Wednesday 20 June 2012

சொர்க்க பூமி !



களத்து மேடு போறவரே
கண்ணுறக்கம் காணாதே
காவலுக்கு நானும் வரவா ?

நெல்லுமணி பார்த்த
விழி சொல்லு மொழி
ரசிக்குமடி !

களவாடும் கூட்டமும்
நெல்மணி தவிர்த்து
பொற்சிலையை கொண்டு போக
பொல்லாப்பு வந்து சேரும்
போய் உறங்கு கண்மணியே !

பொல்லாப்பு வேணாம் மாமா
இராக் கண்ணுமுழிக்கும்
பொழப்பும் வேணா ..
பட்டினந்தான் நாமும் போவோம்
பகட்டாதான் வாழ்ந்திடுவோம் !

கணக்கிலடங்கா மாடி
வீடு அங்கிருக்காம் ..
இங்க மாட்டுச் சாணந்தானே
நிறைஞ்சிருக்கு !

மாடிவீடு வேணாம் புள்ள
மகவ காக்கும்
கோமாதா போதும் புள்ள !

ரயிலேறி பயணம் போக
இராவெல்லாம் சொப்பனங்கண்டேன் !

கூட்டாஞ்சோறு
ஆக்கித்தின்னு குதுகலமா
வாழ்ந்திருப்போம் ...
கூட்டத்தோடு சிக்கித் தவிக்கும்
ரயில் பயணம் வேண்டாம் புள்ள !

சிட்டுக்குருவி சைசா இங்க
ஏரோப்ளேன்  நானும் பார்த்தேன்
சிங்காரப் பட்டிணம்  போய்
சிறப்பா பாக்க ஆச மாமா !

பட்டணத்தில் பொருளெல்லாம்
பெருசுதான் இருக்கும் புள்ள ,
மனுசங்க மனசேனோ
கடுகளவும் இல்லையாம் புள்ள !

ஏரு பிடிச்சி உழுது வர
வரப்போரம் வம்பு பேசி
நீயும் நிக்க ...
சொர்க்க பூமி இங்கிருக்கு ,
சோகப் பட்டினந்தான்
வேண்டாம் புள்ள .

வலையுலக நட்புகளுககு ஒரு மகிழ்வான அறிவிப்பு

வரும ஆகஸ்ட் 15 (புதன்) சுதந்திர தினத்தன்று சென்னையில பதிவர் சநதிப்புக்குத் திட்டமிடப்பட்டுளளது, புலவர் ச.இராமாநுசம் அவர்கள் தலைமையில், திரு,சென்னைப பித்தன் அவர்கள் முன்னிலையில் இந்தச் சந்திப்பு நிகழ இருககிறது, கவிதை பாடுபவர்கள் கவியரங்கத்தில் கவிதை படிக்கலாம், மற்றையோர் தங்களுக்குப பிடித்தமான ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் (சுவாரஸ்ய அனுபவம். நகைச்சுவைத் துணுக்கு போன்றவை) பேசலாம்.இவை பற்றிய விரிவான அறிவிப்பு இனி வரும் நாட்களில் வெளிவரும். 

முழுக்க முழுக்க நமக்கான இந்த நிகழ்ச்சிக்கு அவசியம் வருகை தரும்படி அனைவரையும வேண்டுகிறோம். நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள் தங்களின் வருகையை 98941 24021 (மதுமதி), 73058 36166 (பா,கணேஷ்), 94445 12938 (சென்னைப் பித்தன்), 90947 66822 (புலவர் சா,இராமானுசம்) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இருக்கும்..

இத்தகவலை நட்புகள் அனைவரும் தங்கள் பதிவுகளில் வைத்து அனைவரிடமும் கொண்டு சேர்க்கும்படி வேண்டுகிறோம்.

42 comments:

  1. ஆஹா... பாதிக்கப்படாத காற்றும், மாசுபடாத இயற்கையும் கிராமத்து வாழ்வில்தானே கிடைக்கும். அதைவிடவா இரைச்சல் மிகுந்த நகர வாழ்வு சொர்க்கம்? எளிமையான வரிகளில் அருமையான உரையாடல் கவிதை மனதைப் பறித்தது. அருமை தென்றல்.

    ReplyDelete
    Replies
    1. கிராமத்து சூழலை ரசித்து கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .

      Delete
  2. நல்ல கவிதை சகோதரி ! படித்தவுடன் ஞாபகம் வந்த பாடல் கீழே... படம் (நாடோடி மன்னன்)

    சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
    சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
    கம்மா கரையை ஒசத்தி கட்டி
    கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
    சம்பா பயிரை பறிச்சு நட்டு
    தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
    நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு -
    அட காடு விளஞ்சென்ன மச்சான்
    நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
    கையும் காலும் தானே மிச்சம் ///

    நன்றி !

    ReplyDelete
    Replies
    1. நல்ல பாடலை நினைவு படுத்தி வந்த பின்னூட்டம் நன்றிங்க .

      Delete
  3. சின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் படைப்புக்கள் சென்றடையும் ! நன்றி !

    ReplyDelete
  4. மாசுபட்ட பட்டிணம் எப்போதும் நமக்கு வேண்டாமே... குயில் சத்தம் ஒலிக்கும் காடுகள் மிகுந்த ஓலைக்குடிசை போதுமே எப்போதுமே... இதில் உறங்கும் உறக்கம் எத்தனை மெத்தையில் மச்சுவீட்டில் படுத்தால் வாராது என்பதே உண்மையான ஒன்று.. அருமை சசிகலா என்ன ஒரு அழகாக சொல்லி இருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள் உங்களுக்கு...மேலும் வரையுங்கள் நம் செம்மொழியாம் தமிழ் மொழியின் வாயிலாக பரப்புங்கள் நம் கிராமத்து மண் வாசனையை...

    ReplyDelete
    Replies
    1. மண் வாசம் மறவாத உங்கள் வரிகள் அருமை .

      Delete
  5. Replies
    1. வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ .

      Delete
  6. உண்மையை உலகிற்கு உறக்கச்சொல்லும் கவிதை...

    ReplyDelete
  7. அடுத்த பதிவர் சந்திப்பா..? ரைட்டு...

    ReplyDelete
    Replies
    1. வாங்க பதிவர் சந்திப்புக்கு .

      Delete
  8. அருமை..அருமை..வாசிக்கும்போதே மனம் கிராமத்தை நோக்கி பயணிக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. மண் வாசம் மணக்கிறதா ?

      Delete
  9. சசி பட்டணந்தான் போகலமாடி பொம்பள இந்த பாட்டு தான் எனக்கு படிக்கையில் நினைவுக்கு வருது... கிராமமும் நகரமும் இன்றைய வளர்ச்சியில் நரகமாய் போய்கொண்டிருக்க, அழகான ஒரு கவியின் மூலம் கிரமத்திற்கு என்னை மீட்டெடுத்து வந்தீர்கள் நன்றி............

    அதோடு அடுத்த பதிவர் சந்திப்பு ஆரம்பம் ஆகிடுச்சா இனி ஒரே கலர்புல் பதிவுகள் தான் போங்க :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க பதிவர் சந்திப்புக்கு .

      Delete
  10. கிராமிய மக்களின் வெள்ளந்தி மனசு,பட்டணத்து மக்களிடம் தேடினாலும் கிடைக்காது.அருமையான கிராமிய சொல்லாடலில் கிராமத்து வாழ்க்கையை சிறப்பா கவிதையில சொல்லிட்டீங்க சசி.அருமை.

    ReplyDelete
    Replies
    1. கிராமிய வாழ்வே தனி அழகு சகோ .

      Delete
  11. Replies
    1. வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ .

      Delete
  12. ஈவு, இரக்கம், போட்டி, பொறாமை, தனக்கென பிரச்சனை நிகழும் வரை வேடிக்கை பார்க்காத மனிதர்கள் இப்போ கிராமத்திலேயும் கூட கம்மியாகிக்கிட்டேதான் வாராங்க :(

    மொத்தத்தில் மனிதர்களை பார்ப்பது கஷ்டமாகிட்டே வருது.!

    ReplyDelete
  13. பதிவர் சந்திப்பு தித்திப்பாக வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
    Replies
    1. வாங்க பதிவர் சந்திப்புக்கு .

      Delete
  14. கிராமம்,கிராமம்தான்,நகரம் நகரம்தான்!சிறப்பான கவிதை!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா . தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி ஐயா .

      Delete
  15. வயல் காடே சொர்க்க பூமிதானே அக்கா....

    ReplyDelete
    Replies
    1. கிராமிய வாழ்வே தனி அழகு சகோ .

      Delete
  16. //பட்டணத்தில் பொருளெல்லாம்
    பெருசுதான் இருக்கும் புள்ள ,
    மனுசங்க மனசேனோ
    கடுகளவும் இல்லையாம் புள்ள !//

    சரியாச் சொன்னீங்க மாமு! [கவிதையின் நாயகனைச் சொன்னேன்]... நல்ல கவிதை சகோ.

    சென்னையில் நடைபெற இருக்கும் பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க பதிவர் சந்திப்புக்கு .

      Delete
  17. சந்திப்பு இனிதே நிகழ வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பதிவர் சந்திப்புக்கு .

      Delete
  18. நல்ல கவிதை ...பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க பதிவர் சந்திப்புக்கு .

      Delete
  19. ஏரு பிடிச்சி உழுது வர
    வரப்போரம் வம்பு பேசி
    நீயும் நிக்க ...
    சொர்க்க பூமி இங்கிருக்கு ,
    சோகப் பட்டினந்தான்
    வேண்டாம் புள்ள ./////
    அருமையான வரிகள் அக்கா! மிகவும் எதார்த்தமாகவும் கிராமத்து நடையிலும் இருந்தது அழகு!

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ .

      Delete
  20. நம் கிராமத்து மண் வாசனை அமெரிக்காவிலும் மணத்தது உங்களின் சொல்லாடலால் மிக அருமை..அருமை..வாசிக்கும்போதே செலவில்லாமல் மனம் கிராமத்திற்கு பயணித்தது.. படிக்கும் போதே மனதில் சொல்லமுடியாத சந்தோஷம். சந்தோஷங்களை அள்ளிதரும் உங்கள் எண்ணங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ .

      Delete
  21. நல்ல கவிதை,படிக்கிற போதே தன்னனந்தன்னானானே,,,,,,,என நாட்டுப்புற மெட்டை ஞாபகப்படுத்திசெல்கிறது ,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ .

      Delete