Sunday 30 December 2012

ஆண்டொன்று போனால் ...


எதிர்பார்ப்பு இல்லையெனில்
வாழ்க்கையில் ஒன்றுமில்லை
எதிர்பார்ப்பே வாழ்வானால்
ஏமாற்றம் எஞ்சி நிற்கும் !

எனக்கென்று எதைத் தருவாய் ?
கனவோடு காத்திருந்தேன்.
கரைந்தோடும் நீர் மணிபோல்
மறைந்தோடிப் போகின்றாய்.

விரிந்து பரந்த நீலவானில்
நெற்றிச்சுட்டி விண்மீனில்
மறைந்திருக்கும் மாயங்களை
எனக்காய் தருவாயோ ?

மேகங்களில் மறைந்திருந்து
வழிகாட்டும் பார்வையிலே
வாழ்ந்திருக்கும் கவிதைகளை
அள்ளித் தந்து மகிழ்வாயோ ?

காற்றின் இசைப் பாட்டுகளாய்
காதில் சொல்லும் மந்திரத்தை
காதோரம் கொண்டு தந்து
கதைகள் சொல்வாயோ ?

ஆண்டொன்று முடிந்ததுவாம்
ஆசைக்கேது முடிவிங்கே !

15 comments:

  1. எதிர்பார்ப்பு இல்லையெனில்
    வாழ்க்கையில் ஒன்றுமில்லை
    எதிர்பார்ப்பே வாழ்வானால்
    ஏமாற்றம் எஞ்சி நிற்கும் !
    // சிறப்பான வரிகள்! அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
  2. எதிர்பார்ப்பு இல்லையெனில்
    வாழ்க்கையில் ஒன்றுமில்லை
    எதிர்பார்ப்பே வாழ்வானால்
    ஏமாற்றம் எஞ்சி நிற்கும் !

    சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
    தொடர வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்க்கள் குடும்பத்தாருக்கும் இனிய
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எதிர்பார்ப்புக்களை அளவோடு வைத்திருந்தால் ஏமாற்றத்தின் தாக்கமும் குறைவாகவே இருக்கும் சசி.என் இனிய அன்பான புத்தாண்டு வாழ்த்துகள் தோழி.நல்லதே நடக்கும் !

    ReplyDelete
  4. வரும் புத்தாண்டில் இதேபோல பல கவிதைகள் எழுதி அவற்றை புத்தகங்களாக வெளியிடும் பாக்கியம் கிடைக்கட்டும். உங்கள் சிறப்புக்கள் மேலும் சிறக்கட்டும்.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ஆண்டுக்கு நாளுண்டு ஆசைக்கு எல்லையுண்டோ கணக்குண்டோ?

    ReplyDelete
  6. //எதிர்பார்ப்புக்களை அளவோடு வைத்திருந்தால் ஏமாற்றத்தின் தாக்கமும் குறைவாகவே இருக்கும் சசி.என் இனிய அன்பான புத்தாண்டு வாழ்த்துகள் தோழி.நல்லதே நடக்கும் !//
    உங்கள் கவிதைக்கொரு பின்னூட்டமாக‌
    நான் சொல்ல நினைத்ததை
    தெளிவாக சொல்லியிருக்கிறார் ஹேமா அவர்கள்.

    அவர்களுக்கும் உங்களுக்கும் உங்களது
    வாசகர் நண்பர்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    சுப்பு ரத்தினம்
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  7. ஆசைக்கு முடிவில்லை .நன்றாக சொன்னீர்கள்

    ReplyDelete
  8. ஆண்டொன்று முடிந்ததுவாம்
    ஆசைக்கேது முடிவிங்கே !//

    நல்லதொரு கவிதை.
    மனமார்ந்த பாராட்டுக்கள்.
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. ////ஆண்டொன்று முடிந்ததுவாம்
    ஆசைக்கேது முடிவிங்கே !///
    ஆசைக்கு முடிவு தேவையில்லை அந்த ஆசை நமது மனதுக்கு பிடித்தவர்கள் மேலே மட்டும் இருந்தால்

    ReplyDelete
  10. உண்மைதான் ஆசைக்கு அளவில்லை முடிவும் இல்லை. நல்ல கவிதை தந்தமைக்கு நன்றி.
    தங்களுக்கு எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ஆம் ஆசைக்கெங்கே முடிவு!
    மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லையென்றும் ஓரு
    சொல்வழக்கு உண்டு.
    தங்கள் பணிக்கு இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. ஆசைப்படுவதில் தவறில்லை. ஆசைகளுக்கு வானமே எல்லை. அப்போதுதான் சாதிக்க முடியும்!
    ஏமாற்றம் வரும் என்று உணர்ந்திருந்தால் எதிர்பார்ப்பதிலும் தவறில்லை!!

    புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete