ஆடிக்கு ஆடியும் போச்சி
ஆரவார கல்யாண தேதியும்
வந்து வருஷம் நாலு ஆச்சி...
தேவதையெனத் தேடிவந்தே
தேனொழுக பேசி நின்னு
நாடி வந்த கதை என்ன சொல்ல.
நாடகமாத்தான் ஆச்சுதே
என் வாழ்வதுவும்...
நான் நடிக்கும் மனைவி
கதாபாத்திரத்தில்....
கட்டான உடம்புக்காரி
கரிசன பேச்சுக்காரி
காது மூக்கு குறையுமில்ல
கல்யாண வாழ்வில் நிறைவுமில்ல..
அடி வயிற்றை தொட்டுப்பார்த்தே
அன்றாடம் அழுதழுது மாய்ந்து போனேன்
தெருவோர பேச்சுச் சத்தம்
தேள் கொடுக்கா கொட்டிடுதே.
கோவில் குளம் தேடிப்போய்
மண் சோறு உண்ட பின்னும்
மண்பாண்டம் உடைந்த கதையா
மருத்துவமும் கைவிடவே..
தேனொழுக கொஞ்சியவனும்
அம்மாவின் தேவையறிந்தே
அடுத்த பெண்ணைப் பார்த்தான்.
வேண்டாத தெய்வமில்ல-எனை
வேண்டுமென யாரும் எண்ணலியே
தீண்டாமை ஒழிந்த பின்னும்
சடங்குகளில் தள்ளி வைக்கும்
நியாயமென்ன....?
இந்தக் கொடுமை எப்போது மாறுமோ...?
ReplyDelete(த.ம.1)
ஆமாங்க மாறினால் சிறப்பு.
Deleteபெண்களின் அருமையறியா மூடர்கள் இன்னமும் நிறைய இருக்கத்தான் செய்கின்றனர். மழலைச் செல்வம் மலர பெண்மட்டுமே பொறுப்பு, அதிலும் அவள் ஆண் மகவாய் பெற்றுத்தர வேண்டும் என்று எத்தனை எத்தனை கொடுமைகள் இங்கே. பாதிக்கப்பட்ட ஒருத்தியின் மனக்குமுறல் இங்கே கவிதையாய் மலர்ந்து இதயத்தை அசைத்துப் பார்க்கிறது தென்றல். அருமை.
ReplyDeleteஇதையும் பாருங்களேன்...
http://sindanaisiragugal.blogspot.in/2012/08/blog-post.html
ஆதங்கப் பட மட்டுமே முடிகிறது.
Deleteகுட்டையில் ஊறிய மட்டைகள். அதிலிருந்து வெளியே வந்தால் தான் விமோசனம். இப்படியே அழுது பலனேயில்லை. நன்று எழுதியுள்ளீர்கள்.
ReplyDeleteநல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தெளிவு படுத்தும் கருத்துரை நன்றி சகோ.
Deleteதீண்டாமை ஒழிக்கப்படவில்லை
ReplyDeleteஇன்னும் பட்டை தீட்டப்படுகிறது
பல பெண்கள் பாவத்தில்.....
அருமை சசி கலா
உண்மை தான் சகோ.
Deleteஇயற்கையின் சதியோ இல்லை வேதியியலின் மாற்றமோ...எது எப்படி இருந்தாலும் பாதிப்பு என்னவோ பாவம் அந்த அப்பாவி பெண்ணுக்குத்தான்... இப்போதில்லை இந்த நிலைமை இவர்களுக்கு காலந்தொட்டே வழிவழியாய் வருகிறது. எல்லோரையும் தன்னை போல் எண்ணம் இருந்தால் இப்படி நிலை எந்த பெண்ணுக்கும் வாராது...அடுத்தவர்களை அவமானப்படுத்தி பார்ப்பதில் சந்தோசம் அடையும் ஒரு பிரிவினர் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். குழந்தை இல்லாமை என்பது வாங்கி வந்த சாம்பமோ இல்லை அவர்களின் தவறோ கிடையாது... அது அப்படி ஒன்றும் பாவச்செயலும் கிடையாது. பாவம் என்பது மனதறிந்து நாம் பிறருக்கு செய்யும் துரோகம் தான் பாவம்...
ReplyDeleteகுழந்தையில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை தள்ளி வைப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.. நமக்கு அது போன்ற ஒரு நிலைமை வந்தால் நமது மனநிலை எப்படி இருக்கும் என்று ஒரு வினாடி யோசித்து பார்த்தால் தெரியும்...
ஆனால் அதை யாரும் யோசிப்பதில்லை...காரணம் தனக்கென்றால் ஒன்று மற்றவர்களுகென்றால் ஒன்று.. அதற்காக எந்த ஒரு குழந்தைக்கு நடக்கும் விசேஷ நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்பதையே குற்றம் என்பது போல் பேசுகிறார்கள் நம் சமுதாயத்தில். என்று மாறுமோ இந்த கேவலமான மனிதர்களின் கீழான எண்ணங்கள். இல்லையென்றால் மாற்றவேண்டும் நம்மை போல் உள்ள முற்போக்கு வாதிகளாவது... நல்லதொரு சாட்டையடி சசி இது போன்ற வக்கிர புத்தி காரர்களுக்கு... உங்களோடு நானும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் எடுத்து விட்டேன் சாட்டையை கையில் சசி...
விரிவான பதிவை விளக்கிச் சொல்லும் கருத்துரை மிக்க நன்றிங்க.
Deleteமதுக்குள்ளே குமுறும் பல பெண்களின் ஏக்கம் மற்றும் வலி..
ReplyDeleteதங்கள் கவிதையில் அழகாக வெளிகாட்டப்பட்டுள்ளது...
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteநெஞ்சத் தொட்ட கவிதை அருமை.
ReplyDeleteநம்மோடு மட்டுமே புதைந்து போகும் ஆதங்கம்.
Deleteபல பெண்களின் மன குமுறல்களை கவிதையில எடுத்து சொல்லீட்டீங்க தோழி..
ReplyDeleteசகோவின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteசாடப்படவேண்டிய உண்மை நிலை..
ReplyDeleteஇன்னும் இருக்கிறது..
கவிவரிகள் நெஞ்சில் பாய்கிறது..
தங்கள் ஆசீ அண்ணா.
Delete..வேண்டாத தெய்வமில்ல-எனை
ReplyDeleteவேண்டுமென யாரும் எண்ணலியே
தீண்டாமை ஒழிந்த பின்னும்
சடங்குகளில் தள்ளி வைக்கும்
நியாயமென்ன....?..
அருமையா சொல்லி இருக்கீங்க.. தீண்டாமையை...
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteசகோதரி! தீண்டாமை இன்னும் ஒழியவில்லை. அது வாழ்கின்றது வெவ்வேறு வடிவத்தில் என்று நியாயம் கேட்கிறீர்கள். இதோ ஒரு பாடல் ...... ....
ReplyDeleteபுதியதல்லவே தீண்டாமையென்பது
புதுமையல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல்தானது
திருநீலகண்டரின் மனைவி சொன்னது
நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே
- பாடல்: கண்ணதாசன் ( எங்கிருந்தோ வந்தாள்)
அருமையான பாடல் வரிகளை நினைபடுத்தியமைக்கு நன்றிங்க.
Deleteவேண்டாத தெய்வமில்ல-எனை
ReplyDeleteவேண்டுமென யாரும் எண்ணலியே
தீண்டாமை ஒழிந்த பின்னும்
சடங்குகளில் தள்ளி வைக்கும்
நியாயமென்ன....?//
அருமையாகச் சொல்லிப்போகிறீர்கள்
உங்கள் சிந்தனையின் வேகமும்
வார்த்தைகளைக் கையாளும் லாவகமும்
மனம் கவர்ந்து போகிறது
வாழ்த்துக்கள்
தங்களின் உற்சாக வாழ்த்துரைகளே காரணம் ஐயா. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.
Deleteகவிதை அருமை சகோ!
ReplyDeleteநன்றி சகோ.
Deleteமிகவும் வேதனை தரும் செயல் இந்த ஒதுக்கிவைக்கும் கொடுமை! இன்றும் தொடர்வது கொடுமையிலும் கொடுமை! வேதனைவரிகள்! சிறந்த படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
http: thalirssb.blogspot.in
மிகவும் வேதனையான விஷயம்....
ReplyDeleteஎன்று மாறும் இக்கொடுமை!
நற்கவிதைக்குப் பாராட்டுகள் சகோ.
நெஞ்சைத்தொட்டு நிற்கின்றது கவிதை.
ReplyDeleteஇப்படி எத்த்னை கவிதை படைத்தாலும் பதிவுகள் போட்டாலும் .....பாரம்பரியம் பாரம்பரியம்தான்
ReplyDeleteமாற்றம் காண்பது மிக அரிது இப்படியே சொல்லி சொல்லி இருப்பதும் எம்மவருக்கு புதிதல்லவே..
ஏக்கம் மிகுந்த கவி சகோ
தாய்மையை எங்கும் பெனமையைப் பற்றிய வலி மிகுந்த வரிகள் இந்தத் தீண்டாமை என்று ஒழியுமோ தெரியவில்லையே
ReplyDeletevethanaiyaana vari!
ReplyDeleteunmai nilai...