Sunday 17 June 2012

ஆட்டுவிக்கும் பகடைகளாய் !


தாய்மண்ணிலிருந்துப் புறப்பட்டு
அவள் மடி மீண்டும் போனாலும்
மனம் மட்டும் கல்லாய் மாறும்
மானிடர்க்கு இது சாப வரவாய்!
நுகர்பொருளாய் மாறிவரும்,
நாமெங்கே நிற்கின்றோம்,
கடன்படாமல் கடன்பட்ட,
கடனாளிகள் நாமானோம்!
வாடகைக்கு கருவறைகள் 
வாழ்க்கைப்பட  சீதனங்கள்
அன்புகொடுத்து அவமானம்
அறிவைவிற்று வியாபாரம்!
கண்ணாடி வளையலெல்லாம்
கரைதேடித் தவிக்கிறது.
முன்நோக்கிப் போகையிலே,
சமூகமெழும்பித் தடுக்கிறது!
ஆட்டகால அவசரத்தில்-மன
ஆடை துறந்து ஓட்டங்கள்
ஆட்டுவிக்கும் பகடைகளாய்
ஆயிரமாயிரம் ஆசைகள்!
அரசியலில் தூய்மையில்லை
அன்பிலும் உண்மையில்லை
அரிசியிலும் கல் கலக்கும்
அநீதியாய் வணிகங்கள்!
குடிமகன் போற்றுகிறோம்
குடிகாரராய் குடிமகன்கள்
குலமகள் பாண் இசைப்போம்
குற்றுயிராய் அவர் வாழ்வு!
கல்வியெல்லாம் வியாபாரம்
தெருக்குத்தெரு விபச்சாரம்.
சின்னவீட்டில் சிரிப்பொலி
தலைமுறைமேல் சாபமாய்!
நுகர்பொருளாய் மாறிவிட்டோம்
பொய்வாழ்வு சூடிவிட்டோம்
கனவுகளோடு நாம் வாழ்வதனால்
கண்ணீர் கதவுகள் திறக்கிறது.
உருவமின்றி உள்ளேநுழைவது
காதல் மட்டுமல்ல கடனுந்தான்.
அரவமின்றி அணைக்கும் கடன்
அன்பு வாழ்வின் முடிவாகும்!

29 comments:

  1. //கடன்படாமல் கடன்பட்ட,
    கடனாளிகள் நாமானோம்!//

    அருமையான சிந்தனை

    சமுகத்தின் அத்தனை அநீதிகளையும் ஆட்டுவிக்கும் பகடைகளாய் என்ற இரண்டு வார்த்தைக்குள் கொண்டு வந்துவிட்டீர்கள், சிறந்த எண்ணங்கள்

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகையும் உற்சாகம் தரும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  2. கவிதைகளை உள்வாங்கி அதன் அர்த்தம் உணர்ந்து அதன் கருப்பொருளை அறிந்து அக்கவிதையை விமர்சிப்பதற்க்கே நல்ல திறமை வேண்டும் போல இருக்கு., யெனில் கவிதைகளை புனைய எத்தனை திறமை வேண்டும்.

    என்னால் 'கவிதை நல்லா இருக்கு' என்பதை மட்டுமே கூற இயலுகிறது, கவிதைகளில் எனது திறமை அவ்வளவே.. :)

    ReplyDelete
    Replies
    1. அழகாய் விளக்கம் தந்து அவ்வளவே என்று கூறிய விதம் அழகு .

      Delete
  3. சமூக அவலங்களை,வாழ்வின் வேதனைகளை சொல்லி நிற்கும் சிறந்த கவிதை

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தியமைக்கு . எனது மனமார்ந்த நன்றி ஐயா .

      Delete
  4. கொட்டும் அருவி போல் வார்த்தைகள் வரிகளில் உண்மைகள்

    வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தியமைக்கு . எனது மனமார்ந்த நன்றி.

      Delete
  5. எனக்கு என்றுமே கடன் வாங்கும் பழக்கம் இருந்ததில்லை என்பதால் நிம்மதி. அழகான வரிகளில் அருமையான கவிதை தென்றல். சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நல்ல பழக்கம் நட்பே ..

      Delete
  6. பிரமாதமான கவிதை..யோசிக்க வைக்கும் வரிகள்..வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  7. ம்ம்ம் அருமை சகோ

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  8. உருவமின்றி உள்ளேநுழைவது
    காதல் மட்டுமல்ல கடனுந்தான்.
    அரவமின்றி அணைக்கும் கடன்
    அன்பு வாழ்வின் முடிவாகும்!

    மிகச் சரியான எச்சரிக்கைப் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  9. பொய்வாழ்வு சூடிவிட்டோம்
    கனவுகளோடு நாம் வாழ்வதனால்
    கண்ணீர் கதவுகள் திறக்கிறது.////

    உண்மையான வரிகள்....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  10. உருவமின்றி உள்ளேநுழைவது
    காதல் மட்டுமல்ல கடனுந்தான்.
    அரவமின்றி அணைக்கும் கடன்
    அன்பு வாழ்வின் முடிவாகும்!////////
    மிகவும் நிதர்சனம் கவிதை சூப்பர் அக்கா!

    ReplyDelete
    Replies
    1. உற்சாக வரிகளால் பாராட்டிய சகோதரிக்கு நன்றி .

      Delete
  11. சமுக அவலங்களை கவிதையில் கொட்டி குமுறி இருக்கீங்க..கவிதை நல்லா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. உற்சாக வரிகளால் பாராட்டிய சகோதரிக்கு நன்றி .

      Delete
  12. //உருவமின்றி உள்ளேநுழைவது
    காதல் மட்டுமல்ல கடனுந்தான்//
    நிதர்சனமான உண்மை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  13. அருமையான சிந்தனை .....வலைதளங்களில் அறிவுக்கு உணவிட்ட நீங்கள் உங்கள் இல்லத்தில் வயீற்றுக்கும் உணவு இட்ட செய்தியை கணேஷ் அவர்களின் வலைதளத்தில் படித்தேன்...கவிஞரே நீங்கள் செய்தது ஒரவஞ்சனை எங்களுக்கு உணவு தரவில்ல்லையே....... பரவாயில்லை பதிவாளரை அழைத்து உபசரிக்கும் உங்கள் அன்பு உள்ளத்திற்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் குடும்பத்தோடு எங்கள் இல்லத்திற்கு வருகை தரவும் . அன்போடு அழைக்கிறேன் .

      Delete
  14. அருமை அக்கா

    கண்ணாடி வளையலெல்லாம்
    கரைதேடித் தவிக்கிறது.
    முன்நோக்கிப் போகையிலே,
    சமூகமெழும்பித் தடுக்கிறது

    சூப்பர்ர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. உற்சாக வரிகளால் பாராட்டிய சகோதரிக்கு நன்றி .

      Delete
  15. ''...அரசியலில் தூய்மையில்லை
    அன்பிலும் உண்மையில்லை
    அரிசியிலும் கல் கலக்கும்
    அநீதியாய் வணிகங்கள்!...

    எங்கும் எதிலும் கலப்படம். அது போலப் பலர் கடன்பட்ட நெஞ்சமாய்த் தான். போதும் என்ற மனம் பலரிற்கு இல்லை. நல்ல கருத்துடைய கவிதை. நல்வாழ்த்து சசி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete