Thursday 14 June 2012

பூவாய் மலர்ந்தவளே!



கண்ணே கலைமானே!
வாடாக்கதிரின் ஒளியையணிந்து,
பூவாய் மலர்ந்தவளே!
உதிர்ந்து வீழ்ந்த விண்மீன் பிடித்து,
வதனமணிந்தனையோ!
தங்கத்தாமரை வடிவில் வலம்வரும்,
பெண்ணே பேரெழிலே!
கடலில் இருந்து அலையில் வந்த,
முத்து நீதானோ!
கட்டிக் கரும்பே தேனேப் பாலே,
மழலை உன் மொழியோ!
மரகதக்கல்லே மாணிக்கச் சுடரே,
தமிழே நீதானோ!
கானகக் குயிலே சோலைப் பாட்டே,
இசைதான் உன்குரலோ!
பாசக் காற்றே பரம்பொருள் அன்பே,
வெண்ணிலா உன்வடிவோ!
வண்ண மேகமே எண்ண தீபமே,
மழைத்துளி ஆனவளோ!
கலைமான்போலே நடக்கும் உந்தன்,
பாதம் பனியில் செய்தானோ!
இதயமே இரக்கமே உதயமே நீயொரு,
கவிதைத் தோரணமோ!
பசுந்தளிர் மேனியில் நடனமாடும்,
கலைதான் ஓவியமோ!
காலம் வாழ்த்தும் கோலமணிந்த,
காவியமாவாயோ!
கவியாய் வாழும் உன்னைப் பாடிட,
வானம் பொழியுமடி!
கண்ணிண் மணியென கவிஞர்கூடி,
வாழ்த்தும் நேரமதை!
கண்டு நிறைந்திட காத்திருக்கும்,
ரசிகை நானடியே!



ஒரு பெண் குழந்தை இருந்தால் இப்படிக் கொஞ்ச ஆசை .
படம் இணையத்தில் எடுத்தது .

41 comments:

  1. இன்னும் பெண் சிசு கொலைகள் நடப்பதுதான் கொடுமை..

    ReplyDelete
    Replies
    1. இல்லாதவர்க்கே அருமை தெரியும் .

      Delete
  2. அழகான கொஞ்சல்..

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. தாய்மையின் அன்பு குழந்தையைக் கொஞ்சும் கவிதையில் பொங்கி வழிகிறது. இரண்டும் ஆண் குழந்தைகளாக பிறந்து விட்டால் இரண்டாவது பையனை பெண்ணாக நினைத்துக் கொஞ்ச வேண்டியதுதான். (நான் அம்மாவுக்கு 2வது பையன். கவிதையைப் போன்றே கவிதைக்கான பெண் குழந்தையின் படமும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. பெண்மைக்கே உண்டான சிறப்புகள் ஏக்கத்தையே உண்டு பண்ணும் .

      Delete
  5. // கண்ணிண் மணியென கவிஞர்கூடி,
    வாழ்த்தும் நேரமதை!
    கண்டு நிறைந்திட காத்திருக்கும்,
    ரசிகை நானடியே!//

    வரிகள்தோறும் வருணனை கொடி கட்டிப்
    பறக்க கவிதை அருமை!
    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தியது கண்டு மகிழ்ந்தேன் ஐயா. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  6. செல்ல கொஞ்சல் வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை அழகு சகோ .

      Delete
  7. நீங்க என்னைக் கொஞ்சற மாதிரி நினைச்சுக்கிட்டேன். மனசைக் கவர்ந்துடுச்சு சூப்பரா எழுதறீங்கக்கா...

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சல் பெண் பிள்ளைகளுக்குத்தானே என் தங்கை உனகில்லாமலா.

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. // கட்டிக் கரும்பே தேனே பாலே,
    மழலை உன் மொழியோ!
    மரகதக்கல்லே மாணிக்கச் சுடரே,
    தமிழே நீதானோ!//

    கவிதையும் அருமை.அதற்கான புகைப்படமும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தியது கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  10. பெண்ணழகு பேழகு,
    பெண்மகள் அழகு,
    பெரும்பேர் அழகு,
    பெண்ணாய் பிறத்தல்,
    பெரும் வரமென எண்ண,
    பெருமையாய் கவிதை!
    நன்றி நற்கவிதைக்காக.

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தியது கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  11. // ஒரு பெண் குழந்தை இருந்தால் இப்படிக் கொஞ்ச ஆசை .//

    தாய்மை உள்ளத்தோடு ஒரு கவிதை. வேறு ஒன்றும் சொல்ல எனக்குத் தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தியது கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  12. குழந்தையைக் கொஞ்ச வார்த்தைகள் ஏது?

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தியது கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  13. பாட்டாக பாடிப்பார்த்தேன் அருமை..கருப்பொருள் இன்னும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தியது கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  14. குழந்தையின் சிரிப்பு கொள்ளை அழகு!
    அழகை அழகாகக் கொஞ்சும் கவிதை அதை விட அழகு!

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தியது கண்டு மகிழ்ந்தேன் ஐயா. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  15. ம்ம்ம் சொல்ல தேவையில்லை உங்கள் வரிகளை அக்கா...

    மிகமிக அருமை பெண் சிசு கொலைக்கள் என்னும் தொடர்கின்றன. இந்த கேடு கெட்ட சமூகத்தில்....

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தியது கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  16. சகோதரி...
    படத்தைப் பார்த்துக் கோஞ்சியது போதும்.
    உண்மையில் நீங்கள் அவளைக் கொஞ்சுவதை
    நாங்கள் பாட்டில் பெறுவது எப்பொழுது...?

    ReplyDelete
    Replies
    1. சகோ மக்கள் தொகை பெருக்கம் அதிகம் எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்காங்க .

      Delete
  17. அருமையான படம் மற்றும் கவிதை. குழந்தைகள் அதுவும் பெண் குழந்தைகள் என்றாலே ஒரு அழகுதான்....

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அந்த அழகையும் சிதைப்பவர் உண்டே என்ன செய்வது சிசுக்கொலையை சொல்கிறேன் .

      Delete
  18. வா மகளே
    பூ மகளே
    வான் போற்றும்
    பொன்மகளே
    நான் அயர்ந்துறங்க
    உன் பூமடி
    தா மகளே...

    பெண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு
    உங்கள் கவிதையின் தாக்கம் புரியும் சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அண்ணா தங்களுக்கும் என்னைப்போலவே இரண்டு ஆண் குழந்தைகள் அல்லவா .

      Delete
  19. குழந்தையின் மழலைகுரலுக்கு இணையான இசை இதுவரை உலகில் இசைக்கப்படவில்லை.!

    tha.ma 7

    ReplyDelete
  20. உங்கள் பதிவில் இருக்கும் குழந்தை அழகாக அல்லது உங்கள் கவிதை அழகாக என்று குழம்பி போய்வீடேன். தமிழில் எப்படி எல்லாம் ஒரு பெண் குழந்தையை கொஞ்சலாம் என்பதை உங்கள் கொஞ்சு தமிழ் மூலம் அறிந்து வியக்கிறேன்.வாழ்த்துக்கள்.

    இந்த கொஞ்சலுக்காகவே உங்களுக்கு குழந்தையாய் பிறக்க ஆசையாய் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பின்னூட்டமே எனை வியக்க வைக்கிறது .

      Delete
  21. Replies
    1. வருகை தந்து வாழ்த்தியது கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  22. ஒரு சிறந்த அன்னையின் உள பூர்வ தாலாட்டு விரைவில் ஒரு பெண்மகவு பூத்திட வாழ்த்துகள்

    ReplyDelete