Thursday 13 December 2012

துளித் துளியாய் !



என்னோடு உனைப்பார்த்தால்
கடிகார முட்களுக்கும் கை கால்
முளைத்துவிடுமோ ?
ஏன் இந்த ஓட்டம் பிடிக்கிறது.

சிறு சிறு பிரிவுகள் தான்
உனக்கான என் நெருக்கத்தை
வெளிபடுத்துகின்றன.

புள்ளி மானாய் ஓடி
மெழுகாய் உருகி
நீரில்லா மீனாய் தவித்து
வாடிய பயிராகிறேன்
வழக்கமான உன் உரையில்லாத போது.

தினத்தேடல்கள் கூட
திகட்டாத உன் அன்பில்
காணமல் போகின்றன..
கள்வனே கவர்ந்ததை
கொடுத்துவிடு.

இல்லையென்பதற்கும்
இருக்கு என்பதற்கும்
அதிக வித்தியாசம் இல்லை
இதோ என் முன்னே இருக்கிறாயே
அன்பு இருப்பதை உணரமுடிகிறது.

பகலுக்கான
இரவின் காத்திருப்பாய்
அர்த்தமற்றுப்போகிறது..
சில காத்திருப்பு.

25 comments:

  1. தினத்தேடல்கள் கூட
    திகட்டாத உன் அன்பில்
    காணமல் போகின்றன..
    கள்வனே கவர்ந்ததை
    கொடுத்துவிடு.//

    மிகவும் அருமை!

    கவர்ந்ததை கொடுத்துவிட்டால் கள்வனாக தொடரமுடியாதே...........

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. என்னோடு உனைப்பார்த்தால்
    கடிகார முட்களுக்கும் கை கால்
    முளைத்துவிடுமோ ?
    ஏன் இந்த ஓட்டம் பிடிக்கிறது.


    நன்று.
    இரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. அழகிய உவமைகளோடு அழகிய கவிதை...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  4. கடிகார முட்களின் வேகம் தங்கள் வரிகளில் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete



  5. மணித்துளி காட்டும் கடிகாரம்
    அணைந்தே உன்னுடன் எனைப்பார்த்தால்
    சிறகும் முளைத்தே பறந்திடுமோ !

    கவிதை மிகவும் கடினமாக இருந்ததால் அதன் பொழிப்புரை தருகிறேன்.
    உங்களது வாச்கர்களுக்காக.

    பிரிந்தேன் உனையே என்றாலும்
    மறந்தேன் என்றேன் நிலையிலையே ?
    அருக்கம்புல்லாய் நீ அமர்ந்து
    நெருங்கே என்னை நெருடுகிறாய்.

    ஓடுகையிலே நான் புள்ளி மான்
    உருகையிலே நான் மெழுகென்பேன்.
    துடிப்பதிலே நான் நீரிலா மீன்
    வாடியபோதெலாம் நான் தஞ்சைப் பயிர்.


    தேடித் தேடித் திளைத்துப்போன
    தேனினும் இனிய உன் அன்பை
    கண்டேன் நான் உன்னிதயத்தில்
    கள்வா ! நீ அதைத் தந்துவிடு.


    இல்லை என்பேன்.
    உள்ளேன் என்றே நீ நிற்பாய்.
    அன்பே எனவே நான் கூவ
    என் இதயத்துள்ளே எதிரொலிப்பாய்.


    இரவில் ரவி வருவானோ !
    இனியும் காப்பதில் பொருளுண்டோ
    துயிலில் துயரத்தை தோய்த்துவிடு.
    விழியில் மயக்கத்தைக் கொண்டு விடு.

    சுப்பு தாத்தா.
    (சுப்பு ரத்தினம்)



    ReplyDelete
    Replies
    1. அழகாக சொன்னீர்கள் ஐயா நன்றி.

      Delete
  6. துளித் துளியாய்த் தேன் துளிகள்
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அருமையான காதல் கவிதை!

    ReplyDelete
  8. எங்கெங்கு நோக்கினும் உன்முகம் எனினும் தாமதம் என்பதுபோல்
    \\இதோ என் முன்னே இருக்கிறாயே
    அன்பு இருப்பதை உணரமுடிகிறது.//

    ReplyDelete
  9. அழகாக சொல்லி இங்கே
    காத்திருப்பின் அற்புதத்தை
    விளக்கி இருக்கிறீர்கள்...

    காத்திருப்பிற்கு முன்னதாக
    அன்பினை வெளிக்காட்டிய
    உள்ளங்களே இதுபோன்ற
    சொல்லமுடியாத இன்பமான
    அவஸ்தைகளை காணநேரிடும்..

    காத்திருப்பில் எப்போதுமே
    ஒரு அர்த்தமும் நியாமும்
    இருக்கவேண்டும் அத்தகைய
    காத்திருப்பிலும் சந்தோசங்கள்
    இருக்கத்தானே செய்கின்றன..

    பாராட்டுக்கள் தங்களுக்கு சசி கலா
    மேலும் தொடரட்டும் இருப்புக்கள்...

    ReplyDelete
  10. காத்திருப்பில் உள்ள
    இன்பத்தை தெளிவாக
    சொல்லி இருக்கும்
    தங்களுக்கு மனமார்ந்த
    பாராட்டுக்கள் சசி கலா.

    ReplyDelete
  11. // இல்லையென்பதற்கும்
    இருக்கு என்பதற்கும்
    அதிக வித்தியாசம் இல்லை/

    உங்களது கற்பனைத் திறன் என்னை வியக்க வைக்கிறது.

    பகலுக்கான இரவின் காத்திருப்பு ....

    டி.எஸ்.எலியட் ஆங்கிலக்கவியின் கற்பனை வெள்ளம் போல்
    இருக்கிறது. அவரும் உங்களைப்போலவே தான் மரபுக்கவிதையிலிருந்து
    மாறி தனக்கென ஒரு பாணி வகுத்துக்கொண்டார்.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அது இருக்கட்டும்.

    நடு நடுவே ஒன்றிரண்டு
    மரபுக்கவிதைகள் தாங்கள் எழுதலாமே !

    சுப்பு ரத்தினம்.





    ReplyDelete
  12. சிறப்பான கவிதை.... பாராட்டுகள்.

    ReplyDelete
  13. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. நன்கு ரசித்தேன்.. முதல் நான்கு வரிகள் அருமை..

    ReplyDelete
  15. / இல்லையென்பதற்கும்
    இருக்கு என்பதற்கும்
    அதிக வித்தியாசம் இல்லை/

    அருமை...

    ReplyDelete
  16. கள்வன் எடுத்ததே களவு.கேட்டுவிட்டால் தந்துவிடப்போகிறானா என்ன...சசி !

    ReplyDelete
  17. // கடிகார முட்களுக்கும் கை கால்
    முளைத்துவிடுமோ ?
    ஏன் இந்த ஓட்டம் பிடிக்கிறது.//

    அருமையான வரிகள் !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  18. சிறு சிறு பிரிவுகள் தான்
    உனக்கான என் நெருக்கத்தை
    வெளிபடுத்துகின்றன.
    // அருமை! இதே கருத்தை என்னுடைய "தனிமை!" எனும் கவிதையில்
    "எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருப்பதை உணர்த்(ந்)திடும் தனிமை! என எழுதியுள்ளேன். பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  19. புள்ளி மானாய் ஓடி
    மெழுகாய் உருகி
    நீரில்லா மீனாய் தவித்து
    வாடிய பயிராகிறேன்
    வழக்கமான உன் உரையில்லாத போது.

    ஏக்கத்தை படம்பிடித்து காட்டிய வரிகள் .

    அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete