Monday 17 December 2012

உண்மையன்பு எதுவென்றே ஓர்தேடல் !


அரசவைக்கவியுடனே அரசனானகலையரசும்
அரங்கேற்றிய விவாதமேடைப் பொருளாய்
உண்மையன்பு எதுவென்றே ஓர்தேடல் அரங்கேற!

அற்றவன் வந்துரைப்பான் அன்பு பொய்யதனால்
அனைத்தும் விட்டொழித்து துறவறம் பூண்டிங்கே
ஆசைதனைத் துறந்து அட்சயபாத்திரம் ஏந்தினன்!

ஆண்டவன்மேல் கொண்ட அன்பேயன்பு என்றியம்ப,
மன்னனவன் சொல்வான் மக்கள்மீது அன்புவைத்து
அவர்காத்து துன்பம் நீக்குதலே தலையாய அன்பென்றான்!

குடிமகனவனெழுந்து கொண்டாளை நேசித்து பிள்ளைகளை
சீர்படுத்தி பண்போடும் அறிவோடும் வளர்த்தலழகென்றான்!
சுட்டிச் சிறுமியொருத்தி பட்டன துள்ளியெழுந்து பட்டாடை
பளபளக்க சொல்வாள் என் அம்மாவின் அன்பே அன்பென!

தாயன்பு பெரிதா?சேயன்பு சிறப்பா?காதலன்பு அரிதா?
எத்தனையோ கேள்விகளும் எதிர்கருத்தும் புயலானவேளை
அவையிலேயொரு பைத்தியம் அத்துமீறி உள்நுழையக்
காவலன் அவளையடித்து புறம்பேதள்ள முயல்கையிலே
பாடினள் ஓர்பாட்டு யாரும் பாடாதப் புதுப்பாட்டு!

புரிதலுமில்லே பகிர்தலுமில்லே புரியாமல் அன்பேதடா
புரிந்துகொண்டால் நானேதடா எல்லாமே நாம்தானடா!
நடுவர் தீர்ப்புரைத்தார் -புரிதலும் பகிர்தலுமில்லா அன்பு
அன்பில்லை அதுவாழின் எல்லாஅன்பும் நன்றேயென்று!
பைத்தியத்தின் உளரலா?இல்லை வாழ்க்கைப் பாடமா?

13 comments:

  1. அன்பைப்பற்றி அன்பான வரிகள் !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. ///புரிதலுமில்லே பகிர்தலுமில்லே புரியாமல் அன்பேதடா//

    உண்மையை உரைக்கும் வரிகள்.

    இப்போது கணவன் மனைவிகளிடம் புரிதலுமில்லே பகிர்தலுமில்லே ஆனால் அன்பை எதிர்பார்த்து விரக்தியில் வாழ்க்கையை நடத்தி கொண்டு இருக்கின்றனர்

    ReplyDelete
  3. நல்ல பதிவு \\ அன்பு அன்பில்லை அதுவாழின் எல்லாஅன்பும் நன்றேயென்று!//

    ReplyDelete

  4. அரசவையில் உண்மையன்பை பற்றிய தங்கள் சொல்லாட்சி ரசிக்க வைத்தது
    வாழ்த்துக்கள்

    புரிதலும் பகிர்தலுமில்லா அன்பு அன்பில்லை

    சரி தான்

    ReplyDelete
  5. அது உளறல்ல.வாழ்க்கைப் பாடம்தான். கவிதையை இரசித்தேன்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. திடீரென்று கவிதையின் வேறுவிதமாக நகர்த்துகிறீர்களே...
    நன்று ஆனாலும் கிராமத்துக் கவிதைகள் உங்களிடம் இருந்து வருவது இன்னும் சிறப்பு

    ReplyDelete
  7. தாயன்பு பெரிதா?சேயன்பு சிறப்பா?காதலன்பு அரிதா?//// ஆஹா! ஆஹா! எது பெரியது????

    கடைசி வரிகள் கலக்கல் அருமையான பதிவு

    ReplyDelete
  8. நல்ல கருத்து சசிகலா.
    த.ம. 1

    ReplyDelete
  9. புரிதலுமில்லே பகிர்தலுமில்லே புரியாமல் அன்பேதடா
    புரிந்துகொண்டால் நானேதடா எல்லாமே நாம்தானடா!//அருமையான

    ReplyDelete

  10. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்...!

    ReplyDelete
  11. ஆசைதனைத் துறந்து அட்சயபாத்திரம் ஏந்தினன்!

    அட்சயபாத்திரமாய் கருத்துகள் நிரம்பிய அருமையான கவிதைகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete