Sunday 30 December 2012

முடிவில்லா நிகழ்வுகள் !



இதயயிமை மூடிவைத்தே சிலர்
இருளாக வாழ்கின்றார் இவர்
அம்மாவாசை பயணத்தால பல
பௌர்ணமிகள் மாசுபட்டுலகில்
உதிர்வதேன்?காரணம் தேடலாய்!

பெற்றவர் செய்த தவறின் பலனோ?
வளர்ப்பால் விளைந்த பாவப்பதரோ?
போதையால் பாதை மாறிய நிலையோ?
கூடாதநட்பு காட்டிய தீமை வழியோ?
கலாச்சாரச் சீரழிவின் அரங்கேற்றமோ?
கறுப்பாடுகளின் இச்சைசெய்யும் மோசமோ?
சட்டத்தின் ஓட்டை கொடுக்கும் தைரியமோ?
சாகவரம்பெற்ற ஆசையின் தூண்டுதலோ?
தேடினனெல்லாமே மனிதன் மிருகமாக!

அன்புமகள் சல்லடையாய்,மனிதநேயம்?
சட்டமும் சரியாயில்லை சமூகப்பார்வை
சந்தைக்குவந்த விளைபொருளாய் விற்க!
உயிர்போனால் ஒப்பாரி -வருமுன் காக்க
ஆள்வாருமில்லை ஆண்டவனுமில்லை!
முடிவில்லா நிகழ்வுகள் முடிவுரையறியாது
கண்ணீரால் லாபமில்லை தீமைவேறறுக்க
கையில் ஆயுதமேந்தினுமினி பாவமில்லை!

8 comments:

  1. அழகாய் அற்புதமாய் சொன்னீர்கள்
    நடக்கும் யாவையும் பார்த்தால்
    மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து
    பைத்தியம் பித்தம் பிடித்த ஒருவகை
    என்ன பெயர் வைத்து சொல்வதென்றே
    தெரியவில்லை... மிருகம் என்று சொன்னால்
    மிருகங்களும் சண்டைக்கு வருகின்றன இந்த
    பாவிகளோடு எங்களை ஏன் சேர்த்து வைத்து
    பேசுகிறீர்கள் என்று...

    அப்படி ஈனப்பிறவிகளாய்
    மாறியே வருகின்றனர்... மாறவேண்டும்.. இல்லையேல் நாம் தான் மாற்றவேண்டும்..
    தண்டனை எனும் உயர் சக்தியால்... எல்லாத்தையும் விட தனிப்பட்ட ஒழுக்கம் என்ற இருந்தால் மட்டுமே இதுபோன்ற அக்கிரமம் நடக்காமல் இருக்கும்.... கடவுளே இல்லையோ
    என்ற ஐயமும் சில சமயம் எல்லோருக்கும் எழுவதுமுண்டு... என்ன செய்ய நாமும் மனிதர்கள்தானே... ஓரளவுக்கு பொறுமை தானே நம்மால் காக்க முடியும்....

    மாறினால் நாடு சுபிக்ஷமாகும்... இல்லையேல்...
    நாடே சுடுகாடுதான்... மாயன் சொன்னது பழித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று எல்லோரும் என்னும் வகையில் அமைந்துவிடும் போலிருக்கிறது.... மனிதர்களே மனிதர்களாக வாழ முயற்சியுங்கள்... அதுதான் சிறந்த ஒன்று...

    நல்லதொரு சாடல் சசி கலா ...
    தங்களின் மனக்குமுறல் நியாயமான ஒன்று...
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தங்களுக்கு....

    ReplyDelete
  2. முடிவில்லா நிகழ்வுகள் முடிவுரையறியாது
    கண்ணீரால் லாபமில்லை தீமைவேறறுக்க
    கையில் ஆயுதமேந்தினுமினி பாவமில்லை!

    சாகாவரம் தரும் வரிகள்....

    ReplyDelete
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  4. // கண்ணீரால் லாபமில்லை தீமைவேறறுக்க
    கையில் ஆயுதமேந்தினுமினி பாவமில்லை!//
    காக்கவேண்டியவர்கள் காக்கத் தவறுகின்றபோது ஆயுதம் ஏந்துதல் தவறில்லை என்ற கருத்து சரியே!

    ReplyDelete
  5. // அன்புமகள் சல்லடையாய், சட்டமும் சரியாயில்லை, சந்தைக்குவந்த விளைபொருளாய், உயிர்போனால் ஒப்பாரி! - // என்று இன்றைய சமூக நிலைமையை குமுறலாய் கொட்டி விட்டீர்கள்.

    ReplyDelete
  6. இப்படியான நிகழ்வுகள் அதிர்வுகளைக்கூடத் தராமல் இப்போவெல்லாம் பயப்பட வைக்கிறது சசி !

    ReplyDelete
  7. சில சந்தர்ப்பங்களில் அன்பு மகள் சல்லடையாய் போக பெற்றோரும் காரணமே..

    ReplyDelete
  8. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்தினருக்கும்

    ReplyDelete