Friday 21 December 2012

உயிரெதற்கு உடம்பினிலே !


சந்தனத்தில் குளித்தெழுந்து-உனை
         சந்திக்க வருகிறேன்
நினைவுகள் துரத்த - ஓடி மறைய
    நீண்ட வெளி தேடுகிறேன்.

எட்டு திக்குமெங்கும் - என்னில்
      எரி கல்லே விழுந்திடுதே
எரிந்து முடித்த பின்னும்
     எலும்பிலும் உன் நேசம் .

அந்தியில்  ஆற்றங்கரையில்
     அடுத்தடுத்து காத்திருந்த பொழுதெலாம்
கனவாய் போனதடி - நானும்
    கல்லாய் நின்னேனடி.

இமை இரண்டும் வாடி - நெஞ்சில்
    ஈரம் தெரிந்ததடி 
இதயத்தில் துடிப்பிருந்தும்
    ரத்தம் உரைந்தே போனதடி.

பாடும் பறவையினம் - உனை
   பாடி அழைப்பதென்ன
பாவி என் நிலையை
  பார்த்து சிரிப்பதென்ன.

உன்னைப் பார்த்த விழி
    ஓவியம் காண மறுக்குதடி
கன்னல் மொழி கேட்ட பின்னே - திண்ணை
    கதைப்  பேச்சும் மறந்தேனடி.

உயிரெதற்கு உடம்பினிலே
   உதிரம் குடிக்கும் காதலாளே...

17 comments:

  1. எந்த வரியையும் குறிப்பிட்டுச் சொல்லாதபடி அனைத்திலும் காதல் நிரம்பி வழிகிறது.
    அருமை சகோதரி...

    ReplyDelete


  2. காதலே பிதற்றலாய் கவிதை வடிவெடுத்ததோ?

    ReplyDelete
  3. அருமையான காதல் கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. // உயிரெதற்கு உடம்பினிலே
    உதிரம் குடிக்கும் காதலாளே...//

    அருமை :)

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. \\பாடும் பறவையினம் - உனை
    பாடி அழைப்பதென்ன
    பாவி என் நிலையை
    பார்த்து சிரிப்பதென்ன.//

    அருமையான பதிவு காதலுக்காய் உயிரைவிடுவது முறையா?

    ReplyDelete
  6. பிரிவின் துயரம்!

    ReplyDelete
  7. மிகச் சரளமாக எப்படி உங்களுக்கு மட்டும்
    உணர்வோடு கலந்து வார்த்தைகள் இப்படி
    அருமையாக அமைகின்றன என ஆச்சரியப்படுத்தும் கவிதை

    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. காதல் கலந்த வரிகள்.
    நன்று. நல்வாழ்த்து.
    பயணக்கதை இறுதி அங்கம் இட்டுள்ளேன்.
    கடந்த இடுகையின் பதிலைப் பார்க்கவும்.
    வேதா. இலங்காதிலகம்.
    (Just I think and clikked your site)

    ReplyDelete
  9. காதல் கலந்த வரிகள்.
    நன்று. நல்வாழ்த்து.
    பயணக்கதை இறுதி அங்கம் இட்டுள்ளேன்.
    கடந்த இடுகையின் பதிலைப் பார்க்கவும்.
    வேதா. இலங்காதிலகம்.
    Just I think and clikked your site...
    http;//kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  10. அருமை! வலைச்சரத்தில்என்னுடைய "அணைத்திட வருவாளோ" படித்தீர்களா? பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  11. // எரிந்து முடித்த பின்னும்
    எலும்பிலும் உன் நேசம் .//
    வாவ்!

    ReplyDelete
  12. காதல் வந்தால் ஒருவிதப் பைத்தியமாகிவிடுகிறோமே !

    ReplyDelete

  13. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு
    01.01.2013

    ReplyDelete