Friday 15 June 2012

வேரின் வலிகள்!


ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
ஆங்கே  புழுதியை வாரி
ஆடையாய் உடுத்தும்
மாளிகைத் தாவரங்கள்
அழகழகாய் விதைக்கப்பட்டது
வேரில் நனையவும் விதியில்லை
வேரை நனைக்கவும் இங்கு
தண்ணீர் இல்லை ..!

இயற்கை வளம் காப்போம்
சாலையெங்கும் வாசகங்கள்
சாக்கடை கழிவிலே
எங்கள் சுவாசங்கள் ...
விளம்பரத்திற்காய்  உயிர் பெரும்
சாலையோரத்  தாவரங்கள்
வேர் படர்தளிலும்
என்ன விந்தை
தொட்டித் தாவரமெனும்
பெயரில் வியாபாரங்கள் !

வாயில் காவலரா நாங்கள்
வாடி நிற்கும் எங்களைக்
கண்டால் வேரோடு
பிடுங்கி எரியும் மனிதன் .
வாடிய முகத்தோடு இருக்கும்
மனிதரை என்ன செய்கிறீர் ?
நீரூற்றாமல் வாட்டியும்
துளிர் விடும் தளிரையும்
அழகென்ற பெயரில்
வெட்டிச்  சிதைப்பதும் மானிடரே
கொஞ்சம் கண் பாருங்களேன்
நாங்களும் வாழ வழி சொல்லுங்களேன் !

28 comments:

  1. மனிதனை மனிதனே இரக்கமின்றி அழிக்க நினைக்கும் இக்காலத்தில் செடிகளுக்காய், மலர்களுக்காய் குரல் கொடுத்து ஒரு கவிதை! கருத்தும் நன்று. கவியும் நன்று. வாழ்த்துக்கள் தென்றல்!

    ReplyDelete
    Replies
    1. வருகையும் விரிவான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி வசந்தமே .

      Delete
  2. நல்ல கவிதை அக்கா.!

    tha. ma 2

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ .

      Delete
  3. நீரூற்றாமல் வாட்டியும்
    துளிர் விடும் தளிரையும்
    அழகென்ற பெயரில்
    வெட்டிச் சிதைப்பதும் மானிடரே
    கொஞ்சம் கண் பாருங்களேன்
    நாங்களும் வாழ வழி சொல்லுங்களேன் //!

    அருமையான கருத்துடன் கூடிய கவிதை
    மானமார்ந்த பாராட்டுக்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் ஐயா. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  4. சகோ
    உங்களின் ஒவ்வொரு கவிதையிலும்
    ஒரு நல்ல சமூக இயற்கை நோக்கு உள்ளது
    அந்த ஒரு மனம் பாராட்ட வேண்டிய விஷயம்

    நல்ல சிந்தனைகளை விதைக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  5. வாழத்தெரியாதவன், தெரிந்தும் தெளியாதவன் எப்படி அறிவான் இயற்கையையின் அழிவு நம் அழிவு என்பதை.... நீங்கள் சொன்ன மாதிரி தொட்டிக்குள் செடிகள் வந்துவிட்ட காலமிது, காடுதனை அளித்து, விளை நிலைத்தை மழித்து வியாபாரம் செய்தும் காட்டுமிராண்டி கூட்டம் வாழும் உலகிது...செடிகள் கெஞ்சியா மாறப்போகிறோம் நாம்... நல்ல கவிதை சசி...

    சசியோட வீடு மட்டும் தினம் தினம் ஒரு தோற்றம் தருது... இந்த தோற்றம் ரொம்ப நல்லா இருக்கு சசி...

    ReplyDelete
    Replies
    1. ஆதங்க வரிகளோடு வருகை தந்த சகோதரிக்கு எனது நன்றி .தமிழ்மண ஒட்டு எண்ணிக்கை சகோ .Tha.ma...

      Delete
  6. எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு ஆமாம் சசி அது என்ன tha. ma 2 உங்களுக்கு தெரியுமா?

    ReplyDelete
  7. // சாலையெங்கும் வாசகங்கள்
    சாக்கடை கழிவிலே
    எங்கள் சுவாசங்கள் ...//


    அருமையான வரிகள் இயற்கையை அழிப்பதால் இயற்கையை நாமும் அழிந்து போகிறோம் என்பதை மனிதன் உணர்ந்தால் மட்டுமே திருந்துவான்.வேரின் வழிகளை உங்கள் உள்ளத்தின் வரிகளில் இருந்து செதுக்கியது அருமை


    படித்துப் பாருங்கள்

    வாழ்க்கைக் கொடுத்தவன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  8. mmmmmmmm
    சூப்பரான கவிதை அக்கா.........

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  9. //வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
    வாடினேன்; பசியினால் இளைத்தே
    வீடுதோ றிரந்தும் பசியறா(து) அயர்ந்த
    வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் ;
    நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
    நேருறக் கண்டுளம் துடித்தேன் ;
    ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்(சு)
    இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்,//

    என்று பாடிய வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் கருத்தை அடியொட்டி உள்ள உங்கள் கவிதை என்னை ஈர்த்தது உண்மை.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வள்ளலார் பாடலை பின்னூட்டமாய் தந்து சிறப்பித்தமைக்கு நன்றிங்க .

      Delete
  10. தாவரத்திற்கும் உயிருண்டு வலியுமுண்டு... உணர்ந்தால் மனிதன் அதனை நேசிப்பான்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  11. தாவரத்திற்கான இரங்கற் குரல் அருமை. வித்தியாச சிந்தனை நல்வாழ்த்து சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  12. தாவரங்களை தவிர்த்து மனிதன் நெடுநாள் வாழமுதியாது என்று தெரிந்தும் அலட்சியம் காட்டும் மனிதனை என்ன செய்வது?

    ReplyDelete
  13. வேர்பற்றிய சிந்தனைக் கவிதை வேர்விட்டு தழைக்கிறது! த ம ஓ 4

    சா இராமாநுசம்

    ReplyDelete
  14. //கொஞ்சம் கண் பாருங்களேன்
    நாங்களும் வாழ வழி சொல்லுங்களேன் !//
    தாவரங்களின் வேதனைக் குரல் மனிதர்கள் காதுகளில் விழுமா?
    நன்று

    ReplyDelete
  15. இயற்கை வளம் காப்போம்
    சாலையெங்கும் வாசகங்கள்
    சாக்கடை கழிவிலே
    எங்கள் சுவாசங்கள் ...///
    நான் மிகவும் ரசித்த வரிகள் அருமைங்க! இயற்கை காப்போம் என்பது பேச்சோடு நின்றுவிடுகிறது பல சமயங்கள்! வீட்டுக்கொரு மரம் நட்டு வைத்த பிறகு மறந்துவிடுகின்றன பலர்!!

    ReplyDelete
  16. வாயில்லா செடிகளுக்காகவும், மலர்களுக்காகவும் குரல் கொடுக்கும் உங்கள் கவிதையின் ! கருத்து மிக அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete