Tuesday 19 June 2012

மது முகர்ந்த வண்டாய்!




மிகச் சாதாரணமென
நினைத்த அந்தப் பார்வை
நிகழ்வுகளை விழுங்கியபடி !

மீண்டெழ முடியா
ஆழத்தில் தள்ளிவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறது !

வான்வெளியில்
நட்சத்திரமெல்லாம்
நகைக்கிறது !

நிலவேனோ -என்
நிலை கண்டே தேய்கிறது !

சூரியனும் சுருக்கெழுத்தாய்
மேகத்தோடு கண்ணாமூச்சி
ஆடுகிறது !

மொட்டெல்லாம்
ஆடிக்காற்றில் மலராமலே
உதிர்கின்றன !

இடிதாங்கியான
இதயமட்டுமேனோ
மது முகர்ந்த வண்டைப் போல்
மயங்கிக் கிடக்கிறது !

மயக்கதோடே
இருந்துவிட்டுப் போகிறேன்
மறுமுறைப் பார்த்துத் தொலைக்காதே !


42 comments:

  1. மயக்கத்தோடே இருந்துவிட்டுப் போகிறேன். மறுமுறை பார்த்துத் தொலைக்காதே. - அந்த மின்சாரப் பார்வையின் சக்தியை என் மனதுக்குக் கடத்தி விட்டது கவிதை. அபாரம் தென்றல். நானும் மயக்கத்தோடே இருந்துவிட்டுப் போகிறேன், இன்னொரு கவிதையை நீங்கள் பதிவேற்றும் வரை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பின்னூட்டமே கவிதையாய் மின்னுகிறது மின்னல் வரிகள் என்பதாலோ ?

      Delete
  2. ஆஹா அற்புதம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .

      Delete
  3. மிகவும் அருபுதமாக இருக்கிறது.. பூக்காத மொட்டாகவே உதிர்கின்றன...என்ன ஒரு வார்த்தை நயம்... பாராட்டுக்கள் சசிகலா உங்களுக்கு... மேலும் வளர என் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .

      Delete
  4. பார்வையின் வலிமையை,தீட்சண்யத்தை அருமையா கவிதையில கொண்டு வந்துட்டீங்க சசி..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தொடர் வருகையே என் ஆர்வத்திற்கு காரணம் சகோ .

      Delete
  5. பார்வையின் ( பாவையின்.?) கேள்விக்குப் பதிலாய் வந்த அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  6. ம்ம்ம் ... அருமை

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .

      Delete
  7. மயக்கதோடே
    இருந்துவிட்டுப் போகிறேன்
    மறுமுறைப் பார்த்துத் தொலைக்காதே !//

    அருமை அருமை
    ஒரு பார்வை விளைவித்த மாயங்களை
    சொல்லிப்போனவிதம் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  8. நோய் தருவதும் அப்பார்வை;அந்நோய்க்கு மருந்தாவதும் அப்பார்வைதானே.
    மனஆழத்தைத் தோண்டிவிட்டது கவிதை!

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  9. மயக்கதோடே இருந்துவிட்டுப் போகிறேன் மறுமுறைப் பார்த்துத் தொலைக்காதே என்ற வரிகளை படித்து முடிக்கும் போது ஒரு வித மயக்கம் உண்டாகிறது. அந்த பெண்ணின் பார்வை அவனுக்கு மயக்கம் தருகிறது ஆனால் உங்கள் கவிதையின் நயத்தில் மனதும் மயங்கி போகிறதே

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .

      Delete
  10. எதைப் பாராட்ட? தாங்கள் எடுத்தாண்ட உவமைகளையா? உட்கருத்தையா? கவிதை நடையையா? எல்லாமே அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .

      Delete
  11. எதைப் பாராட்ட? தாங்கள் எடுத்தாண்ட உவமைகளையா? உட்கருத்தையா? கவிதை நடையையா? எல்லாமே அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. //மயக்கதோடே
    இருந்துவிட்டுப் போகிறேன்
    மறுமுறைப் பார்த்துத் தொலைக்காதே !//

    ஆஹா, நல்ல ஃபினிஷிங்!...

    நல்ல நடையில் இருந்த உங்களின் கவிதையினை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .

      Delete
  13. மயக்கதோடே
    இருந்துவிட்டுப் போகிறேன்
    மறுமுறைப் பார்த்துத் தொலைக்காதே !
    //////////
    அக்கா சூப்பர்! ஆழமான அழகான வரிகள்!!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .

      Delete
  14. அருமை...ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .

      Delete
  15. // மறுமுறைப் பார்த்துத் தொலைக்காதே !// படித்தேன் ரசித்தேன்


    படித்துப் பாருங்கள்

    சென்னையில் ஓர் ஆன்மீக உலா

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .

      Delete
  16. இப்படி ஒரு கவிதையை மீண்டும் எழுத வேண்டாம் எத்தனை முறை வாசித்து தொலைப்பது.!

    அருமை அருமை அருமை.!

    த.ம.ஓ 5

    ReplyDelete
    Replies
    1. சிரிக்க கருத்திட்ட தங்களுக்கு நன்றி .

      Delete
  17. மயக்கத்ஹ்டுடன் இருந்து விட்டுப்போகலாம்.சரிதான்,ஆனால் மறுமுறை பார்க்க வேண்டாம் என சொல்வது ஏன் எனப்புரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. மறுமுறை அந்த அவஸ்தை வேண்டாம் என்று தான் .

      Delete
  18. "மது முகர்ந்த வண்டு" அற்புதமான சொல்லாடல்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .

      Delete
  19. மது உண்ட வண்டாய்
    உங்கள் கவி கண்டு மயங்குகிறேன் அக்கா....

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி.

      Delete
  20. //இடிதாங்கியான
    இதயமட்டுமேனோ
    மது முகர்ந்த வண்டைப் போல்
    மயங்கிக் கிடக்கிறது //

    கற்பனை, உவமை-நல்
    கருத்தும் அருமை
    பொற்பனைப் பாடல்-வாசப்
    பூக்களின் ஆடல்

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  21. இடிதாங்கியான
    இதயமட்டுமேனோ
    மது முகர்ந்த வண்டைப் போல்
    மயங்கிக் கிடக்கிறது !

    அருமை!

    ReplyDelete