறங்கி
மனமயக்கும் பாட்டிசைத்து
மன்னவனாம் சூரியனை
மலர் கொண்டு வரவேற்க!

பசிக்குணவு காட்சியாக
பார்வையழகு இயற்கையாக
எறும்பைப்போல் சுறுசுறுப்பாய்
எந்நாளும் வாழ்வில் ஏற்றம்!

அறுசுவையும் அலங்கரித்து
அழகாய் உண்டு முடித்து
உழைப்பதுவே மூலதனமாய்
அன்பொன்றே சேமிப்பாய்!

வட்ட நிலாப் பார்த்திருந்து
வார்த்தை வரக் காத்திருந்து
எண்ணமது சிறந்திருக்க
எழிலோவியமாய்க் கவிதை!

கங்கையாய் எழுந்திடுவீர்
காற்றாகி உயிர் பெறுவீர்
கண்கண்ட காட்சியெல்லாம்
காவியமாக்கி ஈன்றிடுவீர்...!

21 comments:

  1. அருமைய சொன்னீங்க.. tha ma 1

    ReplyDelete
  2. எளிய தமிழில் யாவருக்கும் புரியும் படியாய் காவியம் பாடச் சொன்னது அருமை சகோ TM 2

    ReplyDelete
  3. //
    பசிக்குணவு காட்சியாக
    பார்வையழகு இயற்கையாக
    எறும்பைப்போல் சுறுசுறுப்பாய்
    எந்நாளும் வாழ்வில் ஏற்றம்!
    //

    நல்ல வரிகள் (TM 3)

    ReplyDelete
  4. நல்ல வரிகள் சகோ...

    மிகவும் பிடித்த வரிகள் :

    /// அறுசுவையும் அலங்கரித்து
    அழகாய் உண்டு முடித்து
    உழைப்பதுவே மூலதனமாய்
    அன்பொன்றே சேமிப்பாய்! ///

    வாழ்த்துக்கள்... நன்றி... (TM 5)

    ReplyDelete
  5. அன்பொன்றே சேமிப்பாய்... அருமையான வரிகள். நல்ல கவிதை. மிக ரசித்தேன்.

    ReplyDelete
  6. வலை பதிவு அன்பர்கள் அனைவருக்கும் எழுதப்பட்ட அருமையான கவிதை..ரெம்ப ரெம்ப நல்லாயிருக்கு சகோ..

    ReplyDelete

  7. கங்கையாய் எழுந்திடுவீர்
    காற்றாகி உயிர் பெறுவீர்
    கண்கண்ட காட்சியெல்லாம்
    காவியமாக்கி ஈன்றிடுவீர்...!//

    தங்களைப்போல...
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. கண்ட காட்சிகளை எல்லாம் கோர்த்து காவியம் படைக்கும்
    தென்றலுக்கு என் பலத்த கைதட்டல்கள் & கரகோஷங்கள் !

    ReplyDelete
  9. மிகச் சிறந்த சேமிப்பு!
    அருமை

    ReplyDelete
  10. உழைப்பதுவே மூலதனம்! அன்பே சேமிப்பு! அருமை! சிறப்பான படைப்பு! பகிர்வுக்கு நன்றி!
    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
    http://thalirssb.blogspot.in/2012/08/180.html
    பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

    ReplyDelete
  11. அன்பை மட்டுமே சேமிப்போம்...

    அருமைங்க சசிகலா.

    ReplyDelete
  12. அன்பொன்றே சேமிப்பாய்!

    நல்ல தலைப்பில் அன்பான கவிதை.
    பாராட்டுக்கள்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  13. தலைப்பே அன்பாயிருக்கே சசி !

    ReplyDelete
  14. Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

    ReplyDelete
  15. கொக்கரக்கோ குரலெழுப்ப
    குயிலோசைக் கலந்துவர
    வெட்ட வெளி மைதானமும்
    வெண் பனியால் நனைந்திருக்க!

    மரக்கூட்டில் படுத்துறங்கி
    மனமயக்கும் பாட்டிசைத்து
    மன்னவனாம் சூரியனை
    மலர் கொண்டு வரவேற்க!
    இரசித்தேந் விருது பெற்ற தங்களுக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  16. இந்த பதிவை-
    வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!

    வலைச்சரத்திற்கு -
    வருகை தாருங்கள்!
    தலைப்பு;
    கவிதை......

    http://blogintamil.blogspot.sg/

    ReplyDelete
  17. வணக்கம் சகோ இன்றைய வலைச்சரம் மூலம் அறிமுகமான
    தங்கள் கவிதை கண்டு மகிழ்ந்தேன் .அருமையான கவிதை மிக
    நேர்த்தியாக அமைந்துள்ளது கவிதையின் வரிகள். உங்களுக்கு
    என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் .மேலும் மேலும்
    தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன் மிக்க நன்றி சகோதரி.

      Delete