Monday 25 June 2012

இதய வீணை !


நெல்லும் விளைஞ்சாச்சி,களனியும் நெறஞ்சாச்சி,
அள்ளிக்கொடுக்க நீயிலையே கண்ணம்மா!
இதயமிங்கே வாடுதடிப் பொன்னம்மா![இதய]

பன்னீர் பூவெடுத்து,கண்ணீரை நூலாக்கி,
கோர்த்து வைத்தேன் மாலையொன்று-கண்ணம்மா,
அது சாத்துகின்ற மாலைதானோ-பொன்னம்மா[இதய]

பட்டானப் பைங்கிளியே,சிட்டானப் பூங்கொடியே,
கட்டழகு காவியமே கண்ணம்மா,
வில்லானக் கண்ணாலே பொய்யெழுதிப் போகாதே,
சொல்லான கவிதையே பொன்னம்மா![இதய]

மலையரசி குறிஞ்சியாகி,மலராகி மணமாகி,
பூத்தவள் நீதானே கண்ணம்மா.
கண்மூடும் இமையிரண்டும்,மனம் மூட முடியாமல்,
கண்ணாம் பூச்சி காட்டுதடி பொன்னம்மா![இதய]

அத்திப்பழம் கனிஞ்சாச்சி,ஜோடியெல்லாம் வந்தாச்சி,
உனைமட்டும் காணோமே கண்ணம்மா.
கடலலைபோல் தேடுகிறேன் பொன்னம்மா[இதய]

இதயத்தில் ஊஞ்சல்கட்டி,தேனீபோல் கூடுகட்டி,
ஆடிப்பாடினாயே கண்ணம்மா.
ஆல்மறந்த விழுதாகி,பாலை வீழ்ந்த மழையாகி,
மறைந்தே போவதேனோ பொன்னம்மா![இதய]
 

21 comments:

  1. இதய வீணை இதமாக இருந்தது இதயத்துக்கு

    ReplyDelete
  2. கிராமத்தில் பாடிய நினைவுகள்...

    ReplyDelete
  3. இதயவீணை
    மண்வாசனை காதல்

    ReplyDelete
  4. இதய வீணையில் இசைத்த சோக ராகம் அருமை.

    ReplyDelete
  5. கிராமீய மண்வாசம்! கவிதையில் மணக்கிறது சா இராமாநுசம்

    ReplyDelete
  6. இப்படி ஒரு வீணை இதற்கு முன் வந்துள்ளதா தெரியவில்லை...வராவிட்டால் இதனை இசை போட்டு பாடலாகவே பாடிடலாம்...அருமையாகவுள்ளது....

    ReplyDelete
  7. // பன்னீர் பூவெடுத்து,கண்ணீரை நூலாக்கி,//

    வளமான கற்பனை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அழகான கிராம மொழி..

    ReplyDelete
  9. அருமை அருமை
    இயல்பான வார்த்தைகளைக் கொண்டதாயினும்
    இதயத்தை ஊட்ருவிச் செல்கிறது தங்கள் படைப்பு
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. இதயத்தில் ஊஞ்சல்கட்டி,தேனீபோல் கூடுகட்டி, ஆடிப்பாடினாயே கண்ணம்மா. -இதய வீணையில் ஒலித்த எளிமையான கிராமத்து ராகம் மனதை மயக்கியது. அருமை தென்றல்.

    ReplyDelete
  11. கவிதையில் மண்வாசம்... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  12. இதயமழையில் மண்வாசம்!

    ReplyDelete
  13. //இதயத்தில் ஊஞ்சல்கட்டி, தேனீபோல் கூடுகட்டி,
    ஆடிப்பாடினாயே கண்ணம்மா.
    ஆல்மறந்த விழுதாகி, பாலை வீழ்ந்த மழையாகி,
    மறைந்தே போவதேனோ பொன்னம்மா!//

    நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. பாரதிக்கு ஓர் கண்ணம்மா! உங்களுக்கோ பொன்னம்மா

    ReplyDelete
  15. வணக்கம்! உங்கள் வலைப் பதிவை, சங்கமம் ( http://isangamam.com ) என்ற திரட்டியில் இணைக்கவும். அதில் நமது பதிவினை தொடர்ச்சியாக சில நாட்கள் மற்றவர்கள் பார்வையிடும் வண்ணம் உள்ளது. நன்றி!

    ReplyDelete
  16. இதய வீணையை மீட்டிய தென்றலே மனதை ஊடுருவு செல்கிறது உங்களின் இந்த மண்வாசனை கொண்ட கிராமியப் படைப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. ''..மலையரசி குறிஞ்சியாகி,மலராகி மணமாகி,
    பூத்தவள் நீதானே கண்ணம்மா.
    கண்மூடும் இமையிரண்டும்,மனம் மூட முடியாமல்,
    கண்ணாம் பூச்சி காட்டுதடி பொன்னம்மா..''
    அத்தனை வரிகளும் சிறப்பு சசி... நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete