Wednesday 24 October 2012

எங்கெங்கு காணினும் !


எங்கெங்கு காணினும்
கல்விக் கூடமடா
மேதினியெங்குமே
 தரமிகுகல்வியில்லையடா!

இலவசமாயின் வாலாய் நீளும்
கூட்டமிங்கே பெருகுதடா
கல்வி இலவசமாயினும்
கற்க மனம் இல்லையடா!

கண்ணிருந்தும் அறிவின்றி
குருடர் ஆனோமடா
பெருமையென்றே கல்விக்கும்
 காசுகொடுக்கத் துணிந்தோமடா!

அம்மாவெனும் அழகுத்தமிழையும்
மம்மிடாடி என்றழைத்தே
மண்ணில் புதைத்தோமடா!

தாய்மொழியைத் தள்ளிவைத்தே
தறிகெட்டு அலைந்தோமடா
எம்முயிரே எம்தமிழே
எம்பிழையை பொறுப்பாயோ ?
எம்குலம் தழைத்திடவே
எம்முடனே இருப்பீரோ!

18 comments:

  1. தமிழ் கல்வியின் இன்றைய நிலையினை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்....

    ReplyDelete
  2. உண்மை நிலை வரிகளில் சீற்றமாக பொங்குகிறது...

    ReplyDelete
  3. என்று தணியுமிந்த மோகம்?
    நன்று சசிகலா.

    ReplyDelete
  4. கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது கவிதை .. உணரனுமே ,..

    ReplyDelete
  5. தரமிகுகல்வியில்லையடா!

    உண்மை காசு கொடுத்தாலும் கல்வி தரமில்லை என்ற ஆதங்கம் புரிகிறது

    ReplyDelete
  6. யாருமே ஒன்றும் செய்யமுடியாத
    உண்மையான வேதனையான நிகழ்வு...
    மனத்தளவில் எண்ணம் இருந்தாலும்
    இல்லாத கௌரவம் பார்த்தே
    ஆங்கில வழி பள்ளியில் சேர்த்து முடிந்தும்
    முடியாமலும் வேதனையோடு வாழ்ந்தே
    காலமும் சென்றுவிட்டது... நமக்கு நாமே
    போட்டுக்கொண்ட தூக்கு கயிறல்லவா...

    தனிப்பட்ட விழிப்புணர்வு தனியொரு மனிதனுக்கு
    இருந்தால் ஒழிய இந்த முறையை மாற்றவே முடியாது....
    அம்மா உயிரோடு இருக்கும்போதே மம்மி ஆகவேண்டியதுதான்...
    அம்மாவை காப்பாற்றும் பொறுப்பு நம்முடையது அல்லவா...
    பாராட்டுக்கள் சசி கலா...தங்களுக்கு.

    ReplyDelete
  7. தமிழில் கற்றலின் அவசியத்தையும். தமிழைக் காதலிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஆணி அறைவது போல் அருமையாகச் சொல்லியிருக்கும இந்தக் கவிதை உங்கள் மகுடத்தில் மற்றுமொரு வைரம் தென்றல். நன்று.

    ReplyDelete
  8. தமிழ் வழி கல்வி வழக்கொழிந்து வரும் வேளையில் நல்லதொரு சவுக்கடி கவிதை! சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. "..தாய்மொழியைத் தள்ளிவைத்தே
    தறிகெட்டு அலை..."
    நன்றாய் நறுக்காய் சொன்னீர்கள்

    ReplyDelete
  10. நீங்கள் அடிக்க வரு முன்...அழகாய் ஒரு சவுக்கடி கொடுத்துள்ளீர்கள்...

    ReplyDelete
  11. //அம்மாவெனும் அழகுத்தமிழையும்
    மம்மிடாடி என்றழைத்தே
    மண்ணில் புதைத்தோமடா!//

    ஆதங்கம் தான் எனக்கும்...

    ReplyDelete
  12. வியாபாரமயமாக்கப்பட்ட கல்வியும், தமிழ்மொழியின் நிலையும் அதன் முக்கியத்துவத்தை நாம் இழந்து தவிக்கும் நிலையையும் மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் அக்கா! முதல் மூன்று வரிகள் படிக்கும்போது தரமிகு கல்வி என்று சொல்லிவிடுவீர்களோ என்று நினைத்தேன்!!!! நிலை அப்படி ஆகிவிட்டது.

    //

    எங்கெங்கு காணினும்
    கல்விக் கூடமடா
    மேதினியெங்குமே
    தரமிகுகல்வியில்லையடா!

    //

    மேலும் ஈரோடு மாவட்ட கலக்டர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்திருப்பதாக கேள்விப்பட்டேன். உண்மையா என்று தெரியவில்லை. இருப்பினும் நல்ல முயற்சி!

    ReplyDelete
    Replies
    1. கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு சகோ. சக மனிதர்களிடமும் இந்நிலை வர வேண்டும்.

      Delete