Thursday 25 October 2012

ஜாதிகள் இல்லையடி பாப்பா !



விதைப்பவனிங்கே கீழ்ஜாதியதை
உண்பவர் புவியில் மேலோராய்!

தட்டான் வேண்டும் தாலிதட்ட
தரையில் அவருக்கிருக்கை நீதி!

கைராசிக் காரனெனில் போட்டி
பணம் கொடுத்து உயிர்காக்க!

தன் வாழ்வுக்காய் போராடும்
ஜோதிடன் சொல்வது வேதம்!

நோய்வாய்ப்பட்ட கைகொடுப்பின்
காணிக்கை பணத்தில் தீதில்லை!

பூஜாரியுடுத்துமாடை நெய்தவனார்
கேள்வி கேட்டா உடுத்துகிறார்?

நெய்தவன் நேரில்வந்தால் விபூதி
கொடுக்கையில் கைபடினது தீட்டு!

ஜாதிகளில்லையடி சொன்னபாரதி
இன்றிருப்பினவனும் தீட்டென்பார்!

உடலழுக்கில் பழுதில்லையது உழைப்பு
உள்ளம் பழுதுபடின் சிறப்பில்லையதுதீமை!

ஆலாய்வாழ்ந்து விழுதேநாம் என்றெண்ணின்
ஜாதியுமில்லை மதமுமில்லை மனிதரிடை
உயர்வு தாழ்வென்றபொய் பேதமுமில்லை!

43 comments:

  1. உடலழுக்கில் பழுதில்லையது உழைப்பு
    உள்ளம் பழுதுபடின் சிறப்பில்லையதுதீமை!

    சிறப்பான வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகைக்கு நன்றிங்க.

      Delete
  2. உடம்பை கீறினா ரத்தம் எல்லோருக்கும் சிவப்பு நிறம்தான்... ஜாதிக்கு ஏத்த மாதிரி கலர் வேறாகவா தெரிகிறது. ஆனாலும் இதை உணர்ந்தவர் அனைவரும் ஜாதியை சொல்லித்தான் அலைகின்றனர்.. மனித குலம் அனைவரும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று நினைத்தாலே ஜாதியென்ன..மதமென்ன சகோ..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோ என் ஆதங்கம் தங்கள் வரிகளிலும்.

      Delete
  3. ஜாதிகள் இந்தியாவின் மனிதர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று... எங்கும் ஜாதி எதிலும் ஜாதி, பிறப்பிலும் இறப்பிலும் ஜாதி.. நல்ல கவிதை

    ReplyDelete
    Replies
    1. மாற்றம் வேண்டும் சகோ.

      Delete
  4. எங்கும் வெறும் மேடை முழக்கமே ... முகமூடியே !
    உண்மை உர[ரை]க்கக் கூறியிருப்பது நன்று !
    தொடர்க தீந்தமிழில் தென்றல் !

    ReplyDelete
    Replies
    1. முகமூடியை கிழித்தெரிய வேண்டும்.

      Delete
  5. ஜாதிகளும் தீண்டாமை கொடுமைகளும் இன்னும் அழியவில்லை. இன்னும் எங்கள் ஊரில் அதை பார்க்க முடிகிறது. எனக்கும் அந்த ஆதங்கம் எப்பவும் உண்டு. அருமையான பதிவு அக்கா! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமா சகோ எத்தனை ஆண்டுகள் கழித்து பிறந்த ஊர் சென்றாலும் அவர்கள் மாறாமல் அதே எண்ணங்களுடன் இருப்பது வருந்தவே செய்கிறது.

      Delete
  6. அருமையான பொருள் பொதிந்த கவிதை. மனிதரில் உயர்வு தாழ்வேதுமில்லை. நன்று.

    ReplyDelete
    Replies
    1. உணர்வோர் தான் யாருமில்லை.

      Delete
  7. அழகான கவிதை.
    அற்புதமான சிந்திக்க வைக்கும் பொருளுடன் கூடிய வரிகள்.
    மனமார்ந்த பாராட்டுக்கள்.
    அன்பான இனிய வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஆசி கிடைக்க நான் தான் நன்றி சொல்ல வேண்டும். நன்றி ஐயா.

      Delete
  8. நல்ல வரிகள்...
    அருமையாக முடித்துள்ளீர்கள் சகோதரி...

    நன்றி...
    tm4

    ReplyDelete
  9. வாழசிலர் கண்டவழியில்
    மேல்கீழ் ஜாதியாயுறவு
    நல்லகாலம் ஊமைஜாதி
    குருடரவர் வேறுஜாதி
    முடவரிதில் தனியினம்
    ஒன்பதென்பது அதுவேறு
    என்றியம்பாதவரையவர்
    பிழைத்தனர் அதுநன்று!
    குறைஎல்லோர்வீட்டிலும்
    இல்லாரைக் காணவில்லை!
    நிறைமனமுள்ளவராயுங்கள்
    பதைபதைப்பில் அன்புண்டு!
    கறைமாற எதைசெய்வதென
    புரியவிலலை தெரியவில்லை!
    பிறப்பிலெனை மேலென்றார்
    இறப்பில் நானும்பிணமன்றோ!
    கருத்தாய்க் கருத்துரைக்கும்
    கவி-கவிதை வெல்லட்டும்!

    ReplyDelete
    Replies
    1. தெளிவு படுத்தும் வரிகள் நன்றி.

      Delete
  10. ////////
    உடலழுக்கில் பழுதில்லையது உழைப்பு
    உள்ளம் பழுதுபடின் சிறப்பில்லையதுதீமை!
    /////////


    உண்மையான வார்த்தைகள்...

    ReplyDelete
  11. ஒழிக்கமுடியா ஒன்றில் முதலில்
    நிற்பதுவும் இந்த ஜாதி தானே...
    எத்தனை பேர் என்ன பேசினாலும்
    எப்படி பேசினாலும் கேட்டு முடித்தவுடன்
    ஜாதியின் பெயரை சொல்லி அல்லவா
    என்ன போகலாமா என்று கேட்கிறார்கள்...

    உலகமே அழிந்தாலும் அழிக்கமுடியாத
    மக்களின் மனத்தில்ஒன்றிவிட்ட ஒன்று இது..
    மாறவேண்டும் என்ற தங்களின் ஆதங்கம்
    பாராட்டவேண்டிய ஒன்று சசி கலா.. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தும் உண்மையே நன்றிங்க.

      Delete


  12. சாதி இல்லையென சொல்பவன் என்ன சாதி? நான்காம் சாதியாய் இருப்பவன் மட்டுமே இல்லையென சொல்ல முடியும்

    ReplyDelete
    Replies
    1. மனிதனாய் இருக்கட்டுமே.

      Delete
  13. // ஆலாய்வாழ்ந்து விழுதேநாம் என்றெண்ணின்
    ஜாதியுமில்லை மதமுமில்லை மனிதரிடை
    உயர்வு தாழ்வென்றபொய் பேதமுமில்லை! //

    உணர்ச்சி பிழம்பாய் ஒரு கவிதை.

    சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
    நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
    இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்
    பட்டாங்கில் உள்ள படி.
    - ஔவையார் ( நல்வழி – 2 )

    ReplyDelete
    Replies
    1. சாதி இரண்டொழிய வேறில்லை.

      தெளிவு படுத்தும் வரிகள் நன்றி ஐயா.

      Delete
  14. Best! Well written..!

    இந்தியா உலகத்திற்கு வழிகாட்டி! எப்படி? சுடுகாட்டிலும் ஜாதி!

    ReplyDelete
    Replies
    1. மக்களாகிய நாமே சிந்திக்க வேண்டும்.

      Delete
  15. அருமை அம்மா
    நீங்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்
    பெரியாரின் இளம் தொண்டர்

    ReplyDelete
  16. சமூக அவலமான சாதியை சாடும் கவிதை வரிகள்! அருமையான படைப்பு!

    ReplyDelete
  17. ஆலாய்வாழ்ந்து விழுதேநாம் என்றெண்ணின்
    ஜாதியுமில்லை மதமுமில்லை மனிதரிடை
    உயர்வு தாழ்வென்றபொய் பேதமுமில்லை!//

    அருமையாக முடித்துள்ளீர்கள்...

    ReplyDelete
  18. சிந்தனையைத் தூண்டும் பதிவு! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  19. பெண்களுக்கு ஏது ஜாதி...?
    ஆண்கள் மட்டும் தான் ஜாதி பேய்ப் பிடித்தவர்கள்.

    பாரதியும் கூட “ஜாதிகள் இல்லையடி பாப்பா“ என்றே பாடியுள்ளார்.
    ஏன் “ஜாதிகள் இல்லையடா தம்பி“ன்னு பாடலை....

    போங்க சசிகலா.

    ReplyDelete
  20. சிந்தனை வேகம் பிரமிக்க வைக்கிறது
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. ஜாதி ஒழிஞ்சிட்டா அரசியல் செய்ய முடியாதே?!

    ReplyDelete
  22. இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்று அவ்வை சொன்னதெல்லாம் காற்றில் பறந்து விட்டது சகோதரி! கவிதை ஆதங்கமல்ல; அறச்சீற்றம்!

    ReplyDelete
  23. ஏன் தான் இந்த நிலைமை இன்னுமோ.
    புகைப்படம் மனதினை கணக்கச் செய்துவிட்டது.....

    ReplyDelete
  24. சிறப்பான கவிதை சகோ. எப்போது தான் மாறுவார்களோ?

    ReplyDelete
  25. theendaamai..
    naattin-
    kodumai!

    ReplyDelete
  26. மாற்றங்கள் நிகழந்து கொண்டேதான் இருக்கின்றன. வேகம் தேவை...

    ReplyDelete
  27. இந்த தீட்டை கோயிலில், பக்கத்து வீட்டில் அனுபவித்தவன்.

    ஆனால் ஒன்று நால்வர்ணத்தில் ஒவ்வொரு வர்ணத்திலும் ஓர் ஒதுக்கீடு

    பிரமாண குலத்தில் வாத்தியார் தொழில் செய்வபவன், பிராமணன் வீட்டின் பின்புறம்தான் செல்ல வேண்டும்

    சூத்திரன், பஞ்சமனை அப்படிதான் நடத்துகிறான்

    இந்த அடுக்குகள் மாறுமா

    பெரியார்
    நாராயண குரு
    மகாத்மா பூலே

    ஆயினும்?........

    ReplyDelete