Friday 22 June 2012

கலைந்தோடும் மேகம்போல!


கலைந்தோடும் மேகம்போல
அலைந்தோடும் இதயமொன்று
பறந்தோடிப்போகிறதே-உறவைப்
நினைத்தே மாய்கிறதே!

கல்லுக்குள் தேரைபோல
நெஞ்சுக்குள் சுமையை ஏந்தி
பாலைவழி போகிறதே-மனம்
காலின்பாதை நடக்கிறதே [கலைந்தோ]

வென்னீரில் குளித்ததாலே
பட்டுப்போன பட்டுப்பூச்சி
பட்டாகும் காலம் மலருமா?-இல்லை
பட்டமரம் போலாகுமா? [கலைந்தோ]

கடல் கண்ட முத்தாய் வந்தான்
கண்காணா காட்சி கண்டான்
கரைமீனாய்த் துடித்தானே-அவன்
கரைதேடிப் போறானே! [கலைந்தோ]

கையளவு இதயத்தில்
கடலளவு சோகமணிந்து
கண்ணிலே நீரைச்சூடி
விதியோடு கலந்தானே-வாழ்வில்
விடியாத இரவவனோ? [கலைந்தோ]

கொடுக்கவும் எதுவுமில்லை
இழக்கவும் உறவுமில்லை
அணைக்க அன்புமில்லை
வசந்தம் வந்திடுமா-வாசம்
மலர்ந்திடுமா.... [கலைந்தோ]

15 comments:

  1. நயமான இழைகளால் நெய்யப்பட்ட பட்டாடை போன்று மின்னிடும் வரிகள்.

    அதே பளபளக்கும் பட்டாடைகளுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ள் பட்டுப்பூச்சிகளின் சோகமும் ஆங்காங்கே பிரதிபலிக்குது கவிதையில்.

    //வசந்தம் வந்திடுமா-வாசம் மலர்ந்திடுமா....//

    வசந்தம் வந்திடவும் வாசம் மலர்ந்திடவும் என் அன்பான வாழ்த்துகள். vgk

    ReplyDelete
  2. //கலைந்தோடும் மேகம்போல
    அலைந்தோடும் இதயமொன்று
    பறந்தோடிப்போகிறதே-உறவைப்
    நினைத்தே மாய்கிறதே!//

    ஓசை நயம் மிகுந்த சொல்லோட்டம்-கவிதை
    ஊற்றெனச் சுரக்கும் நீரோட்டம்
    மாசிலாத் தமிழில் மலராட்டம்-படிப்பார்
    மனதில் மிக்க மகிழ்வூட்டும்
    நன்று! கவிதை இன்று!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  3. கவலை வேண்டாம் தென்றல்... வசந்தம் வந்திடும், வாசம் மலர்ந்திடும். அருமையான கவிதை.

    ReplyDelete
  4. அருமையான கவிதை
    மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மனதின் சோகத்தை தூண்டும் கவிதையின் இறுதி வரிகள்..

    ReplyDelete
  6. ஏதோ கவலையை சுமந்து வந்துள்ளது சுமை தீர விரும்பும் நட்பு

    ReplyDelete
  7. நல்ல கவிதை....

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  8. சோக ராகமும்
    சுகமாகத் தான் இருக்கிறது சசிகலா.

    ReplyDelete
  9. குயில் பாட்டில் ஏனோ சோகம் சகோ

    ReplyDelete
  10. பாடலாய் எழுதி இருக்கிறீர்கள்.மிக நன்று முடிந்தால் பாடி வெளியிடவும்

    ReplyDelete
  11. கல்லுக்குள் ஈரமாய் – கடுங்
    காற்றுக்குள் தென்றலாய்
    ஒரு கவிதை!

    ReplyDelete
  12. //வசந்தம் வந்திடுமா-வாசம்
    மலர்ந்திடுமா.... //

    உங்கள் கவிதைகளை வாசகன் என்ற முறையில் நீங்களும் படித்து பாருங்கள் உங்கள் மனதில் வசந்தம் மீண்டும் வந்திடும் வாசமுள்ள மலராக இதயமும் மலர்ந்திடும்

    ReplyDelete
  13. காத்திருக்கும் சோகம் இழைகிறது. நல்ல உறவிற்கு ஏங்கும் கவிதை.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete