Tuesday 18 December 2012

மாய வாழ்க்கை வாழ்ந்தெதற்கு ?



சாமியும் சரியில்லை
ஆசாமியும் நிலையில்லை
கருத்துப் போட்டியிலே
கவிதைகள் பிறக்கலாம்.

சொத்து பத்துக்களால்
சொந்தம் பிரியலாமா ?
ஆறடி மண்ணுக்கும்
அவகாசம் இல்லையடா ?

மின்சார நெருப்பினிலே
எரிகின்ற மேனியடா.
உருகாத வெண்ணை தேடும்
அறிவு சார் ஜீவிகளும்.

கிரகங்கள் ஒன்பதும்
ஆள்கின்ற சக்திகளாய்.
வான் கடல் நீந்தி வாழும்
விண்மீன்கள் பாவமடா.

கதிரவன் திமிங்கலமாய்
நிலவு மகள் மீனினமாய்
துருவங்கள் முத்துக்களாய்
நீலவானும் கடல் தானோ ?

அழுக்கில்லா மேனிதனை
தேடியோடும் மனம் கண்டேன்
அப்பழுக்கில்லாத மனம்
தேடயாருமில்லை.

மாசு நீக்க வழிவேண்டும்
மாய வாழ்க்கை வாழ்ந்தெதற்கு ?

14 comments:

  1. // மாசு நீக்க வழிவேண்டும்
    மாய வாழ்க்கை வாழ்ந்தெதற்கு ? //

    போலித்தனம் ஒழிய வேண்டும் !

    அழகிய கவிதை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. என்னதான் செய்ய முடியும் !...இந்த உலகத்தில் எல்லாமே மாயைதானே :)

    ReplyDelete
  3. ஆறடி மண்ணுக்கும்
    அவகாசம் இல்லையடா?

    // நல்ல கேள்வி யோசிப்போம்

    ReplyDelete
  4. கதிரவன் திமிங்கலமாய்

    நிலவு மகள் மீனினமாய்

    துருவங்கள் முத்துக்களாய்

    நீலவானும் கடல் தானோ ?///
    நன்று! நன்றி!

    ReplyDelete
  5. மாயமில்லா வாழ்க்கை
    வாழவே வழி தெரியாமல்
    திக்குமுக்கு ஆடி இங்கே
    பரிதவிக்கும் ஜீவன்களும்
    இங்கே தாராளமாய் ஏராளம்.

    அத்தனைக்கும் பதிலாக இங்கே
    அழகாய் சொல்லி மாயை
    விடுத்து நிஜத்தை அன்பான உள்ளத்தை
    மட்டுமே நாடி வாழும் வகை
    செய்ததற்கு அன்பான என் பாராட்டுக்கள்...

    ReplyDelete

  6. மாய வாழ்க்கை வாழ்ந்தெதற்கு ?

    மாசு நீக்க வழிவேண்டும்

    அருமையாய் சிந்திக்கவைக்கும் வ்ரிகள்..

    ReplyDelete
  7. super kavithai.

    watch my blog sentamilanban.blogspot.in

    ReplyDelete


  8. என்ன ஆச்சு உங்களுக்கு?
    என்ன இவ்வளவு விரக்தியா பாடுறீக..?

    அப்பழுக்கில்லாத மனம்

    அகிலத்திலொன்று இருப்பதென்றால்
    அது, ஒன்று
    அன்னையின் கர்ப்பத்தில் இருக்கவேண்டும் .
    இல்லை
    காஞ்சி கோவில்
    கர்ப்ப க்ருஹத்தில்
    கல்லாய் அமர்ந்து
    காலம் காலமாய் அருள் புரியும்
    காமாட்சியாய்
    காணவேண்டும்.



    இல்லாத ஒன்றை
    இல்லாத இடத்தில்
    இருட்டின் நடுவே
    இனியும் தேடாதீர்.

    சுப்பு ரத்தினம் என்கிற
    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  9. //மாய வாழ்க்கை வாழ்ந்தெதற்கு ?//

    விடுங்க... இன்னும் ரெண்டு நாள்தானே!!!!

    ReplyDelete
  10. அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. இருட்டில் இல்லாததை தேடக்கூடாது

    ReplyDelete
  12. மாய வாழ்க்கையை மாயன்கள் தான் தீர்மானிக்கிறார்கள் என்று சில அறிவியல் ? வாதிகளும் புலம்புகிறார்களே

    நல்ல கவிதை

    ReplyDelete
  13. நாங்களேதான் அழிக்கிறோம் பின் தேடுகிறோம் !

    ReplyDelete